இருபதாம் நூற்றாண்டு தீர்க்கதரிசி 53-08-00 அப்போஸ்தலர்களின் காலம் முதற்கொண்டு தோன்றின ஒவ்வொரு சந்ததியிலுமிருந்த கிறிஸ்தவ விசுவாசிகள் இயேசு மத். 24:34ல் "இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாது" என்று உரைத்த சொற்கள் தங்கள் சந்ததிக்குரியது என்று எண்ணினது உண்மை என்பதில் ஐயமில்லை. கிறிஸ்துவின் வருகையைக் குறித்த சுத்திகரிக்கும் நம்பிக்கை ஒவ்வொரு சந்ததியிலும் இருந்திருக்க வேண்டியது அவசியமே. ஆயினும் அவருடைய உண்மையான வருகை கடைசி சந்ததியில் மட்டுமே நிகழும். கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர், தற்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பது கடைசி காலச்சந்ததி என்று கருதுகின்றனர். கிறிஸ்துவின் வருகைக்கு முற்றிலும் அவசியமான குறிப்பிட்ட சில வரலாற்றுப் பூர்வமான நிகழ்ச்சிகள் அண்மையில் நிகழ்ந்து விட்டன என்னும் உண்மையை ஆதாரமாகக் கொண்டே இக்கருத்து நிலவி வருகின்றது. அவருடைய வருகையை அறிவிக்கும் எந்த ஒரு முக்கியமான தீர்க்கதரிசன நிகழ்ச்சியும் தற்பொழுது நடந்து கொண்டிராமல் இருக்கவில்லை. ஒரே ஒரு காரியம் மட்டும் விடப்பட்டுள்ளது. அதாவது, நோவாவின் காலத்தில் அவன் பேழைக்குள் பிரவேசித்த பிறகு, ஜலப்பிரளயம் வர ஏழு நாள் தாமதித்த விதமாக, இப்பொழுது நாம் பெருமூச்சுடன் அமைதியாக அது நிகழக் காத்துக் கொண்டிருக்கிறோம். தேவனுடைய திட்டத்தில் அமைந்திருந்த எந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கும் அது நடப்பதற்கு முன்பு ஒரு சாட்சி இராமல் இருந்ததில்லை. ஜலப்பிரளயத்தின் காலத்தில், பேழை கண்ணுக்கு சாட்சியாக அமைந்திருக்க, தீர்க்கதரிசியாகிய நோவா தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்தான். இஸ்ரவேல் ஜனங்களின் புறப்பாட்டின் போது, தேவன் மோசேயை அற்புதங்களுடனும் அடையாளங்களுடனும் வார்த்தையுடனும் அனுப்பினார். இயேசுவின் முதலாம் வருகையின் போது, வார்த்தையுடன் ஒரு வல்லமையான தீர்க்கதரிசி தோன்றினான். இந்தக் கடைசி நாட்களிலும் கூட, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பு ஒரு முன்னோடி வருவாரென்று நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறு புத்தகம் அந்த நிகழ்ச்சிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தவும், தம்முடைய ஜனங்களை தம்மிடம் சேர்த்துக் கொள்வதற்கென கர்த்தர் திரும்பவரும் நிகழ்ச்சிக்கு முன்னோடியாய் வருகின்ற அந்த தூதன் -தீர்க்கதரிசியை உங்களுக்கு அறிமுகப்படுத்தவுமே இப்பொழுது எழுதப்பட்டுள்ளது. வேத வரலாற்றில் எந்த ஒரு காலத்திலுமே, வரவிருந்த மகத்தான நிகழ்ச்சிகளின் தொடர்பாக தேவன் அனுப்பின சாட்சிகளை ஜனங்கள் ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருந்ததாகவும் அவர்களுக்கு செவி கொடுக்க சித்தமுள்ளவர்களாய் இருந்ததாகவும் சான்றுகள் எதுவும் இல்லாததால், தேவன், அவருடைய வருகைக்கு அத்தாட்சியாக நமக்கு ஏற்கனவே தந்துள்ள சாட்சியைக் குறித்து வெகு சிலரே தற்பொழுது அறிந்திருப்பார்கள் என்று கருதப்படுகின்றது. ஆனால் இந்த கட்டுரையைப் படிக்கும் வாசகர் ஒவ்வொருவரும் இதன் பொருளடக்கத்தைக் குறித்து சற்று சிந்தித்து, இந்த ஆபத்தான காலத்தில் தேவனுடைய வழிநடத்துதலுக்காக அவரை வேண்டிக் கொள்வாரென்று நம்புகிறோம். வரலாறுப்பூர்வமாக சபை காலங்களை நிர்ணயித்தல் 1. புறஜாதிகள் இரட்சிக்கப்படுவதற்கென அவர்களுடன் உண்மையாக ஈடுபட தேவன் ஒரு குறிப்பிட்ட காலத்தை நியமித்துள்ளார் என்றும், அந்த காலத்தில் அவர் தமது நாமத்திற்கென ஒரு ஜனத்தை அழைக்கிறார் என்றும் வேதம் மிகத்தெளிவாக அறிவிக்கிறது. இதைச் செய்வதற்கென அவர் தமது கவனத்தை இஸ்ரவேல் தேசத்திலிருந்து திருப்பி, ஒவ்வொரு ஜாதியிலும் பாஷைக்காரரிலும் தேசத்திலும் முன்னறிந்தவர்களை அவர் தனிப்பட்ட நபர்களாக மனந்திரும்பும்படி அழைக்கிறார். மேற்கூறிய விவரங்கள் முற்றிலும் பிழையற்றவை. அப் 11:18, "அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார். அப் 13:46, "முதலாவது உங்களுக்கே தேவ வசனத்தைச் சொல்ல வேண்டியதாயிருந்தது; (யூதர்களாகிய) நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்". அப். 15:13-18, "சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள். தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத்தெரிந்து கொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே. அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது. எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு, நான் இதற்குப் பின்பு திரும்பி வந்து, விழுந்து போன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப் போன வைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ்செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. உலகத்தோற்ற முதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது". 2. புறஜாதிகளிலிருந்து தேவன் ஒரு ஜனத்தை அழைக்கும் காலம் "புறஜாதியாரின் நிறைவு" எனப்படுகிறது. ரோமர் 11:25, "மேலும், சகோதரரே, நீங்கள் உங்களை புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும் வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்". தெரிந்து கொள்ளப்பட்ட கடைசி நபர் உள்ளே கொண்டு வரப்பட்டவுடன் அது முடிவடையும். ரோமர் 11: 7-12, "அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையதினம் வரைக்கும் கடினப் பட்டிருக்கிறார்கள். கன நித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது; காணாதபடிக்கு அவர்களுடைய கண்கள் அந்தகாரப்படக்கடவது; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று தாவீதும் சொல்லியிருக்கிறான். இப்படியிருக்க, விழுந்து போகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது. அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்". "புறஜாதியாரின் நிறைவு" என்பது, நன்கறியப்பட்டதும், இப்பொழுது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறதுமான "புறஜாதியாரின் காலம்" என்பதின் ஒரு பெரும்பகுதியாகும். லூக். 21:24, "பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப் போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். இவ்விரண்டு காலங்களும் ஒரே நேரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். ஆனால் ஒன்று அரசியல் சம்பந்தப்பட்டது, மற்றது மறைபொருளாக ஆவிக்குரியது. "புறஜாதியாரின் காலம்" என்பது இஸ்ரவேலின் மேல் புறஜாதியார் ஆதிக்கம் செலுத்தினஅரசியல் காலத்தை குறிப்பிடுகின்றது. நெபுகாத்நேச்சார் இஸ்ரவேலரை சிறைபிடித்து சென்றபோது, அது தொடங்கி, தேவன் இஸ்ரவேலருக்கு உலக ஆதிக்கத்தை திரும்ப அளிக்கும்போது, அது முடிவடையும். சகரியா 12:4-10, “அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின் மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்தி மயக்கத்தையும் வரப்பண்ணி, யூதா வம்சத்தின் மேல் என் கண்களைத் திறந்து வைத்து, ஜனங்களுடைய எல்லா குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டு பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எருசலேமின் குடிகள், சேனைகளின் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள். அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஓப்பாக்குவேன்; அவர்கள் வலது புறமும் இடது புறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப் பட்டிருக்கும். தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின் மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் யூதாவின் கூடாரங்களை முதல் முதல் இரட்சிப்பார். அந்த நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப் போல இருப்பான்; தாவீதின் குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப் போலும் காத்தருடைய தூதனைப் போலும் இருப்பார்கள். அந்த நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப்பார்ப்பேன். நான் தாவீது குடும்பத்தாரின் மேலும் எருசலேம் குடிகளின் மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறது போல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறது போல எனக்காக மனங்கசந்து தூக்கிப்பார்கள். இந்த திரும்ப அளிக்கப்படுதல் ஆயிரம் வருட அரசாட்சிக்கு வழிகோலுகின்றது. புறஜாதியாரின் நிறைவு என்பது புறஜாதியாரின் ஆவிக்குரிய சகாப்தம், இதில் இஸ்ரவேல் ஜனங்கள் குருடாக்கப்பட்டு வெளிச்சம் புறஜாதியாருக்கு தோன்றுகிறது என்று நாம் கண்டோம். கிறிஸ்து தமது புறஜாதி மணவாட்டிக்காக வரும் போது இது முடிவடையும் 3. பவுல் ரோமர் நிரூபத்தில் குறிப்பிடும் புறஜாதியாரின் நிறைவு என்பது சபை காலங்கள் என்று வெளிப்படுத்தின விசேஷத்தில அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறது. இவையிரண்டும் ஒன்றே. அதற்கான அத்தாட்சி வெளிப்படுத்தின விசேஷம் இரண்டாம் மூன்றாம் அதிகாரங்களில் காணப்படுகின்றது. அந்த அதிகாரங்களில் ஆவியானவர் ஆசியா மைனரிலிருந்த ஏழு சபைகளின் தூதர்களிடம் பேசுகிறார். அவர் எபேசு சபையின் தூதனில் துவங்கி, லவோதிக்கேயா சபையின் தூதனில் முடிக்கிறார். இவையனைத்தும் புறஜாதி சபைகள். ஆவியானவர் எருசலேமிலிருந்த யூதசபையுடன் ஒருமுறைகூட பேசவில்லை. அவர் புறஜாதி, இஸ்ரவேல் சபைகள் ஆகிய இரு சபைகளுக்கும் இதை அறிவித்திருந்தால், அவர் எருசலேமிலுள்ள சபையுடன் அவசியம் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்விதம் செய்யவில்லை. மூல சபை குழு விடப்பட்டு விட்டது. அது அப்படித்தான் இருக்க வேண்டும். தேவன் யூதர்களுடன் ஈடுபடுவதை விட்டு விட்டார். ஒரு சில யூதர்கள், தெரிந்து கொள்ளப்படுதலின் காரணமாக உள்ளே வருவார்கள், ஆனால் அநேகர் அல்ல. இவர்கள் புறஜாதி சகாப்தத்தில் சேர்ந்தவர்களாயிருப்பார்கள். முன் கூறியது யோசேப்பு எகிப்தில் தன் சகோதரரை சந்திக்கும் எடுத்துக்காட்டுடன் பிழையின்றி பொருந்துவதைப் பாருங்கள். யோசேப்பு (இயேசு கிறிஸ்துவுக்கு பரிபூரண முன்னடையாளமாயிருந்தவன்) தன் சகோதரரால் புறக்கணிக்கப்பட்டான். எகிப்தில் அவர்கள் அவனுக்கு முன்பாக நிற்கின்றனர். அவர்கள் மிகவும் பயந்திருந்தனர். ஆனால் அவனோ அன்புடன் அவர்களை வரவேற்கிறான். எனினும் யோசேப்பின் புறஜாதி மனைவி, அவனுடைய சகோதரர்கள் அவனைச் சந்தித்த போது அங்கு இருக்கவில்லை. அவள் அரண்மனையில் மறைக்கப்பட்டிருந்தாள். கிறிஸ்துவும் தமது சகோதரருக்கு முன்பாக வரும்போது, அவ்வாறே இருக்கும். அவர்கள் அவருடைய காயங்களைக் கண்டு பயத்தால் நிறைவார்கள். அவரோ அவர்களை அன்புடன் நடத்துவார். ஆனால் புறஜாதி மனைவி அவருடன் கூட அப்பொழுது இருக்க மாட்டாள். அவள் அப்பொழுது அரண்மனையில் இருப்பாள், ஏனெனில் புறஜாதியாருடன் தேவன் ஈடுபட்ட நாள் அப்பொழுது முடிவடைந்திருக்கும். 4. சபை காலங்கள் தொடங்கின ஆண்டுகள், அவை எவ்வளவு காலம் நீடித்தன, அந்தந்த காலங்களின் தூதர்கள், இன்னும் மற்ற பொருத்தமான காரியங்களை நிர்ணயித்தல் என்பது எளிதான அல்லது சாதாரணமான ஒரு செயல் அல்ல. அவ்விதம் தன்னிச்சையாக அதிகாரத்தை வகித்துக் கொள்ள துணிச்சல் கொண்டவன் யார்? இதை எழுதியவர் நிச்சயமாக அதை செய்யத்துணியமாட்டார். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட இணைப்பு இந்த பணியை மிகவும் பயனுள்ள விதத்தில் நிறைவேற்றும் என்பதை வேத மாணாக்கர் எவருமே அறிவர். அது வரலாற்றைக் குறித்த வேத ஆராய்ச்சியையும் தெய்வீக வெளிப்பாட்டையும் இணைப்பதனால் ஏற்படும் ஒன்றாகும். சில குறிப்பிட்ட காலங்கள் வரலாற்றில் கடந்து விட்டன என்பது எவருமே மறுக்கமுடியாத உண்மையாகும். ஆனால் கிறிஸ்து இன்னும் தம்முடைய மணவாட்டியை வீட்டுக்குக் கொண்டு செல்லாததனால், இன்னும் உள்ள காலங்களில் ஒன்றில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது ருசுவாகிறது. கடந்து போன காலங்கள் எவையென்பதை வேதத்தைப் படித்து அதை வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் ருசுப்படுத்தலாம். இந்த முறையைக் கையாண்டுதான் தானியேலின் தீர்க்கதரிசனங்களுடன் சம்பந்தப்பட்டவைகளை நாம் ஆராய்ந்து அறிந்து கொண்டோம்). தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் காலமும் அதன் தன்மைகளும் தெய்வீக வெளிப்பாட்டினால் வெளிப்படுத்தப்படும். சபை எங்குள்ளது என்பதை திட்டவட்டமாய் அறிந்து கொள்ள இது அவசியமாகும். சபையின் அனைத்துமே வரலாற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாயிருக்குமானால், சபைக்கு உதவி கிடைக்குமென்று எவருமே எதிர்பார்க்க முடியாது. அதற்கு என்ன நேரிட்டுக் கொண்டிருக்கிறதென்று அதற்கு தெரியாது. எனவே, வரலாறு, வேத வாக்கியங்கள், தெய்வீக வெளிப்பாடு இவைகளை பரிபூரணமாக இணைப்பதன் மூலமே ஏழு சபை காலங்களைக் குறித்த சத்தியத்தை நாம் உறுதியாக அறிந்து கொள்ள முடியும். இந்த நேரத்தில், வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, இக்காலத்துக்குரிய வேதவாக்கியங்களை வெளிப்படுத்தவும். சபை இதை அறிந்து கொண்டு தேவனுடைய முழு ஆலோசனையையும் நிறைவேற்றவும் தேவன் தமது தீர்க்கதரிசியை அனுப்ப வேண்டுமென்று நாம் அவரிடம் முறையிடுவதே நாம் கடைபிடிக்க வேண்டிய வழியாகும். 5. முதலாவதாக, முதலாம் சபை எதுவென்றும் அதன் தூதன் யாரென்றும் நமக்கு வேதத்திலிருந்து மிகவும் உறுதியாகத் தெரியும். அது எபேசு சபை காலம், அதன் தூதன் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனான பவுல். பவுலின் மூலமாகவே புறஜாதிகளுக்கு தேவனிடமிருந்து முழு வெளிப்பாடும் கிடைத்தது. பேதுருவுக்கும் மற்ற அப்போஸ்தலருக்கும் புறஜாதிகளுக்கென்று கிடைத்த வெளிப்பாட்டைக் காட்டிலும் பவுலுக்கு மிக அதிகமான வெளிப்பாடு கிடைத்தது. கலா . 2:6-8. "அல்லாமலும் எண்ணிக்கையுள்ளவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை ...... அதுவுமல்லாமல், விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத்தினபடியால், விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்கு கையளிக்கப்பட்டது போல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும் படி அது எனக்குக் கையளிக்கப்பட்டது. பவுல் எபேசு சபை காலத்தின் தூதனாகவும் எபேசுவில் இருந்த சபைக்கு மேய்ப்பனாகவும் இருந்தான். அந்த சபையை அவன் நிறுவி, அதைப் பேணிப் பாதுகாத்தான். இந்த காலம் எந்த ஆண்டில் முடிவுற்றது என்று நாம் குறிப்பாக கூறமுடியாது. சரியான ஆண்டைக் கூற வேண்டுமென்ற அவசியம் கிடையாது, ஏனெனில் சபை காலங்கள் தேவனுடைய மற்ற சகாப்தங்களைப் போல் ஒன்றின் மேல் ஒன்று படிகின்றது (overlap). ஆனால் எபேசு சபை காலம் நீண்ட காலம் நீடிக்கவில்லை, ஏனெனில் அவிசுவாசத்தின் காரணமாக தேவனுடைய வல்லமை தொடக்க ஆண்டுகளிலும் கூட தணிந்து போனது. வல்லமை குறைந்து போனதை கணக்கில் கொண்டால் இந்த காலம் ஏறக்குறைய கி.பி. 170ம் ஆண்டுக்குப் பிறகு நீடிக்கவில்லை. வேத வாக்கியங்களையும் வரலாறுகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் நாம் சபை காலங்களை தொடர்ந்து நிர்ணயிக்கும் பணியில், இப்பொழுது வெளி.3:1-ஐப் படியுங்கள். இது ஐந்தாம் சபை காலமாகிய சர்தை சபைக்கு உரைக்கப்படுகின்றது. இதன் விடை 2ம் வசனத்தில் காணப்படுகிறது. "நீ விழித்துக் கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து. இருளின் காலங்களில் பெலன் இருக்கவில்லை. மிகச்சிறிய ஒரு மந்தையைத் தவிர - அதுவும் கூட அதிகம் சிதறடிக்கப்பட்டிருந்தது - உண்மையான கிறிஸ்தவ மார்க்கத்தின் உறுதியான அத்தாட்சி காணப்பட வில்லை. ஆனால் இப்பொழுது லூத்தர் தோன்றி நீதிமானாக்கப்படுதல் என்னும் போதனையை வெற்றிகரமாக பராமரித்து வருகிறார். அப்பொழுது வெளிச்சம் ஜொலிக்கத் தொடங்குகின்றது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் முதன்முறையாக பெலன் காண்பிக்கப்பட்டு, இது சீர்திருத்தக் காலம் என்றும், அதன் தூதன் எவ்வித சந்தேகமுமின்றி லூத்தர் என்றும் திட்டவட்டமாக எடுத்துரைக்கிறது. சாயர் (sauer) என்பவர் எழுதின வரலாற்றில் அவரைக் குறித்து இவ்விதம் கூறப்படுகின்றது. "டாக்டர் மார்டின் லூத்தர் ஒரு தீர்க்கதரிசி. சுவிசேஷகர், அந்நிய பாஷையில் பேசுபவர். அதற்கு அர்த்தம் உரைப்பவர். இவர் இவ்வனைத்தையும் தம்மில் ஒருங்கே கொண்டவராய், ஆவியின் வரங்கள் அனைத்தையும் உடையவராயிருந்தார். இந்த காலம் கி.பி. 1550 முதல் ஏறக்குறைய 1750 வரைக்கும் நீடித்ததாக நன்கு அறிவோம். 6. ஐந்தாம் சபை காலத்தை நாம் நிர்ணயித்த பிறகு, நாம் தொடர்ந்து சென்று ஆறாம் சபை காலமாகிய பிலதெல்பியா சபை காலத்தை நிர்ணயிப்பது கடினமல்ல. வெளி 3:7-13ல் உரைக்கப்பட்டுள்ள சகோதர சிநேகம் கொண்ட இந்த பொன்னான காலத்தின் தூதன் எவ்வித சந்தேகமுமின்றி வெஸ்லியே. இது திறந்த வாசலின் காலம் - மிஷன் ஊழியங்கள், மகத்தான போதகர்கள், பிரம்மாண்டமான எழுப்புதல்கள், ஐந்தாம் சபை காலத்தைக் காட்டிலும் இக்காலத்தில் பரிசுத்த ஆவியானவர் அதிகமாக வெளிப்பட்டார். தேவன் உண்மையில் வெளிச்சத்தையும், ஜீவனையும். ஆசீர்வாதத்தையும் அருளினார். இந்த காலம் ஏறக்குறைய கி.பி. 1750 முதல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரைக்கும் நீடித்தது. ஏழாம் சபை காலத்தை பின்னே பார்க்கலாம் என்று இப்பொழுது அதைவிட்டு, நாம் பின் நோக்கிச் செல்வோமானால், நான்காம் சபை காலத்தை நிர்ணயிப்பது நிச்சயம் ஒரு எளிதான செயலாகும். இந்த சபை காலம் வெளி. 2:18-29ல் காணப்படுகிறது. இது சாத்தானின் ஆழங்களை அறிந்த காலம் (24ம் வசனம்). இது வரைக்கும் இருந்த காலங்களில் இதுவே மிகவும் அந்தகாரமான காலம் - சிறிது வார்த்தை - சிறிது வல்லமை. மனிதன் தேவனுடைய ஸ்தானத்தையும் அதிகாரத்தையும் அபகரித்துக் கொண்டான். ரோமாபுரியின் பேராசை எண்ணிக்கையற்ற ஆத்துமாக்களை ஆக்கினைக்குட்படுத்தினது. தேவனுடைய நாமத்தைக் கொண்டே அவர்கள் அந்த நாமத்தையும் தேவனுடைய வசனத்தையும் தூஷித்தனர். இந்த காலம் ஏறக்குறைய ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத் திலிருந்து பதினாறாம் நூற்றாண்டின் நடுவரைக்கும் நீடித்தது. அது தியத்தீரா சபை காலம், அதன் தூதன் கொலம்பா என்று பிரகடனம் செய்யப்படுகிறது. ஏனெனில், அவர், முதலாம் நூற்றாண்டின் விசுவாசிகளில் காணப்பட்ட தேவனுடைய வல்லமைக்கும் மகிமைக்கும் ஒத்தவைகளை தமது வாழ்க்கையில் வெளிப்படுத்தினார். அதுவே தூதனை நிர்ணயிப்பதன் அடிப்படையாய் எப்பொழுதும் அமைகின்றது. 7. நாம் எளிதாக நிர்ணயிக்கக்கூடிய அடுத்த காலம் மூன்றாம் சபை காலமாகும். வெளி. 2:12-17 பெர்கமு சபையின் தூதனுக்கு உரைக்கப்படுகின்றது. பெர்கமுவில்தான் சாத்தானின் சிங்காசனம் உள்ளது. அப்பொழுதுதான் சாத்தானின் சொந்த மார்க்கம் (ஆதி காலத்து பாபிலோனிய மார்க்கம்) முன்னிலையை அடைந்தது. காயீனின் காலம் முதற்கொண்டு தேவனுடைய வார்த்தைக்கு எதிராக அமைந்திருந்த இந்த மார்க்கம், இப்பொழுது நிசாயா ஆலோசனை சங்கத்துக்குப் பிறகு, பெயர் கிறிஸ்தவ சபையைப் படையெடுத்து, அஞ்ஞான வழிபாடுகள். விடுமுறைகள், இன்னும் மற்றவைகளை உள்ளே நுழைக்கிறது. இதன் காலத்தை நிர்ணயிப்பதில் பிரச்சினை எதுவுமில்லை. ஏனெனில் இது கி.பி.325ல் நிகழ்ந்த நிசாயா ஆலோசனை சங்கத்தின் பின் விளைவும், இருளின் காலங்களுக்கு முன்னால் இருந்த ஒரு காலமாகும். இந்த துரோகத்தை தொடர்ந்து இருளின் காலங்கள் வருவது அவசியமாகும். இந்த காலம் நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நீடித்தது. நாம் வெவ்வேறு விசுவாசிகளை சோதித்துப் பார்த்து தூதனை நிர்ணயிக்கும் அதே அடிப்படையில், இதன் தூதன் சந்தேகமின்றி மார்டின் எனலாம். இவ்விதம் கழிக்கும் முறையைக் கையாண்டு வருகையில், வெளி. 2:8-11ல் உரைக்கப்பட்டுள்ள சிமிர்னா சபையின் காலம் என்றழைக்கப்படும் இரண்டாம் சபையின் காலம் கி.பி. 200 முதல் 300 வரை நீடித்ததென்று எளிதாகக் காணலாம். ஐரேனியஸ் என்பவரை விட சத்தியத்தை அதிகத்திறனோடு பாதுகாத்து, தேவனை அதிக உறுதியாய் விசுவாசித்து, தேவனுடைய ஆவியை அதிகமாக வெளிப்படுத்தின எவருமே இக்காலத்தில் இல்லை. அவர் இந்த காலத்து தூதனாக இருக்க மிகவும் தகுதி வாய்ந்தவர். 8. முடிவில் இது. நாம் கடைசியாக பார்க்கலாம் என்று ஒதுக்கி வைத்திருந்த காலத்துக்கு நம்மைக் கொண்டு வருகிறது. இது உறுதியாக கடைசி சபை காலமே. வேதாகமத்தில் உரைக்கப்பட்டுள்ள வண்ணமாக, இந்த காலமும் ஒரு தூதனை நமக்குக் கொண்டு வருகிறது. இப்பொழுது நாம் லவோதிக்கேயா சபை காலத்தில் இருக்கிறோம் என்பது மறுக்க முடியாதது. இந்தக் காலத்தின் முடிவில் தான் இஸ்ரவேல் ஒரு நாடாகி, புறஜாதிகளால் ஒரு போதும் மிதிக்கப்படாமலிருக்கும். இன்றைக்கு இஸ்ரவேல் ஒரு நாடாகிவிட்டது. அதற்கு சொந்த அரசாங்கமும், முழுமை பெற்ற ஒரு நாட்டுக்கு பொருத்தமான அனைத்தும் உள்ளது. புறஜாதியாரின் காலம் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. எனவே புறஜாதியாரின் நிறைவும் ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. தேவனுடைய கடிகாரத்தில் மணவாளன் வருகின்ற புறஜாதியாரின் நள்ளிரவு மணி அடித்து விட்டது. இது லவோதிக்கேயா சபை காலம். இந்தக்காலம் முடிவடைவதற்கு முன்பு, தேவனுடைய வார்த்தையின்படி, இந்தக் காலத்துக்கு ஒரு தூதனும் ஒரு செய்தியும் இருந்தாக வேண்டும். 9. ஏழு சபை காலங்கள் சற்று சுருக்கமாகவே இங்கு குறிப்பிடப்பட்டது. இனி வெளிவரவிருக்கும் ஏழு சபை காலங்கள் புத்தகம் இந்த முழு பொருளின் பேரிலும் மிக அதிகமான விவரங்களைக் கொண்டதாயிருக்கும். இருப்பினும், இங்கு நமது பொருள் தூதனேயன்றி சபை காலங்கள் அல்லாததால், நமது பொருளுக்கு அடிகோலும் வகையில், காலங்களைக் குறித்த ஒரு சிறு நிரூபணத்தை இங்கு நாங்கள் நிலை படுத்துகிறோம். வேதப்பூர்வமான ஒரு தூதன் 10. முதலாம் சபையின் தூதன் யாரென்று நமக்கு உறுதியாகத் தெரியும் என்று கவனமுள்ள ஒரு வேதமாணாக்கன் ஒப்புக்கொள்ள வேண்டும். அது பவுல். அவன் வார்த்தையை தேவனிடத்திலிருந்து நேரடியாகப் பெற்று அதை ஜனங்களுக்குக் கொண்டு வந்த தீர்க்கதரிசி. அவன் ஒரு அப்போஸ்தலன், ஏனெனில் அவன் தேவனுடைய வார்த்தையை ஜனங்களிடம் கொண்டு சென்றவன், அதுவே அவனுடைய உறுதிப்படுத்துதல். கலா 1:12, "நான் அதை (வார்த்தையை) மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். அவன் தன்னை 'அப்போஸ்தலன் அல்லது 'அனுப்பப்பட்டவன் என்று தொடர்ந்து அழைத்துக்கொண்டான். வரலாற்றைப் படிக்காமல், உண்மையில் சபை காலங்களின் தூதர்கள் யாரென்பதை வேதப்பிரகாரமாக மட்டும் நிர்ணயிப்பது கூடாத காரியம் என்பதை நாம் கண்டோம். ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள். லவோதிக்கேயா சபையின் தூதன் யாரென்பதை நமக்கு சாடையாகக் காட்டும் மறைபொருளான ஒரு பகுதி வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் உள்ளது. முதலாம் சபையின் தூதன் யாரென்பதை தேவன் நமக்குத் திட்டவட்டமாக அறிவித்தது போலவே, கடைசி காலத்தின் தூதன் யாரென்பதையும் நமக்குத் திட்டவட்டமாக அறிவிக்கக்கூடும், அவர் அறிவிக்கவும் செய்வார். பவுல் ஆவியில் செய்த பிழையற்ற ஊழியத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டான். 1 கொரி.2:1-5, "சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப் பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும், என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது. எனவே, கடைசி காலத்தில், தேவன் உரைக்கும் இந்த தூதன் பவுலைப் போன்றே வசனத்தினாலும் வல்லமையினாலும் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு ஊழியத்தைக் கொண்டவராயிருக்க வேண்டும், இல்லையேல் அவரை நாம் அறிந்து கொள்ள இயலாது. 11. இந்த தூதன் வெளி. 10:6ல் உரைக்கப்படுகிறார். "தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிற போது தேவரகசியம் நிறைவேறும். இந்த வசனம், ஒரு பரலோகத் தூதன் எக்காளம் ஊதுகிறதை குறிப்பிடாமல், லவோதிக்கேயா காலத்து சபையின் தூதன் (ஒரு மனிதன்) தேவனுடைய வார்த்தையை நமக்கு அறிவிப்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இதற்கான அத்தாட்சி வெளி.9:13லும், வெளி. 11:15லும் அபரிமிதமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேற் கூறிய வசனங்களில் எக்காளம் ஊதும் இரண்டு பரலோகத் தூதர்கள் உள்ளனர். "ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி எக்காளம் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி." "ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின ...... என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின. ஆறாம் தூதன் ஊதின எக்காளத்துடன் பயங்கரமான ஆபத்துகள் பூமியின் மேல் நியாயத்தீர்ப்பில் வருகின்றன. ஏழாம் எக்காளத்தின் போது கிறிஸ்து தமக்கு உரிமையுள்ள ராஜ்யத்தை எடுத்துக் கொள்கிறார் என்பதைக் கவனியுங்கள். ஆனால் வெளி. 10:6ல் உள்ள தூதன் இப்பொழும் ஊதிக்கொண்டிருக்கிறார், அவர் உண்டாக்கும் எக்காளத்தொனி தேவரகசியங்களை சபைக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது. மேலும் கவனியுங்கள், வெளி. 10:1-5ல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு சிங்காசனத்தை எடுத்துக் கொள்ளவில்லை, அவர் பூமியின் மேல் நின்றுகொண்டு, தம் தலை வானத்தில் உள்ளதாக அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. "பின்பு பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின் மேல் வானவில்லிருந்தது. அவனுடைய முகம் சூரியனைப் போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப் போலவும் இருந்தது. திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது. தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின் மேலும், தன் இடது பாதத்தைப் பூமியின் மேலும் வைத்து, சிங்கம் கெர்ச்சிக்கிறது போல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்த போது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கின போது நான் எழுத வேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரை போடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன். சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன் தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி." இதை தான் ஸ்தேவான் அப்.7:47-51ல் உரைத்தான். "சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள். நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது; இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வணங்காக்கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப் போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள். இது இயேசு இன்னும் தமது சபையை பூமியில் கட்டிக் கொண்டிருக்கும் காட்சியாகும். ஸ்தேவான் அதைதான் கூறினான், அது இயேசு தமது தலை வானத்தில் இருந்து கொண்டு (சிங்காசனம்) பூமியில் (பாதபடி) நிற்பதாக சித்தரிக்கப்படும் காட்சியாகும். செய்தியானது இன்னும் சென்று கொண்டிருக்கிறது என்றாலும், இது கடைசி நாட்கள். இனி காலம் செல்லாது. ஆயினும், அவர் இப்பொழுதும் தமது ஜனங்களை தம்மிடம் அழைத்துக் கொண்டிருக்கிறார், ஆனால் அது நீண்ட காலமாக இருக்காது. ஆம், இது நமக்குத் தெளிவாகக் காண்பிப்பது என்னவெனில், ஏழாம் தூதன் என்று நாம் அழைப்பவர், ஒரு ஆவி அல்ல, அவர் ஒரு மனிதன். அவர் பூமியிலுள்ள ஒரு தூதன். அவர் ஏழாம் தூதனான கடைசி தூதனானதலால், அவர் லவோதிக்கேயா காலத்துதூதன். எபேசியர் தங்கள் தூதனான பவுலுக்கு கவனமாக செவி கொடுத்தது போல், நாமும் நிச்சயமாக அவரை அறிந்து கொண்டு அவருக்குச் செவி கொடுப்போம். 12. இந்த தூதன் யாரென்று நாம் தேடிக்கண்டு பிடிக்கத் தொடங்க வேண்டும். அதை செய்வதற்கு ஒரு வழி மட்டுமே உண்டு. நாம் வேதத்தை ஆராய்ந்து பார்த்து, தேவனுடைய வசனம் அவரிடம் என்ன தகுதி எதிர்பார்க்கிறது என்பதைக்காண வேண்டும். அப்படிப்பட்ட மனிதன் வார்த்தையால் முழுதும் உறுதிப்படுத்தப்பட்டவராய் தோன்றும் போது, நமது தூதனை நாம் அடைந்து விடுவோம். அது அவ்வளவு எளிதான ஒன்று. இருப்பினும், யூதர்கள் தூதனையும் (யோவான் ஸ்நானன்) கிறிஸ்துவாகிய இயேசுவையும் அடையாளம் கண்டு கொள்ளத்தவறினது போன்று, நாமும் அடிக்கடி எளிமையான காரியங்களில் தான் தவறி விடுகிறோம். 13. ஏழாம் காலத்து தூதன் சிறப்பான கவனம் பெறும் உண்மை, வெளி 10ல் காணப்படுகிறபடியால், அவரை அடையாளங்கண்டு கொள்வதற்கென இந்த பாகத்தை ஒரு ஆதாரமாகக் கொண்டு நாம் படிப்போம். 1-3 வசனங்களின்படி, வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் ஒரு பாகம் எழுதப்படாமல் உள்ளது. - யோவான் அந்த சத்தங்களைக் கேட்டான், ஆனால் அவன் கேட்டவைகளை எழுதுவதற்கு தடை செய்யப்பட்டான். "பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது. அவனுடைய சிரசின் மேல் வானவில்லிருந்தது. அவனுடைய முகம் சூரியனைப் போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப் போலவும் இருந்தது. திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது, தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின் மேலும், தன் இடது பாதத்தைப் பூமியின் மேலும் வைத்து, சிங்கம் கெர்ச்சிக்கிறது போல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. தீர்க்கதரிசனம் படிக்கும் மாணாக்கர், இந்த சத்தங்கள் சொன்னவைகள் வெளிப்படும் ஒரு நேரம் நிச்சயமாக வரும் என்று ஒப்புக் கொள்கின்றனர். இப்பொழுது அவை முத்திரையிடப்பட்டுள்ளன. அவை நமக்கு இரகசியமாக உள்ளன. ஆனால் புறஜாதியாரின் நிறைவின் முடிவின் போது தேவரகசியம் அனைத்தும் நிறைவேறும் என்று வெளி. 10:6ல் உரைக்கப்பட்டுள்ளது. அது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாள். எனவே, இந்த காலத்தின் போதுதான் இடிமுழக்கங்களின் சத்தங்கள் மறுபடியுமாக கேட்கப்பட்டு இந்த முறை அவை என்னவென்று வெளிப்படும். ஆனால் தேவனுடைய வசனம் தீர்க்கதரிசிக்கும், தீர்க்கதரிசியின் மூலம் மட்டுமே உண்டாவதால், வெளி. 10:5ல் கூறப்பட்டுள்ள "தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு உரைத்தபடி ' என்பதன் உண்மை விளங்கும். அப்படியானால் லவோதிக்கேயாவின் தூதன், பவுலைப் போல் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கவேண்டும். வெளிப்படாத தேவனுடைய வார்த்தையைப்பெற்றுக் கொண்டு நமக்கு அளிப்பதற்கென இந்த மனிதன் ஒரு தீர்க்கதரிசி – தூதனாக இருப்பார். எழுதப்பட்ட சொற்களை, முத்திரையை உடைத்து வெளிப்படுத்துவதற்கு, தானியேலைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி அவசியமானால், எழுதப்படாத யோவானின் வார்த்தைகளை பெற்றுக் கொள்வதற்கு ஒரு தீர்க்கதரிசி அதைக் காட்டிலும் மிகவும் அவசியமல்லவா? 14. இந்த கருத்தை நாம் தொடர்ந்து விவரமாக பார்க்க, இந்த வசனங்களை நாம் மற்றொரு கோணத்திலிருந்து பார்ப்போம். வெளி. 10:3-4. "சிங்கம் கெர்ச்சிக்கிறது போல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான். அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கின போது, நான் எழுத வேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரை போடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்." இங்கு ஒரு பெரிய இரகசியம் உள்ளது. வெளிப்பாடு முழுமையாக வேண்டும், இருப்பினும் சொல்லப்பட்டவைகளை நாம் அறியக்கூடாதபடிக்கு தடை செய்யப்பட்டோம். என்றாகிலும் ஒரு நாள் அதை நாம் கேட்க வேண்டுமென்று அறிந்திருக்கிறோம். அந்த நேரம் முடிவுகாலமே. இப்பொழுது நம்மை நாமே கேட்டுக் கொள்வது, "யார் இந்த இரகசியத்தை தேவனிடமிருந்து பெறுவார்? அது போப்பாக இருக்குமா? அல்லது வைதீக சபையின் தலைவராக இருக்குமா? அது உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தின் தலைவர்ராக இருக்கக்கூடுமா? அது ஏதாவது ஒரு ஸ்தாபனத்தின் தலைவர்ராக இருக்குமா? அதற்கு விடை, இல்லை என்பதே. ஒரே ஒரு வழியில் மட்டுமே தேவன் தமது வார்த்தையை அளிக்கமுடியும், ஏனெனில் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அது ஆமோஸ் 3:7ல் காணப்படுகிறது. "கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார். இதைதான் வெளி. 10:6 "தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு என்றுரைக்கிறது. எனவே கடைசி சபை காலத்தின் தூதன் ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார். நம்மிடத்திலிருந்து மறைக்கப்பட்டுள்ள இரகசியங்களை வெளிப்படுத்த அவர் தீர்க்கதரிசி - தூதனாயிருப்பார். ஒரு நிமிடம் பொறுங்கள். வெளி.22:18ல். "ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன் மேல் கூட்டுவார்" என்று உரைக்கப்பட்டிருக்கவில்லையா? அப்படியானால், எவ்விதம் ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்ட முடியும்? அவன் இடிமுழக்கங்கள் இடுகிற சத்தங்களை கேட்டு எழுதினால், அவன் இந்த புத்தகத்தில் கூட்டுகிறவனாகி விடுவான். அப்படியல்ல, இடிமுழக்க சத்தங்கள் மொத்தம் ஏழு. ஒருவன் எதையும் கூட்டக் கூடாததால், இந்த இடிமுழக்கங்கள் சொன்னவை ஏற்கனவே வேதத்தில் அடங்கியுள்ளதென்றும், ஆனால் காலங்கள்தோறும் அவை ஏழு இரகசியங்களாக அமைந்து வந்துள்ளன என்பதும் தெளிவாகிறது. அதுதான் இதன் சரியான அர்த்தம். ஒரு தீர்க்கதரிசி வார்த்தையை வெளிப்படுத்தி அதை ஜனங்களுக்கு பொருத்திக் காண்பிக்கிறார் என்பது உண்மையல்லவா? எனவே, வேதத்தில் அடங்கியுள்ள இரகசியங்களை வெளிப்படுத்தி அதை முடிவுக்கு கொண்டு வர ஒரு தீர்க்கதரிசி - தூதன் வருவார். தேவனுடைய வார்த்தை ஜீவனும், வல்லமையும், புரிந்து கொள்ளுதலும் அளிப்பதால், இந்த கடைசி வெளிப்பாடு, அதை விசுவாசித்து ஏற்றுக் கொள்பவர்களை தேவனை சந்திப்பதற்கு ஆயத்தமான நிலைக்கு கொண்டு வருகிறது. இல்லையெனில், இதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்? தேவன் தம்முடைய கிரியைகளில் பிரயோஜனத்தையே எப்பொழுதும் குறிக்கோளாகக் கொண்டவர். 15. ஒரு தீர்க்கதரிசியை பாகுபடுத்தும் பண்புகள் எவை என்பதை நாம் அறிந்து நம்மை திருப்திபடுத்திக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, லவோதிக்கேயா காலத்து தீர்க்கதரிசிக்கு எந்த குறிப்பான அடையாளம் இருக்க வேண்டும் என்பதையும் நாம் வேதத்திலிருந்து தீர்மானிக்க வேண்டும். இரண்டாவதாக கூறப்பட்டதை நாம் தெளிவுப்படுத்திக் கொள்ள, எலியாவைக் காட்டிலும் மோசேக்கு, அவனை உறுதிப்படுத்தும் வெவ்வேறு அடையாளங்கள் உண்டாயிருந்தன என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இருவரும் தீர்க்கதரிசிகளே , ஆனால் வரலாற்றில் வெவ்வேறு காலங்களில் அவர்கள் வாழ்ந்ததனால், அவர்களை வேறுபடுத்தும் வெவ்வேறு தகுதிகள் இருக்க வேண்டியது அவசியம். ஒரு தீர்க்கதரிசியை பாகுபடுத்தும் தன்மைகளை நாம் பரிசீலனை செய்கையில், அவைகளை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாத வகையில் உபா. 13:1 - 5லும், உபா. 18:20-22லும் உரைக்கப்பட்டுள்ளது. "உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும் அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக, உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து. அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக் கொள்வீர்களாக. அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலை செய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக் கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப் பேச்சைப் பேசுகிறான்; இப்படிப்பட்ட தீமையை உங்களைவிட்டு விலக்குவீர்களாக." "சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான். அவனுக்கு நீ பயப்பட வேண்டாம்." 16. மேற்கூறிய வசனங்களிலிருந்து, தேவன் சில மனிதர்களை, வருங்காலத்தில் நடப்பவைகளை அல்லது தற்காலத்தில் மறைக் கப்பட்டுள்ளவைகளை வெளிப்படுத்தக் கூடிய திறனைக் கொண்டவர்களாய் இவ்வுலகில் வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. முன்னுரைக்கப்பட்டவைகளை நிறைவேறச் செய்யும் ஒரு வல்லமையைப் பெறாமல், எந்த ஒரு மனிதனும் வருங்காலத்தில் நடப்பவைகளை உறுதியாக அறியவே முடியாது. மேலும். எந்த ஒரு மனிதனும், அவனுடைய கட்டளையின்படி அவனுக்கு அற்புதங்களை நடப்பிக்க, அவன் ஏதோ ஒரு சக்தியுடன் தொடர்பு கொள்ளாமல், தானாகவே மனிதத்திறனுக்கு அப்பாற்பட்ட வல்லமையான செயல்களைப் புரிய இயலாது. ஆனால் இந்த திறன் இருதரப்பினருக்கு பொதுவாக உள்ளது - தேவனுக்கு சொந்தமானவர்களுக்கும், சாத்தானுக்கு சொந்தமானவர்களுக்கும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் மோசே தேவன் பேரில் கொண்டிருந்த விசுவாசத்தின் மூலம் இயற்கைக்கு மேம்பட்ட ஒரு வல்லமையை வெளிப்படுத்தின போது, எகிப்திலிருந்த மந்திரவாதிகள் சாத்தானின் திறனைக் கொண்டவர்களாய் இந்த அற்புதங்களை மறுபடியும் செய்து காண்பித்தனர். தேவன் தமது தீர்க்கதரிசிகளைக் கொண்டிருக்கிறார் என்றும் சாத்தான் தன் தீர்க்கதரிசிகளைக் கொண்டிருக்கிறான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால், தயவு கூர்ந்து உபாகமம் 13, 18 அதிகாரங்களில் உரைக்கப்பட்டுள்ள வேதவசனங்களை கவனமாக பாருங்கள். தேவனுடைய தீர்க்கதரிசி ஜனங்களை வழிநடத்தி, அவர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாயும், தேவனுடைய வார்த்தையைக் கைக்கொள்ளுகிறவர்களாயிருக்கும்படிக்கும் செய்வான். ஆனால் கள்ளத்தீர்க்கதரிசியோ ஜனங்களை வழி விலகும்படி செய்வான். இன்றைக்கும் நாம் அதே பரிசோதனையின் அடிப்படையில் நிர்ணயிக்கலாம். உண்மையான தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையின் மனிதனாக இருந்து, எல்லா மனிதரும் வார்த்தையை தங்கள் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமென்று வற்புறுத்துவான். அவன் ஜனங்களை தேவனிடம் நடத்துவான். அவனுடைய வாழ்க்கை தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிகின்ற ஒரு சிரிய வாழ்க்கையாக அமைந்திருக்கும். அவனுடைய குறிக்கோள்கள் உத்தமமாய் இருக்கும். அவன் உலகப் பொருளுக்காக அற்புதங்களைச் செய்ய மாட்டான், தீர்க்கதரிசனம் உரைக்க மாட்டான். அவன் ஒவ்வொரு முறையும் ஆண்களையும், பெண்களையும் தேவனிடம் சுட்டிக்காட்டி, அவர்களை இன்னும் அதிகமாக ஆவிக்குரிய ஆழத்தில் கொண்டு செல்வான். அவன் எப்பொழுதும் கர்த்தராகிய இயேசுவை உயர்த்துகிறவனாக இருப்பான், அவனுடைய செயல்கள் அவன் நிலைநாட்டின் உண்மையான கிறிஸ்துவின் இனிய தரிசனத்தை மங்கச் செய்யாது. ஏனெனில் தீர்க்கதரிசன ஆவி உண்மையில் கிறிஸ்துவின் ஆவியாயுள்ளது. 17. இங்கு உரைக்கப்பட்டு வருவதற்கான ஒரு நல்ல எடுத்துக் காட்டு இரு மனிதரின் வாழ்க்கையில் காணப்படுகின்றது. அவர்கள் இரண்டு தீர்க்கதரிசிகள் - மோசேயும் பிலேயாமும். தேவனுடைய மகிமைக்கென்று தன் உயிரையும் தனக்குள்ள எல்லாவற்றையும் கொடுத்து, ஜனங்களை நித்திய நன்மைக்கு நடத்த வேண்டுமெனும் அக்கறை கொண்ட மோசேயைப் பாருங்கள். பாவத்துக்கு விரோத மாக கூக்குரலிட்டு, ஜனங்களுடன் மன்றாடி, தேவனை மகிமைபடுத்தின மோசே இங்கிருக்கிறான். "நான் ஏதாகிலும் உங்களிடமிருந்து அபகரித்ததுண்டா? நான் எப்பொழுதாகிலும் உங்களிடம் பொய் சொன்னதுண்டா? நான் தீர்க்கதரிசிசனம் உரைத்த ஏதாகிலும் ஓன்று நிறைவேறாமல் இருந்ததுண்டா? நான் எப்பொழுதாகிலும் உங்களை தேவனை விட்டு வழிவிலகச் செய்ததுண்டா? அல்லது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவைகளை உங்களிடம் மறைத்து வைத்ததுண்டா? நான் எந்நேரமும் உங்களை தேவனிடம் வழிநடத்த வில்லையா? நான் தேவனுக்கும் உங்களுக்கும் விசுவாசமுள்ளவனாய் நடந்து வரவில்லையா?" என்று கூறத்தகுந்த ஒருவன் மோசே. ஆனால் பிலேயாமினால் அவ்விதம் கூற இயலவில்லை. தீர்க்கதரிசனம் உரைத்து பணம் பெற வேண்டும் என்னும் அவசரத்தினால், அவன் தன் கால்களை ஏறக்குறைய முறித்துக் கொண்டான். ஏனெனில் அவன் ஏறிச் சென்ற கழுதை அவனை கல்சுவரின் மேல் பயங்கரமாக மோதியது. அவனுடைய பேராசையின் குருட்டுத்தனத்தின் நிமித்தம், அவனுக்கிருந்த வரத்தை அவன் வியாபாரமாக்க முயன்றான். இஸ்ரவேலருக்கு தீமை செய்ய அவனுக்கு போதிய வல்லமை அல்லது அதிகாரம் கிடைக்காததனால், அவர்களை அழித்துப்போட அவன் ஒரு திட்டம் தீட்டினான். பாகால் பேயோரில் இஸ்ரவேலரை மோவாபியருடன் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதே அந்த திட்டம். இது தேவனுடைய வார்த்தைக்கு நூற்றுக்கு நூறு முரணாயிருந்தது. அவன் தேவனை விட்டு அவர்களைத் தூர வழி நடத்தினான். இந்த மனிதன் பிலேயாமுக்கு, தேவனுடைய வார்த்தையோ, தேவனோ அல்லது தேவனுடைய ஜனங்களோ உபயோகமில்லாமல் இருந்தது. அவன் தனக்கு எல்லாவற்றையும் தேடிக் கொண்டவன், அழிப் பவன். ஆனால் வேதம் முழுவதிலும், ஒரு உண்மையான தீர்க்கதரிசி ஒரு ஊழியக்காரனாக, தன் நலனைக் காட்டிலும் மற்றவர்களின் நலனைத் தேடும் ஒருவனாகக் காணப்படுகிறான். அவன் மேலதிகாரிகளிடமிருந்து ஆதரவை நாடவில்லை, தாழ்ந்தவர்களை இழிவாக நினைக்கவுமில்லை. அவன் தேவனுடைய வார்த்தையை உரைத்து, அதை செயல்படுத்துகிறான். அவன் வார்த்தையிலும் வார்த்தையின் மூலமாகவும் தேவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்கிறான். அவன் தன்னுடைய ஊழியத்திலும் நடத்தையிலும் அதை செயல்முறையில் காண்பிக்கிறான். 18. இப்பொழுது நாம் அறிந்து கொண்ட காரியங்களின் மூலம், தவறான இருதயம் கொண்ட, தவறாக நடந்து கொள்ளும் மனிதரின் வாழ்க்கையின் மூலம் புறப்பட்டு வருகின்ற வல்லமையை நாம் புறக்கணிக்க வேண்டுமென்பது நமக்கு அவசியமாயுள்ளது. நமது ஜீவனின் நலனுக்கென்று தேவன் நம் மேல் ஊதியுள்ள தேவனுடைய வேத வாக்கியங்களுக்கு முரணாக நடந்து கொண்டு, அவைகளை விட்டு விலகியவரின் சொற்களை (அவர்கள் எவ்வளவு உயர்வாக பேசினாலும் புறக்கணியுங்கள். இன்றைக்கும் இரு சீமோன்கள் நம்மிடையே உள்ளனர் என்பதை நினைப்பூட்டிக் கொள்வது நலமாயிருக்கும் - சீமோன் பேதுருவும், மாய வித்தைக்காரனாகிய சீமோனும். தேவனுக்கு மகத்தானவனும், தேவனுடன் எந்த பங்கும் பாகமும் மில்லாத மற்ற மகத்தானவனும் உள்ளனர். எப்பொழுதுமே இரண்டு பேர் அல்லது இரு சாரார் வல்லமையை விளங்கப் பண்ணுகின்றனர். ஆனால் ஒரு சாராருக்கு தவறான இடத்திலிருந்து வல்லமை கிடைக்கிறது. கிறிஸ்துவின் ஆவியும் அந்திக்கிறிஸ்துவின் ஆவியும் இங்குள்ளன. சாத்தானின் தீர்க்கதரிசிகளில் இருக்கும் அந்திக்கிறிஸ்துவின் ஆவி உண்மையான தேவனுடைய ஆவிக்கு மிக அருகில் உள்ளது. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே வஞ்சகத்திலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். மத். 24:22-24. "அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப் போவதில்லை, தெரிந்து கொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். உண்மையாக தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்கின்றனர். உண்மையில் தெரிந்து கொள்ளப்பட்ட இவர்கள் தீர்க்கதரிசியையும் அவருடைய வல்லமை பொருந்திய செயல்களையும், அவர் வார்த்தையில் சரியாயிருக்கிறார். அதைவிட்டு அவர் ஒரு போதும் விலகுவதில்லை என்றும் அவர்கள் காணும்போது, அவர் தேவனுடையவர் என்பதை அறிந்து கொண்டு அவரை ஏற்றுக் கொள்கின்றனர். தீர்க்கதரிசி உரைக்கும் அனைத்தும், செய்யும் அனைத்தும் சீக்கிரம் வரப்போகும் அவருக்கு இன்னும் அருகாமையில் அவர்களைக் கொண்டு செல்கிறது. அவர்கள் மற்றெந்த உறுதிப்படுத்தும் அடையாளத்தையும் எதிர்நோக்குவதில்லை. இதுவே அவர்களுக்கு உறுதிபடுத்தும் அடையாளமாயுள்ளது. 19. தீர்க்கதரிசியும் லவோதிக்கேயா சபை காலத்து தூதனுமாயிருக்கும் இவருடைய ஊழியத்தைக் குறித்து வேதம் என்ன உரைக்கிறது என்பதை நாம் பரிசீலனை செய்வோம். அவர் தீர்க்கதரிசியாயும் மற்றும் தூதனாயும் இருப்பார். உண்மையில் அவர் அந்த சபை காலத்து தூதனாயிருப்பார். அவர் ஒரு செய்தியைக் கொண்டுள்ளார். அவர் தேவனுடைய வார்த்தையும் வல்லமையும் கொண்டவராய் காட்சிக்கு வராமல் போனால், அவரை ஒரு தூதனாக அங்கீகரிப்பதென்பது கடினமாகும். தீர்க்கதரிசி என்னும் உத்தியோகம் அவர் தூதன் என்று அழைக்கப்படுவதற்கு அவரை தகுதிபடுத்துகிறது. யோவான் ஸ்நானனின் விஷயத்தில் அப்படித்தான் இருந்தது. இயேசு, "எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன் தான்." (மத். 11:9-10) என்றார். கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக வந்த இந்த தூதனைக் குறித்து வேதத்தில் முன்னுரைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவனுடைய பெயர் என்னவென்று குறிக்கப்படவில்லை. அதேபோல், முதலாம் வருகையைக் காட்டிலும் அதிகமாக எழுதப்பட்டுள்ளதும் அதிக முக்கியம் வாய்ந்ததுமான கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாய் இருக்கும் லவோதிக்கேயா சபை காலத்து தூதனும், நாம் தேடிக் கண்டு பிடிக்கும் கண்களைக் கொண்டிருந்தாலன்றி, வேதத்தில் காணப்படமாட்டார் என்று நீங்கள் எண்ணவில்லையா? ஆம், அவரும் கூட தீர்க்கதரிசியின் உத்தி யோகத்தைக் கொண்டவராயிருப்பார், அது அவரை இக்காலத்து தூதனாக உள்ள ஸ்தானத்தை உறுதிப்படுத்தும். அதை தான் வெளி. 10:6 உரைக்கிறது. "தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிற போது தேவரகசியம் நிறைவேறும்.” வேறெந்த காலத்து தூதர்களைக் குறித்தும் இவ்விதம் உரைக்கப்படவில்லை. முதலாம் சபை காலத்திலும் கடைசி சபை காலத்திலும் தவிர வேறெந்த காலத்திலும் தீர்க்கதரிசி - தூதன் இருப்பதாக குறிப்பாக சொல்லப்படவில்லை. மற்ற ஐந்து காலங்களிலும் தூதர்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் தீர்க்கதரிசிகள் அல்ல. அவர்கள் சீர்திருத்தக்காரர்கள். அனைவரும் செய்திகளைக் கொண்டிருந்தனர். அனைவருமே வெளிப்படுத்தப் பட்ட வெளிச்சத்தை ஓரளவில் கொண்டிருந்தனர். ஆனால் அந்த ஐந்து பேரில் எவருமே உறுதிபடுத்தப்பட்ட "கர்த்தர் உரைக்கிற தாவது என்பதைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் பவுல் அதைக் கொண்டிருந்தான். இப்பொழுது, தேவரகசியம் நிறைவேற வேண்டிய இக்கடைசி காலத்தில், தீர்க்கதரிசியாயுள்ள ஒரு தூதன் நமக்கிருப்பார். அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இருந்தது போன்ற "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பது மீண்டும் நம்முடன் இருக்கும். தீர்க்கதரிசி - தூதன் இப்பொழுது நமது மத்தியில் இருக்க வேண்டும். ஏனெனில் இஸ்ரவேலர் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி விட்டனர். புறஜாதியாரின் காலம் விரைவில் முடிவடையும், எனவே புறஜாதியாரின் நிறைவும் ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது. எனவே, மரித்துக் கொண்டிருக்கிற இக்காலத்தின் இந்த மகத்தான தீர்க்கதரிசி - தூதன் இப்பொழுதே எங்காவது இருப்பார். 20. ஆனால் நாம் அவரை எவ்விதம் அடையாளம் கண்டு கொள்வது? அவரைக் கண்டு பிடிப்பதென்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல, ஏனெனில் நமது எண்ணங்கள் - மிக சிக்கலாக அமைந்து, அவர் எந்தவிதமாக வரவேண்டும், அவர் காண்பதற்கு எப்படியிருக்க வேண்டும், அவர் என்ன சொல்வார். அவர் எப்படி நடந்து கொள்வார் என்பவைகளைக் குறித்து நாமே நமது சொந்த கருத்துக்களை நிர்ணயித்துக் கொண்டு விட்டோம். ஆனால் கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு தூதனாக இருந்தவனைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போமானால், இரண்டாம் வருகைக்கு தூத னாக இருப்பவரைக் கண்டு பிடிக்க அது உதவி புரியும். 21. யோவான் ஸ்நானன் அக்காலத்திலிருந்த எல்லா மதக்கருத் துக்களுக்கும் அப்பாற்பட்டவனாய் தோன்றினான். அவன் தன் பிறப்பின் காரணமாக ஒரு ஆசாரியனாயிருக்க உரிமை பெற்றிருந்த போதிலும், அவன் ஆசாரியனாயிருக்கவில்லை. அவன் பரிசேயனும் அல்ல, சதுசேயனும் அல்ல. அவன் எஸ்ஸினியரை (Essenes) சேர்ந்திருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. அவன் சாதாரண முறையில், அல்லது மத சம்பந்தமாக, கல்வி எதுவும் மனிதரால் கற்பிக்கப்படவில்லை. என்றாலும், அவன் தன் தாயின் கர்ப்பத்திலிருந்த போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தான். அவனை நிறைத்திருந்த அதே ஆவி தான் அவனுக்குப் போதித்தது. அவனுடைய குறிக்கோள்கள், அவனைச் சுற்றியிருந்தவர்களுக்கு இருந்த குறிக்கோள்களைக் காட்டிலும் வேறுபட்டிருந்ததால், அவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான் என்பது மட்டுமல்ல, அவன் வன்மையாக எதிர்க்கப்பட்டான். அவனுடைய சொந்த சீஷர்களாலும் கூட அவனைச் சரியாக புரிந்து கொள்ள இயலவில்லை. அவனைக் கேள்வி கேட்க வந்த குழுக்கள் அவனுடைய சீஷர்களைக் காட்டிலும் அவனை இன்னும் குறைவாக புரிந்து கொண்டனர். அவனுடைய வருகை, அவனுடைய செயல்கள், அவன் பிரசங்கித்த விதம், அவர்களுக்கு வெளிச்சத்தைத் தராமல் அவர்களை அதிக குழப்பத்தில் ஆழ்த்தின. ஆவிக்குரிய துறையைத் தவிர மற்றெல்லா துறைகளிலும் அவன் மற்றவர்களுடைய போதகங்களை அனுசரிக்காத ஒருவனாயிருந்தான். அந்த நாளில் இருந்த தெரிந்துகொள்ளப் பட்டவர்களைத்தவிர, அவன் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டவனும், சந்தேகத்துக்குரியவனாயுமிருந்தான். அப்படியானால், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாகத் திகழும் தூதன் எல்லா வகையிலும் யோவான் ஸ்நானனைப் போன்றே இருப்பார் என்பது கூடுதல் சாத்தியமல்லவா? வேதத்தில் காணப்படும் ஒவ்வொரு பெரிய தீர்க்கதரிசியும், தேவனுடைய தூதனும், அவர்கள் பெற்றிருந்த அதே தேவனுடைய ஆவியை தங்களுக்குள் கொண்டிருந்த மிகக் குறைந்த சிறுபான்மையோரைத் தவிர, மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு முடிவில் புறக்கணிக் கப்பட்டனர் என்று வேத வரலாறு நமக்குத் தெளிவாகக் காட்டுவதை நாம் நிச்சயமாக நம்ப வேண்டியவர்களாயிருக்கிறோம். 22. கடைசி காலமாகிய லவோதிக்கேயா சபையின் காலத்தில் காணப்படவிருக்கும் உண்மையான ஆவிக்குரிய நிலையை நாம் ஆராய்வோமானால், இந்த தூதன் எப்படிப்பட்டவராயிருப்பார் என்பதைக் குறித்த ஆழ்ந்த அறிவு நமக்குக் கிடைக்கும். வெளி. 3:14-22ல், "லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்; உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது: உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெது வெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப் போடுவேன். நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப் படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால், நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக் கொள்வதற்கு வெண் வஸ்திரங்களையும் என்னிடத்தில் வாங்கிக் கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்து கொண்டு சிட்கிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத்திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன். அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான். நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்தது போல், ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்று உரைக்கப்பட்டுள்ளது. இங்கு எழுதப்பட்டிருப்பதன்படி, கடைசி கால சபை எல்லா சபை காலங்களைக் காட்டிலும் மிகவும் வருந்தத்தக்க காலமாயிருந்தது, அதன் அவமானமும் குழப்பமும் உச்சக்கட்டத்தை அடைந்து மதத்துரோகத்தில் முடிவடைந்திருக்கும். ஏனெனில் வெளி. 3:20, "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன்" என்றுரைக்கிறது. இது இயேசு தமது சொந்த சபையை விட்டு வெளியே தள்ளப்பட்டு இப்பொழுது அவர் வெளியே நின்று கொண்டு உள்ளே வர முயன்று கொண்டிருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறதேயன்றி வேறல்ல. இது இதனுடன் தொடர் பில்லாத ஒரு வியாக்கியானமல்ல. இது முற்றிலும் உண்மையாகும். ஏனெனில் 22ம் வசனம், "ஆவியானவர் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்று உரைக்கப்பட்டுள்ளது. இந்த 22ம் வசனத்தை நீண்ட காலமாக, நல்லெண்ணம் கொண்ட ஆனால் தவறாக நம்பின தனிப்பட்ட ஊழியக்காரர்கள், பாவிகளுக்காக உபயோகித்து வந்த காரணத்தால், லவோதிக்கேயா சபையின் உண்மையான நிலையை தேவ ஆவியானவர் முன்னுரைக்கிறார் என்பதை நாம் காணத்தவறிவிட்டோம். இந்த சபை முடிவில் கிறிஸ்துவற்றதாக ஆகிவிடுகிறது. 23. இப்பொழுது குழப்பமடைய வேண்டாம். இந்த உண்மையை நாம் காணத்தவறின காரணம், தேவனுடைய வார்த்தையை அது எழுதப்பட்ட விதமாக படிக்காமலிருந்ததே. நீங்கள் மீண்டுமாக வெளிப்படுத்தின விசேஷம் 2ம், 3ம் அதிகாரங்களைக் கவனமாய் வாசியுங்கள். ஒவ்வொரு சபை காலத்திலும் ஆவியானவர் உண்மையான கிறிஸ்தவர்களோடும், பாவனை செய்தவர் அல்லது அவிசு வாசிகளோடும் பேசுகிறார். ஒரு பக்கம் அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களை வன்மையாகக் கடிந்து கொள்கிறார், மற்ற பக்கம் அவர்களுடைய பக்தி, விசுவாசம், துன்பப்படுதல், புரிந்து கொள்ளுதல், இன்னும் மற்றவைகளுக்காக அவர்களைப் பாராட்டுகிறார். இது எப்படி? அதற்கான விடை காண்பது மிகவும் எளிது. எல்லா இஸ்ரவேலரும் இஸ்ரவேலர் அல்ல. இஸ்ரவேலர் என்றால், "தேவனுடைய பிரபு என்று பொருள். ஆனால் எலியாவின் நாட்களில் காணப்பட்டது போல், திரளானோர் அந்த நாமத்தை தரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அது அவர்களை உண்மையான இஸ்ரவேலராக்கி விடவில்லை. ஒருக்கால் அக்காலத்தில் மாம்சப் பிரகார மான இஸ்ரவேலரின் எண்ணிக்கை ஐம்பது லட்சமாக இருந்திருக்க வகையுண்டு. ஆனால் பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத உண்மையான இஸ்ரவேலர் ஏழாயிரம் பேர் மட்டுமே இருந்தனர். இன்றைக்கும் அதேவிதமான சூழ்நிலை நிலவுகின்றது. மீன்பிடிப்பவன் சென்று கடலில் வலையைப் போடுகிறான். அதில் எல்லா வகைகளும் சிக்கிக் கொள்கின்றன. அந்த வலையில் விலாங்கு, மீன்கள், பாம்புகள், ஆமைகள், நண்டுகள், இரால் மீன்கள். தண்ணீர் சிலந்திகள், தவளைகள் போன்றவை அகப்பட்டுக் கொள்கின்றன. அதில் மீன்களும் காணப்படுகின்றன. ஒரு மேய்ப்பனின் மந்தையில் செம்மறியாடுகள், வெள்ளாடுகள் இவ்விரண்டும் உள்ளன. ஒரு விவசாயினுடைய நிலத்தில் கோதுமை பயிரும் களைகளும் உள்ளன எனவே, "கிறிஸ்தவன்" (அதாவது ஆவியில் நிறைந்து நடப்பவன்) என்னும் பெயரைச் சூடிக் கொள்ளும் அனைவருமே, அவர்கள் கன்னிப் பிறப்பு, சிந்தப்பட்ட இரத்தம், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் போன்றவைகளை விசுவாசித்த போதிலும், உண்மையாக வார்த்தையினால் பிறந்த, ஆவியினால் நிறைந்த கிறிஸ்தவர்கள் அல்ல என்று நாம் காண்கிறோம். இன்றைக்கு நம்மிடையே, இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், பத்தாம், இருபதாம், முப்பதாம் சந்ததி கிறிஸ்தவர்கள் காணப்படுகின்றனர். ஆனால் தேவனுக்கு பேரப்பிள்ளைகள் கிடையாது, பிள்ளைகள் மட்டுமே உண்டு. எனவே இன்றைய சபை, பழங்காலத்து இஸ்ரவேலரைப் போல் மாம்சபிரகாரமான கிறிஸ்தவர்களைக் கொண்டுள்ளது. ஆனால் உண்மையான கிறிஸ்துவின் சரீரமாகிய சபை அந்த பரந்த சபையின் ஒரு பாகமாகத் திகழ்ந்து, எலியாவின் நாட்களில் இருந்த ஏழாயிரம் பேரைப் போன்று ஆவிக்குரியதாய் உள்ளது. ஆனால் மாம்சப் பிரகாரமான இஸ்ரவேலர் தேவனுடைய சார்பில் பேசி தேவனை வழிபட்டது போல் காணப்பட்டு, அவர்கள் காலத்தில் இருந்த மார்க்க சம்பந்தமானவைகளைப் பின்பற்றும் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட விதமாக, இன்றைய பெயர் கிறிஸ்தவ சபையும் தேவனுடைய சார்பில் பேசி, தேவனை வழிபடுவது போல் காணப் பட்டு, தங்கள் வழிபாட்டை அதற்கேற்ப அமைத்துக் கொள்வதை நாம் காண்கிறோம். 24. இன்றைய சபை ஐசுவரியம் நிறைந்ததாய் உள்ளது. அதற்கு நிறைய சொத்துக்களும், ஸ்டாக்குகள், பாண்டுகள் இவைகளில் நிறைய பணமும் உள்ளது. அதன் போதகர்களுக்கு ஓய்வு தொகை கோடிக்கணக்கில் கிடைக்கிறது. அது உலகப் பிரகாரமான பொருட்களைப் பெற்று ஐசுவரியமுள்ளதாய் விளங்குகிறது. ஆனால் ஆவிக்குரிய பிரகாரம் அது தரித்திர நிலையில் உள்ளது. அது ஆவிக்குரிய விதமாக தேவனை விட்டு வெகுதூரம் அகன்றுள்ளதால், தேவன் அது நிர்பாக்கியமுள்ளதும், குருடாயும், நிர்வாணமுள்ளதாயும் இருந்து அதை அறியாமலிருப்பதாக உரைக்கிறார். அது மார்க்கத்துரோகம் செய்த போதிலும், அது தேவனுடைய சார்பில் பேசுவதாக தன்னைக் கூறிக் கொள்கிறது. தேவன், "நீ எனக்காக பேச முடியாது. நீ வெதுவெதுப்பாயிருக்கிறாய். நீ வார்த்தையில் உள்ள முக்கியமான சத்தியங்களை விசுவாசிப்பதாக உரிமை கோரின போதிலும், நீ உண்மையில் ஒரு நீதியான நிலையைக் கடைபிடிப்பதில்லை. எனவே நீ இனி ஒரு போதும் என் வாய்க் கருவியாக இருக்க முடியாது. உன்னை என் வாயிலிருந்து வாந்திப் பண்ணிப் போடுகிறேன்' என்கிறார். 25. இது இவ்வாறு இருப்பதுமன்றி, இன்றைக்கு நம்மிடையே காணப்படும் ஸ்தாபன மார்க்கங்களின் கூட்டணி எல்லா ஸ்தாபனக் கொள்கைகளையும் ஒருங்கே தழுவுவதாக அமைந்துள்ளதால், தேவன் சபையை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தம் உண்டாகி விட்டது; ஏனெனில் இருளும் வெளிச்சமும் ஒன்றோடொன்று கலக்காது. இந்த சபைகளின் ஐக்கியத்தில் பிராட்டஸ்டன்டுகள், ரோமன் கத்தோலிக்கரிடம் திரும்பச் செல்லப் போகின்றனர். ஏற்கனவே பிராட்டஸ்டன்டு மதத்தலைவரும் போப்பாண்டவரும் ஐக்கியத்தில் வந்துவிட்டனர். அமெரிக்கா ஏற்கனவே ஒரு கத்தோலிக்க ஜனாதிபதியை பெற்றுக் கொண்டது. இன்னும் மற்ற கத்தோலிக்க ஜனாதிபதிகள் அவரைப் பின்தொடருவார்கள் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு குழுவின் தலைவர்களும் வார்த்தையை புறம்பே தள்ளி விட்டு, அதற்கு பதிலாக தங்கள் சொந்த பிரமாணங்களையும், கோட்பாடுகளையும் அமைத்துக் கொண்டதால், ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை அனுசரித்து வாழ்வது கிடையாது. இவர்கள் தேவனுடைய பரிசுத்த, பிழையற்ற வார்த்தையை மறுதலித்து, அதே சமயத்தில் தேவனுக்காக பேசுவதாகக் கூறத் துணிச்சல் கொள்கின்றனர். சிலர் தாங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகள் (Vicars) என்று கூறும் அளவுக்கு சென்று விட்டனர். இது உண்மையில் அந்திக் கிறிஸ்துவாக உள்ளது. சபை தரித்திர நிலையை அடைவதற்கு, தேவன் அதை விட்டு விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. அவர் வெளியேறுகையில் தமக்கு சொந்தமானவர்களிடம், "என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமல் அவளை விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் போய் அசுத்தமானதைத் தொடாதிருங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்" என்றுரைக்கிறார் (வெளி. 18:4: 2 கொரி.6:17-18). வார்த்தையைப் புறக்கணித்தல் என்பது கிறிஸ்துவைப் புறக் கணிப்பதாகும். தேவனளித்த கட்டளைகளில் ஒரு வார்த்தையை மாற்றிப் போட ஏவாள் சாத்தானை அனுமதித்த போது, இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மானிட குலத்தை பிடித்து வருகின்ற பாவம், துயரம் ஆகிய வெள்ளம் பிரவேசிக்க அவள் கதவைத் திறந்து கொடுத்தாள். இயேசு சபைக்கு உரைத்த கடைசி சொற்கள், "ஒரு வார்த்தையும் கூட்டாதே. அதை அப்படியே விட்டு விட்டு, அதை பின்பற்று" என்று எச்சரிக்கிறது. ஆனால் சபையோ அதற்கு செவிமடுக்கவில்லை. அதன் செளகரியத்திற்கேற்ப அது தேவனுடைய வார்த்தையை மாற்றிப் போட்டது. இப்பொழுது யூதர், கத்தோலிக்கர், பிராடெஸ்டெண்டுகள் பிரிவிலுள்ள வேத மாணாக்கர்களைக் கொண்ட ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு, இந்த மூன்று குழுக்களும் தங்களுக்கு பொருந்தத்தக்க வண்ணம் வேதாக மத்தை மாற்றி அமைத்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். பரிசுத்த ஆவியானவர் சபையை விட்டு விலகுவாரானால், சபையானது அதை அறியாமல், அது தற்பொழுது செய்து கொண்டிருப்பவைகளில் தொண்ணூறு சதவிகிதம் தொடர்ந்து செய்து கொண்டிருந்து. அவர் சபையில் இல்லாததை காணத் தவறுவார்கள் என்று டாக்டர் பில்லி கிரகாம் கூறினதில் வியப்பொன்றுமில்லை. அது முற்றிலும் உண்மை. ஏனெனில் வார்த்தை புறக்கணிக்கப்படும் போது ஆவியானவர் புறக்கணிக்கப்படுகின்றார். ஏனெனில் வார்த்தையும் ஆவியும் ஒன்றே. நீங்கள் அவருடைய வார்த்தை இல்லாமல் தேவனைப் பெற்றிருக்க முடியாது. அது கூடாத காரியம். 26. சபையின் உண்மையான நிலை இவ்வாறு இருக்கையில், இக் காலத்துக்கென்று வரும் தூதன் எப்படிப்பட்டவராய் இருப்பார்? அவர் எந்த ஒரு ஸ்தாபனத்தையும் சேர்ந்தவராக இருக்க மாட்டார். அது கூடாத காரியம், ஏனெனில் ஸ்தாபனங்கள் முடிவில் ஒன்றாக இணைந்து, தேவனற்றதாக இருக்கும். அவர் புகழ் வாய்ந்ததாக கருதப்படுகின்ற எந்த ஒரு மார்க்க ஸ்தாபனத்தையும் சேர்ந்திருக்க மாட்டார். அவர் தேவனுக்கென்றும் தேவனோடும் தனியாக நிற்க வேண்டும். அவருடைய ஆவிக்குரிய, உலகப் பிரகாரமான வாழ்க்கை, பேச்சு, மனப்பான்மை இவையனைத்தும் மற்றவர்களை விட வேறுபட்டதாயிருக்கும். அவர் யோவான் ஸ்நானனைப் போன்றே பொருத்தமில்லாதவராகவும், சர்ச்சைக்குரியவராகவும் இருப்பார். அவர் புகழ் வாய்ந்தவராக இருக்க மாட்டார். உண்மையைக் கூறினால், அவருடைய ஊழியத்தின் தொடக்கத்தில் அவருக்கு கிடைக்கப் பெற்ற எந்த ஒரு கீர்த்தியையும், உன்னதத்திலிருந்து அவருக்களிக்கப்பட்ட சத்தியத்தை அவர் பிரசங்கிக்கத் தொடங்கும் போது இழந்து போவார். ஆனால் அவர் தேவனுடைய மனிதனாயிருப்பார். காலங்கள்தோறும் நடந்து வந்தது போல, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அவரை அறிந்து கொள்வார்கள். இந்த மனிதனின் ஊழியம் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் கண்களை விரிவாகத் திறக்கும், ஆனால் இருதயம் கடினப்பட்டவர்களின் கண்களை அது மூடி அவர்களை இன்னும் அதிகமாக குருடாக்கி விடும். இயேசுவின் காலத்திலும் அவ்வாறே இருந்தது. 27. இயேசுவின் காலத்திலிருந்தவர்களில் ஓரளவுக்கு வெளிச்சத்தைப் பெற்றிருந்தவர்கள் பரிசேயரே. ஆனால் அவர்கள் ஆட்சேபித்து, சந்தேகித்து, புறக்கணிக்கத் தொடங்கின போது அவர்களுடைய வெளிச்சம் அனைத்தும் இருளாகமாறி, அது முற்றிலும் அந்தகாரப்பட்டு, முடிவில் தங்களுடைய ஆண்டவரையே அவர்கள் கொன்றனர். ஆனால் இதற்கு மாறாக, பெயர் கெட்ட ஒரு சமாரியப் பெண் இருந்தாள். அவள் அவரை கிணற்றண்டையில் சந்தித்தாள். அவளுடைய பாவ நிலையிலும் அவள் அவரை விசுவாசித்தாள். அதன் விளைவாக அவளுடைய இருள் அனைத்தும் சுத்த வெளிச்சமாக மாறி, அவருடைய கிருபையினால் அவள் பிழைத்துக் கொண்டாள். ஆனால் பரிசேயர்களோ மரித்தனர். எனவே இந்த தீர்க்கதரிசி - தூதன் வார்த்தையுடன் வரும் போது அவருக்கு செவிகொடுங்கள், உங்கள் செவிகளை அடைத்துக் கொள்ளாதீர்கள். அவ்விதம் அடைத்துக் கொள்வீர்களானால் உங்கள் வெளிச்சம் இருளாக மாறிவிடும், தேவ ஆவியானவர் உங்களிடம் இனி ஒரு போதும் பேச மாட்டார். இவ்வளவாக இதை நாம் அறிந்து கொண்ட பிறகு, இப்பொழுது வேத வாக்கியங்கள் இந்த தூதனைக் குறித்து என்ன உரைக்கின்றன என்பதை தொடர்ந்து பார்ப்போம். இந்த மனிதன் கிறிஸ்துவின் வருகைக்கு முன்புள்ள கடைசி காலத்தில் நம்மிடம் வரவேண்டியவராதலால், அவருடைய வருகையின் நேரத்தை அறிவிக்கும் வசனங்களை நாம் ஆராய்ந்து பார்த்து, இந்த தூதனைக் குறித்து நமக்கு ஏதாகிலும் வெளிச்சம் கிடைக்கின்றதா என்று நாம் காண வேண்டியது அவசியமே. இயேசு தாமே இதற்கான ஒரு வேதபாகத்தை நமக்கு ஆதாரமாக அளித்திருக்கிறார். லூக். 17:26-30, வேதாகமக் காலத்தில் இருந்த இரண்டு பிரத்தியேகமான காலங்களின் தன்மைகள் முடிவு காலத்தில் மீண்டும் தோன்றும். இந்த தன்மைகள் ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த காலத்திலும், சோதோமின் வீழ்ச்சிக்கு முன்பிருந்த காலத்திலும் காணப்பட்டன. "நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள் வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், கொண்டார்கள். விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப் போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். இந்த வசனங்களை நாம் படிக்கையில், நமக்கு ஆவிக்குரிய ஆழ்ந்த அறிவு அவசியமாயுள்ளது, ஏனெனில் உலக ஒழுங்கு படிப் படியாக மோசமாகிக் கொண்டே வந்து, நோவா, லோத்து இவர்களின் காலத்தில் இருந்த நிலையையடையும் என்று இவ்வசனங்கள் நமக்கு அறிவுறுத்து கின்றன. அது உண்மை. ஆனால் அந்த நிலையில் உதவி பெற, நமக்கு தேவனிடத்திலிருந்து ஒன்றும் கிடைக்காமல் போனால், உலகம் உள்ள நிலையை நாம் அறிந்து கொள்வதனால் என்ன பயன்? இதை இவ்விதம் சிந்தித்துப் பார்ப்போம். உலகம் என்ன நிலையை அடையும் என்பதைக் குறித்த வெளிப்பாடு இதோ உள்ளது, அப்படியானால் நம்மைக் குறித்தென்ன? அதனால் நமக்கென்ன? அந்நாட்களில் நடந்ததை நமக்கு எடுத்துக் கூறுவதால் நமக்கு என்ன கிடைக்கிறது? எக்காலத்திலும் இருசாரார் உள்ளனர். 28. நோவாவின் காலத்தில் இரு சாரார் இருந்தனர். ஒரு சாரார் அழிந்து போன துன்மார்க்கர். ஆனால் அழிவினின்று தப்பித்துக் கொண்ட நீதிமான்களும் இருந்தனர். லோத்தின் நாட்களில் மூன்று பிரிவினர் இருந்தனர்: 1. சோதோமில் வாசம் செய்தவர்கள். 2. லோத்தும் அவன் குடும்பமும். 3. ஆபிரகாமும் அவன் குடும்பமும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்கள் அந்நாட்களைப் போலவே முற்றிலும் அதற்கிணையாக இருக்குமானால், அவர்களில் ஒரு சாராருக்கு கிடைத்த ஆவிக்குரிய நன்மைகளை நாம் ஆராய்ந்து பார்த்து அவைகளை நமக்கு பொருத்திக் கொள்ள வேண்டும். நோவாவின் காலத்தைப் பாருங்கள். நோவா நீதியைப் பிரசங்கித்தவனாய் மாத்திரம் இராமல், ஒரு தீர்க்கதரிசியாகவும் விளங்கினான். ஏனெனில் அக்காலத்திற்கான தேவனுடைய வார்த்தை அவனுக்குண்டாகி, அவன் மூலம் அறிவிக்கப்பட்டது. அவன் எச்சரிக்கை விடுத்து பிரசங்கித்தான். அவன் ஒரு பேழையைக் கட்டினான். அது தேவனுடைய முழு ஆலோசனைக்கும் கீழ்ப்படிதலாக அமைந்திருந்தது. அதன் விளைவாக அவனும் மற்றும் ஏழு பேரும் காக்கப்பட்டனர். கிறிஸ்துவின் ஆவி அந்த மனிதனுக்குள் இருந்தது. ஆனால் நோவா தோன்றுவதற்கு முன்பே ஏனோக்கு என்னும் தீர்க்கதரிசி இருந்தான். ஏனோக்கைக் குறித்து வேதாகமம், ஜலப்பிரளயம் உண்டாவதற்கு முன்பிருந்த பயங்கரமான காலத்தில், இவன் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை முன்னறிவித்ததாக உரைக்கிறது. அதை சற்று சிந்தித்துப் பாருங்கள்; முதலாம் வருகையும் கூட நிகழ்ந்திராத போது இரண்டாம் வருகையை முன்னறிவித்தல். நாம் தற்பொழுது இரண்டாம் வருகைக்காக காத்துக் கொண்டிருப்பதனால், இங்கு நாம் ஒன்றை முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். கடந்து போன அந்த காலத்தில், ஜனங்கள் அநேக ஆண்டுகளாக தேவனுக்கும் அவருடைய பரிசுத்தமான வார்த்தைக்கும் விரோதமாக செயல்பட்டு வந்த காரணத்தால் ஒரு தீர்க்கதரிசி எழும்பினான். தேவ குமாரர் மனுஷகுமாரத்திகளிடம் சேர்ந்து தங்களைக் கறைபடுத்திக் கொண்ட காலம் அது. அக்காலத்தில் அறிவு மிகவும் பெருகியிருந்தது, புகழ் வாய்ந்த மக்கள் அங்கிருந்தனர். அவர்கள் அக்காலத்தில் ஐசுவரிய முள்ளவர்களாயும் தங்களுக்கு ஒரு குறைவும் இல்லாமல் இருந்தனர். ஆம், அந்நாட்களில் ஒரு தீர்க்கதரிசி தோன்றினான். அக்காலம் நமது காலத்துக்கு மாதிரியாக இருக்க வேண்டும் என்பதால், இக்காலத்தில் பாவம் பெருகியுள்ளதையும், கிறிஸ்தவர்கள் என்று உரிமை கோருபவர்களிடையே ஆவிக்குரிய காரியங்கள் குறைவாயுள்ளதையும் நாம் வெறுமனே கண்டு அத்துடன் விட்டு விடாமல் வர வேண்டிய அந்த தீர்க்கதரிசியை நாம் எதிர்நோக்கத் தொடங்குவோம். பாவத்துக்கும் அக்கிரமத்துக்கும் எதிராக ஏனோக்கு வன்மையாகப் பிரசங்கித்தான். அவன் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்தும் பிரசங்கித்தான். அப்பொழுது பூமியானது அழிக்கப்படவிருந்தது. அதேபோன்று இப்பொழுதும் விரைவில் நடக்கும். அப்படியானால், ஜலப்பிரளயத்தின் காலம், கர்த்தருடைய வருகைக்கு மிகச் சமீபமாயுள்ள இக்காலத்துக்கு முன்னடையாளமாயுள்ளது எனலாம். நோவாவின் காலத்தில் நீதிமான்கள் இரட்சிக்கப்பட்டனர். தேவன் அதைச் செய்தார். துன்மார்க்கரோ நிர்மூலமாயினர். அது மறுபடியும் சம்பவிக்கும். ஆனால் இதை மறந்துவிட வேண்டாம். அதாவது, அவர்களுக்கு தீர்க்கதரிசியாகிய ஒரு தூதன் இருந்தது போன்று, நமக்கும் ஒருவர் இருப்பார். 29. சோதோம் அழிக்கப்பட்ட லோத்தின் நாட்களை இப்பொழுது எடுத்துக் கொள்வோம். அதன் முழு வரலாறும் ஆதியாகமம் 18, 19ம் அதிகாரங்களில் அடங்கியுள்ளது. துன்மார்க்கருக்கு என்ன நேர்ந்தது என்று மட்டும் நாம் கண்டு சும்மா இருந்துவிடக் கூடாது. நமக்கு கிடைக்க வேண்டிய பாகம் என்ன என்பதையும் நாம் காண வேண்டியவர்களாயிருக்கிறோம். வெள்ளம் போல் சத்துரு வரும் போது தேவன் கொடியேற்றுகிறார். ஏசா. 59:19. "அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந் திசை தொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந் திசை தொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப் படுவார்கள்; வெள்ளம் போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்." நல்லது. சத்துரு வந்துவிட்டான், அப்படியானால் அந்த கொடியேற்றத்தை நாம் எதிர்நோக்கியிருப்போம். லோத்தின் நாட்களில் அக்கிரமத்தின் கோப்பை நிறைந்தபோது. தேவன் தமக்குச் சொந்தமான தெரிந்து கொள்ளப்பட்டவர்களை மறந்து விடவில்லை. அவர்களுக்கு அவருடைய சிறப்பான கவனம் இருந்தது. அந்த கவனம் என்ன? தேவனே ஆபிரகாமுக்கு பிரத்தியட்சமானார். பகலின் உஷ்ணவேளையில் ஆபிரகாம் கூடார வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கையில், மூன்று புருஷர் அவனிடம் வருவதைக் கண்டான். அவன் அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடி, அவர்களில் ஒருவரின் பாதங்களில் விழுந்து, "என் ஆண்டவரே" என்றான். சாயங்கால நேரத்தில் இரண்டு தூதர்கள் (அவர்களும் மனித உருவில் தோன்றினர்.) சோதோமுக்குச் சென்றபோது, தேவன் ஆபிரகாமுடன் பேச ஆரம்பித்தார். தேவன் தீர்க்கதரிசியாகிய ஆபிரகாமுக்கு சோதோமின் அழிவைக் குறித்த வெளிப்பாட்டை அருளினார். ஆதி. 18:18ல் தேவன், "நான் செய்யப் போகிறதை ஆபிரகாமுக்கு மறைப் பேனோ?" என்றார். அவரால் அதை மறைக்கமுடியவில்லை, ஏனெ னில் தேவன் செய்யப் போவதை தமது ஊழியக்காரராகிய தீர்க்க தரிசிகளுக்கு வெளிப்படுத்துகிறார். வரப்போகும் அழிவைக் குறித்து அவர் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கையில், விசுவாசமுள்ள ஆபிரகாம் தான் பெறவேண்டுமென்று வாஞ்சை கொண்டிருந்த வரப்போகும் அந்த குமாரனைக் குறித்தும் அவனுக்கு வெளிப்படுத்துகிறார். இதை கவனியுங்கள். இங்கு தேவன் மாம்சத்தில் தோன்றி, வரவிருக்கும் குமாரன் வரப்போகும் நேரத்தை ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார். அவர் அவ்விதம் செய்யும் போது, சாராள் தன் உள்ளத்தில் நகைக்கிறாள். தேவனுக்குப் பின்புறமாய் அமைந்திருந்த கூடார வாசலில் இருந்த சாராள் தன் உள்ளத்தில் நகைத்ததை தேவன் அறிந்தவராய் அவளுடைய சிந்தனைகளை, அவளுடைய இருதயத்தில் மறைந்திருந்த சிந்தனைகளை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார். அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய தேவன் தாமே சாராளின் இருதயத்திலிருந்ததை அறிந்து கொண்டார். அது அவ்விதம் தான் இருந்தாக வேண்டும். "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத் தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது" என்று எபி. 4:12ல் வாசிக்கிறோம். வார்த்தை அதைதான் செய்கிறது. அது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறது. ஆனால் வார்த்தையே தேவன். எனவே வெளியரங்கமான வார்த்தை (தேவன்) ஆபிரகாமின் முன்னிலையில் அங்கு குழுமியிருந்தவர்களின் இருதயங்களிலிருந்த நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுத்தது. 30. தேவன் புரிந்து இந்தச் செயலையே குமாரனும் (தேவன்) பூமியில் வாழ்ந்திருந்தபோது செய்தார். இந்த அடையாளம்தான், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ளும்படி செய்தது. யோவான் 1:40-51. "யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின் சென்ற இரண்டு பேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்: மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக் கொண்டு வந்தான். இயேசு அவனைப் பார்த்து நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார். கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப் போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு நீ எனக்குப் பின் சென்று வா என்றார். பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான். பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு வந்துபார் என்றான். இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக் கண்டு அவனைக் குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். அதற்கு நாத்தான்வேல் நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய். இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். பின்னும் அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவ தூதர்கள் மனுஷ குமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இது முதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." 31. இந்த அடையாளம் (அதாவது மனிதரின் இருதயங்களில் அடங்கியுள்ள இரகசியங்களை அறிந்து கொள்ளுதல்), நாத்தான் வேல் உடனடியாக நாசரேத்தூரானாகிய இந்த மனிதரை தேவனு டைய குமாரனாக, இஸ்ரவேலின் ராஜாவாக அறிக்கையிட காரண மாயிருந்தது. அதுபோன்று, அதே அடிப்படையில், கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயும் மேசியாவாக ஏற்றுக் கொண்டாள். யோவான் 4:14-29. "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக் காலும் தாகமுண்டாகாது. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும் நான் இங்கே மொண்டு கொள்ள வரா மலிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத் துக் கொண்டு வா என்றார். அதற்கு அந்த ஸ்திரீ : எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். அப் பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுது கொண்டு வந்தார்கள். நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுது கொள்ள வேண்டும் என்கிறீர்களே என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலை யிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுது கொள்ளும் காலம் வருகிறது. நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுது கொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுது கொள்ளுகிற வர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிற வர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும் என்றார். அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். அதற்கு இயேசு உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப் பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது. ஏன் அவளுடன் பேசுகிறீரென்றாவது ஒருவனும் கேட்கவில்லை. அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி: நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்." அவர் தீர்க்கதரிசியாயிருக்க வேண்டும் என்று அவள் அறிந்து கொண்டாள். மேசியா வரும்போது அதைச் செய்வார் என்பதை அவள் அறிந்திருந்தாள். அதுவே மேசியாவின் அடையாளமாயிருக்கும். அதுவே அவரை உறுதிப்படுத்தும் ஒன்றாயிருக்கும். தேவன் குமாரனாக எதை செய்தாரோ, அதையே அவர் பிதாவாகச் செய்தார். அது முற்றிலும் உண்மை. யோவான் 8:56ஐ படியுங்கள். உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான்." இயேசு, அந்த காலத்தில் தாம் இருந்ததைக் குறிப்பிடுகிறார். ஆபிரகாம் உண்மையில் அவருடைய நாளைக் கண்டான் என்று அவர் உரைக்கிறார். அவர் இருந்த அந்த நாள், அந்த காலத்தில். 32. அந்த அறிக்கையின் மூலம் அவர் இதை தான் குறிப்பிடுகிறார். அதாவது, பழைய ஏற்பாட்டில் தேவன் இருமுறை ஆபிரகாமுக்கு மாம்சத்தில் தோன்றினார். முதன் முறை அவர், ராஜாக்களின் யுத்தத்திற்குப் பிறகு தோன்றின போது, அவர் சாலேமின் ராஜா என்று அழைக்கப்பட்டார். பிறகு, சோதோமின் அழிவுக்கு சற்று முன்பு அவர் ஆபிரகாமின் கூடார வாசலில் தோன்றினார். முதன் முறை அவர் தோன்றின போது, அவர் தமது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு வகித்த உத்தியோகமாகிய பிரதான ஆசாரியனுக்கு முன்னடையாளமாகத் திகழ்ந்தார். ஆனால் கூடார வாசலில், அவர் வகித்த ஊழியமாகிய தீர்க்கதரிசிக்கு முன்னடையாளமாயிருந்தார். இந்த உத்தியோகத்தை அவர், தாம் மாம்சத்திலிருந்த நாட்களில் வகித்தார். உபாகமம் 18:15-19, "உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில் நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே. உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்: நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். அவர் கூடார வாசலில் இருந்தபோது, அவர் பூமியிலிருந்தார், அவ்விதமாகவே அவர் இப்பொழுதும் இருக்கிறார். அடையாளம் மாறுவதில்லை. ஆனால் இம்முறை அது, தீர்க்கதரிசிக்குள் இருக்கும் ஆவியானவர் அதே அடையாளத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதாய் அமைந்திருக்கும். அது தீர்க்கதரிசியின் மூலமாய் உண்டாக வேண்டும். ஏனெனில் இஸ்ரவேல் ஜனங்கள், “உம்முடைய சத்தத்தை நாங்கள் கேளாமலும் உம்முடைய அக்கினியை நாங்கள் காணாமலும் இருப்போமாக. மோசேயின் மூலம் எங்களோடு பேசும்" என்று தேவனிடம் முறையிட்ட போது, தேவன் அதற்கு செவி கொடுத்து, அன்று முதல் தீர்க்கதரிசியின் மூலமாகவே பேசிக் கொண்டு வருகிறார். நாம் சோதோம் அழிக்கப்பட்ட லோத்தின் நாட்களுக்கு முற்றிலும் ஒத்த நாளில் வாழ்ந்து கொண்டிருப்போமோனால், கடைசி காலத்து தீர்க்கதரிசி - தூதன் அந்த அடையாளத்தை காண்பிக்கக் கடமைப்பட்டவராயிருக்கிறார். 33. இப்பொழுது இதைக் குறித்து நாம் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கிறிஸ்தவ நண்பனே, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவரே, ஆபிரகாம் சோதோம் நாட்டில் உள்ளவர்களுடன் கலந்து கொள்ளவில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் (என் ஜனங்களே, அவளை விட்டு வெளியே வாருங்கள்). அவர்கள் உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. லோத்து சோதோமில் இருந்தான், ஆனால் அப்பொழுது அவன் தெரிந்து கொள்ளப்படவில்லை. தேவன் அவனை அழைத்து அவனைப் பிரித்தெடுக்கவில்லை. அவன் ஆபிரகாமின் அழைப்பை ஏற்று அதன் காரணமாகவே அவனுடன் வந்தான். அவன் நல்லவன் என்பது உறுதியே. ஆனால் தேவன் அவனுக்குப் பிரத்தியட்சமாகவில்லை, தூதர்கள் மட்டுமே அவன் வெளியேற வேண்டும் என்னும் செய்தியுடன் வந்தனர். லோத்தும் அவனுடைய குமாரத்திகளும் உண்மையில் பிரித்தெடுக்கப்படவில்லை. அவர்கள் உபத்திரவ காலத்தின் வழியாக செல்லவிருக்கும் பெயர் கிறிஸ்தவர்கள். சோதோமியர் துன்மார்க்கரே, அவர்கள் மல்கியாவில் உரைத்துள்ளபடி அழிக்கப்படுவார்கள் - சாம்பலாய் எரிந்து போவார்கள். ஆனால் இந்நேரத்தில், நம்முடைய விசுவாசத்தகப்பனாகிய ஆபிரகாமுடன் தேவன் இடைபட்ட விதமாக, தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுடன் இடைபட்டுக்கொண்டிருக்கிறார் என்று அறிவது எவ்வளவு அற்புதமாயுள்ளது! உண்மையில் ஆபிரகாமின் சந்ததியார் ஆபிரகாமைப் போல் ஆசிர்வதிக்கப்பட்டு, ஆவியின் மூலமாக தேவனால் சந்திக்கப்படுவார்கள். 34. எலியாவைக் குறித்து சிந்திக்காமல், இரண்டாம் வருகையுடன் சம்பந்தப்பட்டுள்ள ஒரு தீர்க்கதரிசியைக் குறித்து பேசுவது முற்றிலும் கூடாத காரியம் என்பதால், இப்பொழுது நாம் எலியாவைக்குறித்து பார்ப்போம். மத்.17:10-13. "அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்: அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்: இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான்ஸ்நானனைக் குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்து கொண்டார்கள். எலியா பூமிக்கு நிச்சயம் திரும்பி வரவேண்டுமென்று இந்த வசனங்களின் மூலம் உடனடியாக கண்டு கொள்ளலாம். (ஆங்கில வேதாகமத்தில் "Elias shall truly first come' என்று 11ம் வசனத்தில் வரப்போகும் ஒரு சம்பவத்தைக் குறிப்பதாக எதிர்காலத்தில் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). அதே சமயத்தில் யோவான்ஸ்நானனை இயேசு எலியாவென்று அழைத்தார் என்பதையும் உடனடியாக கண்டு கொள்ளலாம். யோவான் எலியாவின் மறு அவதாரம் அல்ல. அவன் எலியாவின் மேலிருந்த அதே ஆவியை தன் மேல் பெற்றிருந்த யோவான். எலியாவின் மேலிருந்த ஆவி இரட்டிப்பாக தன் மேல் வரவேண்டுமென்று எலிசா வேண்டிக்கொண்ட போது அவன் இரட்டிப்பான ஆவியைப் பெற்றுக் கொண்டது போன்ற ஒரு காரியம் இது. அது எலிசாவை எலியாவாகச் செய்துவிடவில்லை. அது அதே ஆவியின் மூலம் அந்த ஊழியத்தை அவனுக்களித்தது. இதை நமது காலத்துக்குப் பொருத்தி பாருங்கள். பரிசுத்த ஆவி இறங்கி வந்ததன் மூலம் இதே வகையான ஊழியத்தை கொண்டிருந்த ஒரு தீர்க்கதரிசியை நாம் பெற்றிருப்போம் அல்லவா? அப்படிப்பட்ட ஒருவர் இச்சபை கால முடிவில் தோன்றுவாரா? மல்கியா 4:5-6ஐப் பாருங்கள், "இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். இந்த வேதபாகம் வினோதமான ஒன்றாகும். அது முற்றிலும் வேறுபட்ட காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களை ஒரு மனிதனுடன் சம்பந்தப்படுத்தி காண்பிக்கிறது. இதில் குறிக்கப்பட்டுள்ளவன் எலியாவாகும். இந்த இரு சம்பவங்களும் இயேசு கிறிஸ்துவின் இரு வருகைகளுக்கு முன்பு அவன் தோன்றினதை எடுத்துரைக்கின்றன. அது எலியாவல்ல, ஆனால் "எலியாவின் ஊழியம்" மட்டுமே. வேதத்தில் மறு அவதாரம் என்பது கிடையாது. உண்மையில், இந்த வசனம் இரு நிகழ்ச்சிகளை விளக்குகிறது. மல்கியா 4:6, “அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்குத் திருப்புவான். இது லூக் 1:17ல் உரைக்கப்பட்டுள்ளபடி யோவான்ஸ்நானனைக் குறிக்கிறது. “பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்." பரிசுத்த ஆவி தன் மேல் இறங்கி வந்து எலியாவின் ஊழியத்தை செய்த இவன் மல்கியா 3:1ல் கூறப்பட்டவனே. "இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்." மத். 11:7-10லும் இதே காரியம் உரைக்கப்பட்டுள்ளது. "அவர்கள் போன பின்பு, இயேசு யோவானைக் குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னெவன்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? அல்லவென்றால், எதைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித் திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். அல்லவென்றால், எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். மல்.4:6ல் சுட்டிக்காட்டின்படி, அந்த வசனத்தின் முதல் பாகம்தான் எலியாவின் ஊழியத்தை தன் மேல் கொண்டிருந்த யோவான்ஸ்நானனைக் குறிக்கிறது. அதன் கடைசி பாகம் அதே ஊழியத்தைக் கொண்டிருக்கும் மற்றொரு தூதனைக் குறிப்பதாகும். அவர் ஏதோ ஒரு நேரத்தில் பிள்ளைகளின் இருதயங்களை அவர்கள் பிதாக்களிடத்திற்கு திருப்புவார். இவ்விருவரும் ஒரே நபர் அல்ல அவர்கள் முற்றிலும் வேறுபட்ட காலங்களில் தோன்றும் வெவ்வேறு நபர்கள். இந்த தீர்க்கதரிசி இன்று தோன்றுவாரானால், அவர் நமது காலத்தின் எலியாவாக இருப்பார். அவர் யோவானுக்குப் பிறகு 2000 ஆண்டுகள் கழித்து வாழும் ஒருவராக இருப்பார். 35. இப்பொழுது மல். 4:கன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள, "அவன் பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்தில் திருப்புவான்" என்பதில் அடங்கியுள்ள கருத்தை நாம் கவனமாக ஆராய்வோம். 36.தேவதூதன் விவரித்தபடி பிதாக்களின் இருதயங்களைப் பிள்ளைகளிடத்தில் திருப்புதல் என்பது 'ஆயத்தமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்துவதற்கே'. ரோமர் 9:23ல், "தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபா பாத்திரங்கள் மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய்" என்று நாம் வாசிக்கிறோம். இந்த கிருபாபாத்திரங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகள். இவர்கள் ஆயத்தப்படுத்தப்பட்டவர்கள். யோவானின் ஊழியம் இந்த தெரிந்து கொள்ளப்பட்ட பிதாக்களுடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்குத் திருப்ப ஏதாவதொன்று செய்யப்பட வேண்டியதாயிருந்தது. அது யோவானின் ஊழியத்தின் மூலமே நிறைவேற வேண்டும். அது அவ்வாறே அவனுடைய ஊழியத்தின் மூலம் நிறைவேறினது. யோவான் தோன்றின் போது பிதாக்கள் தேவனுடைய வார்த்தையைக் கடைபிடிக்காமல், தங்கள் சொந்த உபதேசங்களைப் பின்பற்றி வந்தனர். அவர்கள் பாவம் செய்து வந்து, அதை நீதியான செயல் என்று அழைத்து வந்தனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையை அவமாக்கினர். யோவான் காட்சியில் தோன்றி முழங்கினான். அவன் ஆட்டுத்தோலை உடுத்தினவனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்தான். அவனுடைய வெளித்தோற்றம் கரடுமுரடாய் இருந்தது. அவனுடைய வழிகள் தைரியமாயும் வெட்டுவதாயும் அமைந்திருந்தன். அவன் தேவனுடைய வார்த்தையினாலும் அவருடைய ஆவியின் பட்டயத்தினாலும் வெட்டிக் கொண்டே சென்றான். அது பாதாளத்தின் வாசல்களைக் காட்டிலும் பெலனுள்ளதாக அமைந்திருந்தபடியால், அது மனிதரின் இருதயங்களில் ஊடுருவிப்பாய்ந்து அநேகரை மனந்திரும்புதலின் ஞானஸ்நானத்துக்கும் மேசியா வரவிருக்கிறார் என்னும் விசுவாசத்துக்கும் கொண்டு வந்தது. யோவானால் ஆவியில் தொடங்கப்பட்ட ஊழியம் இயேசுவால் தொடர்ந்து செய்யப்பட்டது. ஏனெனில் யோவான் சிறுகவும் இயேசு பெருகவும் வேண்டியதாயிருந்தது. பிதாக்களின் இருதயங்கள் (எழுதப்பட்ட) வார்த்தைக்கு திருப்பப்பட்டதால், (மாம்சத்தில் வெளிப்பட்ட வார்த்தைக்கு திரும்புவதென்பது அவ்வளவு கடினமாகத் தோன்றவில்லை. இந்த சீஷர்கள் பின்னர் அப்போஸ்தலர்களாக மாறி, அவர்கள் சபைக்குப் பிதாக்களாயினர். ஏனெனில் புறஜாதிசபை அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளின் மேல் கட்டப்பட்டுள்ளது. எபே 2:19, 20, “ஆகையால் நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். ஆனால் ஒரு யூதனுடைய இருதயம் இயல்பாக புறஜாதிக்கு விரோதமாகவே உள்ளது. எனவே தாமாகவே அவர்கள் புறஜாதிகளை ஏற்றுக் கொண்டிருந்திருக்கமாட்டார்கள். ஆனால் இருதயங்களை வார்த்தைக்குத் திருப்பின் யோவானின் ஊழியத்தினால் ஏற்பட்ட இந்த பெருத்த மாறுதலின் விளைவினால், அப்போஸ்தலர்கள் தேவனுடைய பிள்ளைகளிடத்துக்கு, அவர்கள் புறஜாதிகளாய் இருந்தபோதிலும், செல்ல நேர்ந்தது. அப். 15:14-18. "தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்து கொள்ளும்படி முதல் முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே. அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது. எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு, நான் இதற்குப் பின்பு திரும்பி வந்து, விழுந்து போன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப் போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. உலகத் தோற்ற முதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது. யோவான் தேவனுடைய வார்த்தையை மிகவும் நன்றாக எடுத்துரைத்ததன் விளைவாக பிதாக்கள் புறஜாதி பிள்ளைகளைக் குறித்த முழு வெளிப்பாட்டையும் பெற்று, அவர்களுடைய இருதயங்கள் இந்த பிள்ளைகளிடத்தில் திரும்பின. ஆனால், "பிதாக்கள் நித்திரையடைந்த முதற்கொண்டு, சபை வழிவிலகிச் சென்றது. இன்னும் ஒருமுறை தேவனுடைய வார்த்தை கைவிடப்பட்டு, அதற்கு பதிலாக மனிதர் பாரம்பரியங்களை ஏற்றுக் கொண்டனர். இப்பொழுது ஒரு மனிதன், ஒரு தீர்க்கதரிசி வர வேண்டும், அவர் மேல் எலியா, எலிசா, யோவான் ஆகியோரின் மேல் தங்கியிருந்த அதே ஆவி தங்கியிருக்கும். அவர் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வந்து, பிள்ளைகளுடைய இருதயங்களை பிதாக்களிடத்திற்கு, உண்மையான வார்த்தைக்கு, முதலில் பிரசங்கிக்கப்பட்ட வார்த்தைக்கு, வார்த்தையைத் தொடரும் அடையாளங்களுக்குத் திருப்புவார். தம்முடைய மணவாட்டியை எடுத்துக் கொள்வதற்கென வரவிருக்கும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு அவர் முன்னோடியாயிருப்பார். 37. ஆம், மணவாட்டியை திரும்பவும் வார்த்தைக்கும் விசுவாசிகளைத் தொடரும் மகத்தான கிரியைகளுக்கும் கொண்டு வருவதற்கென ஒரு தீர்க்கதரிசி - தூதன் வருவார் வெளி. 10:ன்படி, அவரிடம் ஒரு செய்தி இருக்கும். அவர் அதிக காரியங்களைப் பேசுவார். இரண்டாம் வருகைக்கு முன்பு வரும் அந்த செய்தியில், இதுவரையிலும் மறைவாயிருந்த இரகசியங்களை வெளிப்படுத்துவதற்கு தேவனால் அவருக்கு வல்லமை அளிக்கப்பட்டிருக்கும். இது ஒருக்கால் ஒரு பெரிய கட்டளையாக தொனிக்கக் கூடும். அது அப்படித்தான், இருப்பினும் அது நிறைவேற வேண்டும். இது ஏன் அவ்விதம் இருக்க வேண்டும் என்பதன் காரணம் மிகவும் அடிப்படையானதால், இதற்கு விளக்கம் தேவையில்லை. எனினும் இதற்கு விளக்கம் அளிக்க முற்படுகிறேன். முதலாம் தூதனான பவுல் "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதைக் கொண்டிருந் தான். அன்று முதல் வேதவாக்கியங்களின் அர்த்தத்தின் பேரில் நமக்கு பிரிவினையைத்தவிர வேறொன்றும் இருக்கவில்லை. 38. உண்மையைக் கூறினால், தற்போதைய காலம், மனிதருடைய கற்பனைகள் தேவனுடைய வார்த்தையை அவமாக்கிப் போட்டதாக இயேசு குறிப்பிட்ட அந்த காலத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது. ஸ்தாபனங்கள் தங்கள் சொந்த நோக்கங்களையும் வாஞ்சைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கென தேவனுடைய வார்த்தையை மாற்றி அமைத்துக் கொண்டதன் விளைவாக, தேவனுடைய வார்த்தையின் உண்மையான அர்த்தம் பெரும்பாலும் இழக்கப்பட்டு விட்டது. 39. பவுல் தன் நாட்களில் தேவனுடைய வார்த்தையின் முழு அர்த்தத்தையும் எடுத்துரைத்தான். ஆனால் மாம்ச சிந்தை கொண்டவர்கள் அதற்கு வியாக்கியானம் அளிக்க முயன்ற போது, அது இழக்கப்பட்டு விட்டது. வியாக்கியானத்தின் அடிப்படையில் பிரிந்து போன ஒவ்வொரு குழுவும், அது கூறுவதே சரியென்றும் அது பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுவதாகவும் கூறிக் கொள்கின்றது. அவர்களில் சிலர் அல்லது எல்லோருமே தவறாக இருக்க வேண்டும், ஏனெனில் பரிசுத்த ஆவி பொய்யுரைத்து பிரிவினை உண்டாக்குவதில்லை. மேலும் அவர் இரு சிந்தை கொண்டவரல்ல. எனவே, "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதைக் கொண்டுள்ள ஒரு தீர்க்கதரிசியை இன்று நாம் பெற்றிருத்தல் அவசியம். அவர் பிள்ளைகளின் இருதயங்களை பிதாக்களின் முழு சத்தியத்துக்கு கொண்டு வருவார். மூல வார்த்தையில் நிலைத்திருத்தல் வல்லமையைக் கொணர்ந்தது. நாம் உண்மையான அர்த்தத்துக்கு திரும்பி அதன் பிறகு அதில் நிலைத்திருக்க வேண்டும். மணவாட்டி வார்த்தை மணவாட்டியாகும்போது, அவள் கிறிஸ்து செய்த அதே கிரியைகளை செய்வாள். அந்த தீர்க்கதரிசி - தூதன் வந்து வார்த்தையின் செய்தியை அளித்து, அதன் விளைவாக இயேசு இன்னும் ஒரு முறை நம்மிடையே ஆவியில் தம்மை வெளிப்படுத்துவதற்கு நாம் எவ்வளவாய் காத்திருக்கிறோம்! 40. இந்த லவோதிக்கேயா காலத்து தூதன் மேல் மிகப் பெரிய பொறுப்பு வைக்கப்பட்டிருக்கும். மற்ற தீர்க்கதரிசிகளுக்கு, முக்கியமாக மோசேக்கு, இதேவிதமாகத்தான் இருந்தது. மோசேயின் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் பார்வோனினால் மிகவும் துன்புறுத்தப்பட்டனர். மோசே தோன்றி, தன்னைத் தீர்க்கதரிசி யென்று அறிவித்து, அவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட தேவனுடைய வார்த்தைக்கு ஜனங்களைக் கவர்ந்து, அவர்களை அதற்கு கீழ்படியச் செய்ய, தேவனால் அவனுக்கு அளிக்கப்பட்ட அடையாளங்களை அவன் பெற்றிருத்தல் அவசியமாயிருந்தது. இதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். எபிரேயர்களுக்கு ஏறக்குறைய 400 ஆண்டு காலமாக ஒரு தீர்க்கதரிசி இருக்க வில்லை. இந்த நீண்ட காலத்தில், அநேக சந்ததிகள் தோன்றி, அவை தேவனுடைய வல்லமையைக் கொண்ட சத்தியத்தையும் தேவனுடைய வழிகளையும் அறியாமலேயே மறைந்து போயிருக்கும் எனவே ஜனங்களுடைய கவனத்தைக் கவர்ந்து அவர்களுடைய இருதயங்களைக் கொள்ளை கொள்ள, மோசே தன் ஊழியத்தில் இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்களைப் பெற்றிருத்தல் அவசியம். யோவானும் இயேசுவும் தோன்றினபோதும், இதேவிதமான சூழ்நிலைதான் இருந்தது. அச்சமயத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு 400 ஆண்டு காலமாக தீர்க்கதரிசி இராமல், அதன் விளைவாக சத்தியமானது குன்றிக் கொண்டே வந்து, மனித பாரம்பரியங்களில் முடிவடைந்திருந்தது. இஸ்ரவேல் ஜனங்களை ஒரு தீர்க்கதரிசியின் மூலம் சத்தியத்துக்கு திருப்புவதென்பது எவ்வளவு கடினமுள்ளதாய் இருந்திருக்கும்! எனவே தேவன் மோசேயை அனுப்பின போது, அவனை இரு அடையாளங்களுடன் அனுப்பினார். ஜனங்கள் முதலாம் அடையாளத்தை (அதாவது கோல் சர்ப்பமாக மாறுவதை) ஏற்க மறுத்தால், அவர்கள் இரண்டாம் அடையாளத்தின் சத்தத்துக்காவது (அதாவது மடியில் போடப்பட்ட கை குஷ்டமாக மாறி மீண்டும் குஷ்டம் நீங்கி சுத்தமாகுதல்) செவி கொடுப்பார்கள். யாத் 4:8, "அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவி கொடுக்காமலும் போனால், பிந்தின் அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள். (ஆங்கில வேதாகமத்தில் 'Voice of the first sign', 'voice of the second sign', அதாவது 'முந்தின அடையாளத்தின் சத்தம்', 'பிந்தின அடையாளத்தின் சத்தம்' என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). தேவன் இந்த அடையாளங்களை 'சத்தங்கள் என்று குறிப்பிட்டார். மோசேயின் ஊழியத்தில் ஒவ்வொரு முறையும் அடையாளம் தோன்றின் போது, அது ஜனங்களிடம் பேசின தேவனுடைய சத்தமாயிருந்தது. அது இரண்டு காரியங்களைச் செய்யும். அது ஒருவனை வரும்படி தூண்டி, மற்றவனுடைய இருதயத்தை இன்னும் அதிகமாக கடினமாக்கும். அதைதான் அடையாளம் செய்தது. அதைதான் தேவனுடைய சத்தம் செய்கிறது. அது சிலரை தன் பக்கமாக இழுத்து, அவர்கள் அடையாளத்துக்கு அருகில் வருகின்றனர். மோசசேயும் கூட முட் செடி எரிந்தபோது, அதன் அருகில் சென்றான். ஆனால் அதே சமயத்தில், அழைக்கும் இந்த சத்தம் இருதயத்தை இன்னும் அதிகம் கடினப்படுத்தி தேவனைப் புறக்கணிக்கச் செய்கிறது. அவ்வாறே பார்வோனுக்கு நேர்ந்தது. அவ்வாறே பரிசேயர்களுக்கு நேர்ந்தது. ஆனால் மோசே சோர்ந்து போகவில்லை. அவன் அதை தொடர்ந்து செய்தான். அவனுடைய அழைப்பில் தேவன் அவனோடுகூட இருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான், ஏனெனில் அவன் கீழ்ப்படிந்த சத்தம் வேதப்பூர்வமான சத்தம். மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையுடன் ஒன்றாயிருப்பான். முட்செடியிலிருந்து பேசின சத்தம், அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய ஆபிரகாமுக்கு அளிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையை உரைத்தது. அது "என் ஜனங்களுக்கு நான் அளித்த வாக்குத்தத்தத்தை நினைவுகூருகிறேன்" என்றது. எனவே அதற்கு செவி கொடுத்து அவன் கீழ்படிந்தான். அவ்விதம் அவன் செய்தபடியினால் அந்த சந்ததியிலிருந்த ஜனங்களுக்கு தேவனுடைய வாக்குத்தத்தத்தை அவன் கொண்டு வந்தான். 41. தேவன் அந்த அடையாளத்தின் மூலம் பேசின போது, ஒரே ஒரு வழி மாத்திரமே இருந்தது. அதாவது இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு வெளியேற வேண்டும் - அவர்களின் புறப்பாடு நிகழ வேண்டும். அது போன்று முடிவான உறுதிப்படுத்தும் அடையாளம் ஒன்று இருக்கும், அப்பொழுது நம்முடைய நாளும் முடிவடையும் - எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழ வேண்டும். “இதோ தேவ ஆட்டுக்குட்டி" என்று யோவான்ஸ்நானன் உரைத்தது போல கடைசி காலத்து தூதனும் சந்தேமின்றி" இதோ மணவாளன் வருகிறார் என்றுரைப்பார். அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுடைய இரகசியங்களை வெளிப்படுத்தின தன் விளைவாக ஆதி சபையில் வல்லமையுடன் கூடிய விசுவாசம் காணப்பட்டது போல், இப்பொழுதும் இந்த கடைசி தீர்க்கதரிசி பவுல் பிரசங்கித்த சத்தியத்தை வெளிப்படுத்தும்போது, வார்த்தையை திடமாக அடிப்படையாகக் கொண்ட விசுவாசத்தை ஆதி சபைக்கு அளித்த அதே வார்த்தை இப்பொழுது, அந்த விசுவாசத்தை மீண்டும் கொண்டு வரும். அது கர்த்தரை ஆகாயத்தில் சந்தித்து, அவருடன் என்றென்றைக்கும் இருக்கும்படியான எடுத்துக் கொள்ளப்படுதலுக்கேற்ற விசுவாசமாயிருக்கும். 42. அப்படியானால் நமக்கு மிகவும் முக்கியமான ஒரு ஊகம் உண்டு. நாம் தேவனுடைய வசனத்திலிருந்து எடுத்துக் காட்டின அத்தகைய தீர்க்கதரிசி காட்சியில் தோன்ற வேண்டும். இது கடைசி காலம் என்பதைக் குறித்து நமக்கு எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அந்த தீர்க்கதரிசி யார் என்பதைக் குறித்த சந்தேகம் எழக்கூடும். அவர் யார்? அவர் எங்கிருக்கிறார்? தரிசனங்களாலும், அடையாளங்களாலும் அற்புதங்களாலும் தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட இந்த மனிதன் யார்? ஒரு முறையாவது வெளிப்பாடு தவறாத அந்த மனிதன் யார்? பரிசுத்த வேதாகமத்தை விட்டு விலகாமல், வார்த்தையின் மூலம் மனிதரை தேவனிடம் வழி நடத்தும் இவர் யார்? அத்தகைய ஒரு மனிதனை நாம் எதிர்நோக்கியிருக்கிறோம். வெற்றிகொள்ளும் சத்தியத்தின் தீர்க்கதரிசியாகிய அந்த மனிதன் இப்பொழுதே நம்மிடையே இருக்க வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட தூதன் உறுதிப்படுத்தின அடையாளங்கள் 43. இந்த கடைசி காலத்திற்கு ஒரு தீர்க்கதரிசி - தூதன் இருக்கிறார் என்பதைக் குறித்து யாதொரு சந்தேகமும் இருக்க முடியாது. அப்படியானால், அந்த தூதனைத் தேடுவது அதிமுக்கியமானதும் உடனடியாக செய்யப்பட வேண்டிய ஒரு செயலுமாகும். இன்றைக்கு அத்தகைய மனிதர் வாழ்ந்து கொண்டிருப்பாரானால், அவர் ஏற்கனவே தமது ஊழியத்தை ஒருவாறு செய்து கொண்டிருக்க வேண்டும். அவர்தான் அந்த தூதன் என்பதை உறுதிபடுத்தும் ஒரு ஊழியம் இருந்தாக வேண்டும். இந்த மனிதன் இக்காலத்து மார்க்கங்களாலும் மத ஒழுங்குகளாலும் அடையாளம் கண்டு கொள்ளப்படமாட்டார் என்பதை நாம் வேதத்திலிருந்து அறிந்து கொண்டிருக்கிறோம். எனவே அவரை நாம் அங்கு தேடமுடியாது. அவர் மகத்தான மதகுருவானவர்களில் ஒருவராக எண்ணப்படமாட்டார். உண்மையைக் கூறினால், அவர் யோவான் ஸ்நானன் அல்லது இயேசுவைப் போல் புகழில்லாதவராக இருப்பார். அவருடைய பிறப்பு மற்ற தீர்க்கதரிசிகளின் பிறப்பு போல் மிகவும் எளிமையான ஒன்றாக இருக்கும். அவருடைய ஊழியத்தின் பெரும் பகுதி சர்ச்சைக்குரியதாகவும் அதன் ஒரு பாகம் வரவேற்கப்படுவதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவர் வேதப்பிரகாரம் செயல்படுவாரானால் இவையனைத்தும் உண்மையாயிருக்கும். அவர் தூதனாயிருந்தால், அவர் நிச்சயமாகவே வேதம் உரைத்துள்ளபடியே செயல்படுவார். லவோதிக்கேயா காலத்து தீர்க்கதரிசி - தூதன் என்று வேதப்பூர்வமாக முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்ட அத்தகைய ஒரு மனிதன் இன்று உலகில் இருக்கிறார். வேதத்தில் உரைக்கப்பட்டுள்ள தகுதி அனைத்தும் அவரில் காணப்படுகின்றது. அவருடைய ஊழியத்தின் ஒரு பாகம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மற்ற பாகம் ஏற்றுக்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அவருடைய பிறப்பு. வளர்ந்த முறை, படிப்பு, பிரசங்கம், போதகம், ஆவியில் ஊழியம் செய்தல் ஆகிய அனைத்துமே வேதப்பிரகாரமான தகுதியைப் பெற்றுள்ளன. எனவே இவை அவரை உறுதிப்படுத்துகின்றன. 44. அந்த மனிதன் சங்கை வில்லியம் பிரான்ஹாம் என்பவரே. அவர் இப்பொழுது அரிசோனாவிலுள்ள டூசான் என்னுமிடத்தில் வாழ்ந்து வருகிறார். இதற்கு முன்பு அவர் இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில் என்னுமிடத்தில் வசித்து வந்தார். அவருடைய வாழ்க்கையின் பெரும் பாகத்தை அவர் அங்குதான் கழித்தார். வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்பவர் 1909ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதியன்று மிகவும் இளமையான ஒரு தம்பதிகளுக்கு, கென்டக்கியிலுள்ள பர்க்ஸ்வில் (Burksville) என்னுமிடத்தில் மிகவும் எளிமையான ஒரு மரக்குடிலில் பிறந்தார். அவர் பிறந்த பிறகு இரண்டு நாள் வரைக்கும், அவருடைய பதினைந்து வயது தாயாரும், பதினெட்டு வயது தந்தையும், அவரைக்காண வந்திருந்தவர்களும், சன்னல் வழியாக உள்ளே நுழைந்த ஒரு வெண்மையான மங்கலான ஒளி அவர் கிடத்தப்பட்டிருந்த இடத்தில் அவருடைய தலைக்கு மேல் நின்று கொண்டிருப்பதைக் கண்டனர். அதன் முக்கியத்துவத்தை எவருமே புரிந்து கொள்ள இயலவில்லை. எனவே அது அவருடைய வருங்கால வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட ஒன்று என்று அவர்கள் அறிந்து கொள்ள வில்லை. அவரால் புரிந்து கொள்ள இயலாத அநேக தரிசனங்கள் அவருக்கு உண்டாயின், இருப்பினும் ஏதாவதொரு தரிசனம் வருங்காலத்தில் நிகழவிருக்கும் ஒரு சம்பவத்தைக் குறித்து உண்டானால், அது நிறைவேறாமல் போனதே இல்லை, அவர் கண்ட விதமாகவே அது நிறைவேறிற்று. அவருக்கு ஏழு வயதான போது, ஒரு நாள் அவர் தன் தந்தைக்காக தண்ணீர் சுமந்து வருகையில், அவர் சிறிது நேரம் ஒரு மரத்தின் கீழ் இளைப்பாறினார். அப்பொழுது அந்த மரத்தின் இலைகளின் வழியாய் காற்றடிக்கிற ஒரு சத்தம் வருவதைக் கேட்டு அவர் திகைத்துப் போனார். அவர் நிமிர்ந்து மேலே நோக்கிய போது, இலைகளின் அசைவு ஒன்றையும் அவர் காணவில்லை. அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்கையில், அந்த சத்தம் மறுபடியும் உண்டானது. இம்முறை அதன் சத்தம் அதிகமாக இருந்தது. அவர் மேல் நோக்கிய போது. மரத்தில் ஒரு சுழல் காற்றைக் கண்டார். அந்த சுழல் காற்றிலிருந்து செவிகள் கேட்கத்தக்க ஒரு சத்தம் உண்டாகி, "புகை பிடிக்காதே, மது அருந்தாதே, உன் சரீரத்தை எவ்வகையிலும் தீட்டுப்படுத்தாதே, நீ பெரியவனாகும் போது நீ செய்ய வேண்டிய பணி ஒன்றுண்டு" என்றது. அவர் மிகவும் பயந்து போய், அலறிக் கொண்டே வீட்டுக்குள் ஓடினார். அவரால் அவருக்கு நேர்ந்த அனுபவத்தை தன் தாயாரிடம் கூற இயலவில்லை. எனவே வில்லியம் மிகவும் பயந்த சுபாவமுள்ளவர் என்றும், அவருக்கு ஓய்வு தேவை என்றும் அவருடைய தாயார் முடிவு செய்தார்கள். 45. சில வாரங்கள் கழித்து அவர் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர் ஒரு தரிசனம் கண்டார். அந்த தரிசனத்தில் அவர் ஓஹையோ நதியின் மேல் ஒரு பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் (அவர் அப்பொழுது இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில் என்னுமிடத்தில் வசித்து வந்தார்). கூலியாட்கள் அதை கட்டிக் கொண்டிருக்கும் போது, ஒரு பாகம் இடிந்து விழுந்து, வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இறந்து போனதாகவும் கண்டார். இருபத்திரண்டு ஆண்டுகள் கழித்து, அவர் தரிசனத்தில் கண்ட அதே இடத்தில் பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கையில், ஒரு பாகம் இடிந்து விழுந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த மனிதருக்கு மரணத்தை விளைவித்தது. அவர் ஆவியில் வளர்ந்த குடும்பத்தில் பிறக்காததால் (அவருடைய தந்தை அடிக்கடி கள்ளச் சாராயம் காய்ச்சி விற்று வந்தார்) தேவன் அவருடன் இடைபட்டுக்கொண்டிருப்பதை அவர் அறிந்து கொள்ளவில்லை. எனவே அவருடைய தந்தையும் கூட்டாளிகளும் அவரைக் கட்டாயப்படுத்தின்போது, அவர் குடித்தல், புகை பிடித்தல், நடனங்களுக்குச் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபட முயன்றார். ஆனால் அவர் முயற்சிகளில் தோல்வி கண்டார், ஏனெனில் அவர் புகை பிடிக்க, குடிக்க முயன்ற ஒவ்வொரு முறையும், காற்றடிக்கிற அந்த வினோதமான குரலை அவர் கேட்டு, காணக்கூடாத ஒருவரின் பிரசன்னத்தை உணர்ந்தார். இதன் விளைவாக அவர் ஏமாற்றமும் நடுக்கமும் அடைந்து, அவருடைய வினோதமான வாழ்க்கையிலிருந்து விலக முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை. இரு தருணங்களில் சோதிடர்கள் அவரை அணுகி, அவர் ஒரு அடையாளத்தின் கீழ் பிறந்துள்ளதாக அவருக்கு விளக்க முயன்றனர். அவர்கள் இருவருமே அவர் ஒரு வரத்தைப் பெற்றுள்ளதாகக் கூறினர். ஆனால் அவர்களால் அது என்ன வரமென்று கூற இயலவில்லை. அவர்களில் ஒருவர் வேதவாக்கியங்களைக் கொண்டு அவருக்கு விவரித்தார். கூறப்பட்டவைகளில் அவர் சிறிது சிரத்தை காண்பித்த போதிலும், அவரால் முடிந்தவரையில் அதை அலட்சியப்படுத்த முயன்றார். பிற்காலத்தில் அவர், சோதிடர்கள் அசுத்த ஆவிகளின் சொற்களைக்கூற உபயோகிக்கப்படும் நபர்கள் (Mediums) என்று இவர்களைப் புரிந்து கொண்டு, இயேசுவின் நாமத்தினால் அவர்கள் மீது அதிகாரம் செலுத்தி, அவர்களைக் கடிந்து கொண்டார். சோதிடர்கள் அவரை அணுகின போது, அவர் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. 46. அவருக்கு ஏறக்குறைய பதினெட்டு வயதான போது, மாட்டுப் பண்ணையில் வேலை செய்ய அவர் மேற்கு பாகத்துக்குச் சென்றார். ஆனால் அவருடைய சகோதரன் மரணமடைந்தார் என்னும் வருத்தமான செய்தி அவரை விரைவில் வீட்டிற்குக் கொண்டு வந்தது. இந்த மரணத்தினால் ஏற்பட்ட வருத்தமும் அவருடைய விசித்திரமான வாழ்க்கையினால் அவருக்குண்டான அழுத்தமும், அவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படக் காரணமாயிருந்தது. அவருடைய உடல் பெலவீனமடைந்து. அவருக்குக் குடல்வாய் நோய் (appendicitis) உண்டானது. அறுவை சிகிச்சை தவிர்க்க முடியாமல் போய் விட்டது. அறுவை சிகிச்சையின் போது அவர் மயக்கத்தில் இருக்கையில், அவருடைய உயிர் அவருடைய உடலை விட்டுப் பிரிந்து போவதை அவர் உணர்ந்தார். சிறிது நேரம் உயிரற்ற அவருடைய உடல் அறுவை சிகிச்சை செய்யும் மேசையின் மேல் கிடந்திருந்தது. அவருக்கு இருதயத் துடிப்பை மீண்டும் கொண்டுவர மருத்துவர்கள் முழு மூச்சுடன் முயன்றனர். அந்த நேரத்தில் அவர் பரலோகம். பாதாளம் இவைகளின் தரிசனங்களைக் கண்டார். அவர் தேவனிடம் மன்றாடி, தேவன் அவருக்கு மீண்டும் உயிரைத்தருவாரானால், அவரைத் தேடி அவரைச் சேவிப்பாரென்று வாக்களித்தார். அவர் மீண்டும் உயிர் பெற்றதைக் கண்டு, மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். அவர் அளித்த வாக்கின்படியே, அவர் தேவனைத் தேடினார். ஒருநாள் அவர் மரக்கொட்டிலில் தனியாக ஜெபித்துக் கொண்டிருக்கையில், ஒளிவடிவில் ஒரு சிலுவை அவருக்குக் காணப்பட்டது. அந்த சிலுவையிலிருந்து ஒரு சத்தம் எழுந்து அவருக்குத் தெரியாத ஒரு மொழியில் பேசினது. அதன்பிறகு அந்த சிலுவை மறைந்த போனது. வியப்பும் பயமும் அவரைக் குடிகொண்டு அவரைத் திகைப்பில் ஆழ்த்தியது. அவர் புதிய ஏற்பாட்டைப் படித்துக் கொண்டு வந்ததனால், வெவ்வேறு ஆவிகள் உள்ளதை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே இது தேவனால் உண்டானதோ இல்லையோ என்று அவர் வியந்தார். இன்னும் ஒரு முறை அவர் தேவனிடம் ஊக்கமாக ஜெபித்தபோது ஒளிவடிவில் அந்த சிலுவை மீண்டும் தோன்றி, பரிசுத்த ஆவியானவர் அவருடைய இருதயத்துக்கு சமாதானம் அருளினார். இரட்சிப்பின் சந்தோஷம் அவருடைய ஆத்துமாவை வெள்ளம் போல் நிரப்பின போது, அவர் குதித்தெழுந்து, அவருடைய பாவம் மன்னிக்கப்பட்டு, அவர் தேவனுடன் ஒப்புரவான காரணத்தால் உணர்ச்சிமிகுந்தவராய் ஓடினார். 47. அவருடைய வாழ்க்கையில் அது உண்மையில் தேவனாயிருந்த படியால், அவருக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் கிடைக்கும் என்பதை அவர் புரிந்து கொண்டார். ஒரு நாள் அவர் தேவனை நோக்கிக் கொண்டிருக்கையில், அவர் உடலின் மேல் மழை பெய்வது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. உண்மையாகவே அது அவருடைய உடலின் மேல் பொழிந்து அவருக்குள் ஆழமாக பதிந்தது. அவர் முழுவதுமாக பரிசுத்த ஆவியினால் நிரம்பி வழிந்தார். அவர் மிஷனரி பாப்டிஸ்டுகளை நாடி. அவர்களிடம் தலை சிறந்த ஐக்கியத்தையும் போதகத்தையும் பெற்றுக் கொண்டார். விரைவில் அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க குரு பட்டம் பெற்றார். தேவன் அவருடைய ஊழியத்தில் அவருக்கு சிறந்த வெற்றியை நல்கினார். அவருடைய கூடாரத்தில் பலமுறை 3000 பேர் குழுமியிருந்தனர், அநேகர் மறுபிறப்பின் அனுபவத்தைப் பெற்றனர். 1933ம் ஆண்டு ஜூன் மாதத்தில், அவர் ஓஹையோ நதியில் மனம் மாறியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கையில் திகைப்பூட்டும் ஒரு காட்சி உண்டானது. அது செய்தித்தாள்களில் விரிவாக வெளியிடப்பட்டது. அவர் அங்கு குழுமியிருந்த 4000 பேருக்கு முன்பாக பதினேழாம் நபருக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கையில், வானத்திலிருந்து ஒளிமிக்க ஒரு சிறு நட்சத்திரம் சுழன்று கீழே இறங்கி வந்தது. அப்பொழுது காற்றடிக்கிற முழக்கம் போன்று உண்டான சத்தத்தை அங்குள்ளவர் அனைவரும் கேட்டனர். அது இறங்கி வந்து அவர் மேல் வட்டமிட்டது. அங்கிருந்தவர்களில் பலர் திகிலடைந்து ஓடிவிட்டனர், மற்றவர்கள் முழங்கால்படியிட்டு ஜெபித்தனர். அந்த அக்கினிஸ்தம்பத்திலிருந்து ஒரு சத்தம் அவருக்குண்டாகி, "கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு யோவான் ஸ்நானன் முன்னோடியாயிருந்தது போல, உன் செய்தி கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக அமைந்திருக்கும்' என்றது. இவர் மட்டும் அந்த சொற்களைக் கேட்டார், மற்றவர்களோ சத்தத்தை மாத்திரம் கேட்டனர். இவ்வாறு தான் பவுல் தேவனால் குருடாக்கப்பட்ட போது, அவன் மட்டும் தேவன் பேசின் சொற்களைக் கேட்டான், மற்றவர்களோ சத்தத்தை மட்டும் கேட்டனரேயன்றி, அந்த சத்தத்திலிருந்து எழுந்த சொற்களைக் கேட்கவில்லை. 48. அவர் தேவனுடைய முழு வார்த்தையின் பேரில் திடமான நம்பிக்கை கொண்டிருந்து. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதில் உறுதியாக நின்றிருந்தபடியால், வியாதியஸ்தருக்காக ஜெபிக்க அவர் தயங்கவில்லை. எனவே அவருடைய ஊழியம் முழுவதிலும் அவர் பிணியாளிகளுக்கு உதவி செய்து வந்தார். அவருடைய ஜெபத்தினால் நேர்ந்த விளைவுகள் மிகவும் திருப்திகரமாக அமைந்திருந்து, முடிவில் மருத்துவர்களும் கூட தேவனுடைய வல்லமையை ஒப்புக்கொண்டு, அந்த "சிறு உருவம் படைத்த பாப்டிஸ்ட் பிரசங்கியார்" வருவாரானால், யாராகிலும் ஒருவர் குணமாகி விடுவார் என்பதை அறிந்து கொண்டனர். அவர் வார்த்தையில் உறுதியாக இருந்தபடியால், அவருக்கு தரிசனங்கள் உண்டாவது நின்று போயிருக்கும் என்று எதிர்பார்க்க வாய்ப்புண்டு. ஆனால் அதற்கு மாறாக, அவை அதிகரித்து அதன் விளைவுகள் நன்மைக்கேதுவாகவே அமைந்திருந்தன. இந்த தரிசனங்கள் தேவன் நிறைவேற்றவிருக்கும் பெரிய தேவையை எடுத்துக்காட்டி, அவை ஒரு முறையும் கூட தவறாயிராமல் அவர் கண்டவிதமாகவே நிறைவேறின . அவர் தரிசனத்தில் கண்ட எதையும் வெளிப்படையாகக் கூறுவார். அந்த தரிசனத்தின் முடிவில் என்ன காணப்பட்டதோ அது பிழையின்றி நிறைவேறியது. அது "கர்த்தர் உரைக்கிறதாவது' என்பதாக அமைந்திருந்தது. "உங்கள் வாலிபர் தரிசனங்கள் காண்பார்கள்" என்னும் வாக்கியத்தால் குறிக்கப்பட்ட வாலிபர்களில் இவர் ஒருவராக இருக்க வேண்டும் என்பது அப்பொழுது மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டது. அவருடைய தனிப்பட்ட ஊழியத்தின் தொடர்பாக அவர் தரிசனங்களை கண்டு, அவை நிறைவேறின என்பது மாத்திரமல்ல, கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக நிகழவிருக்கும் சம்பவங்களையும் அவர் தரிசனத்தில் கண்டு, அவைகளை அவர் வெளிப்படையாய் உரைத்திருக்கிறார். இவைகளில் மிக முக்கியமாக கருதப்படுபவை பின்வரும் ஏழு சம்பவங்களாம். 1933ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் பழைய மேசன்களின் பழைய கூடத்தில் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய வருகைக்கு முன்பு நிகழவிருக்கும் ஏழு முக்கியமான சம்பவங்களை அவர் தரிசனமாகக் கண்டார். ஜூன் மாதம் ஒரு நாள் காலையில் அவர் ஞாயிறு பள்ளி வகுப்புக்கு போதிப்பதற்கு முன்பு அவர் ஆவிக்குள்ளாயிருந்த போது, இந்த சம்பவங்கள் வரிசையாக தரிசனத்தில் காணப்பட்டன. இத்தாலியா நாட்டின் சர்வாதிகாரி பெனிடோ முசோலினி எத்தியோப்பியாவின் மீது போர் தொடுப்பான் என்று அவர் தரிசனம் கண்டார். அப்பொழுது ஒரு சத்தம் அவரிடத்தில், "எத்தியோப்பியா அவனுடைய (முசோலினியின்) கால்களில் விழும்" என்றுரைத்தது. இருப்பினும், அந்த சத்தம் தொடர்ந்து, அந்த சர்வாதிகாரி பயங்கரமான முடிவை அடைவான் என்றும், அவனுடைய சொந்த ஜனங்கள் அவன் மேல் உமிழ்வார்கள் என்றும் தீர்க்கதரிசனமாக முன்னுரைத்தது. 49. இதற்கடுத்து உண்டான தரிசனத்தில், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த அடோல்ஃப் ஹிட்லரை தலைமையாகக் கொண்ட ஜெர்மனியுடன் அமெரிக்கா போரில் ஈடுபடும் என்பதைக் காண்பித்தது. அப்பொழுது எழுந்த சத்தம், இந்த பயங்கரமான போர் ஹிட்லரை மடங்கடித்து, அவனுக்கு மர்மமான முடிவு உண்டாகும் என்று முன்னுரைத்தது இந்த தரிசனத்தில், அவருக்கு 'லீக்ஃபிரிட் எல்லை' காண்பிக்கப்பட்டு, அங்கு அநேக அமெரிக்கர்கள் உயிரிழப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தரிசனத்துடன் தொடர்பு கொண்ட மற்றொரு தரிசனம், ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ஜெர்மனியுடன் போர் தொடுப்பார் என்றும் அதன் விளைவாக அவர் நான்காம் முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் முன்னுரைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது. தரிசனத்தின் மூன்றாம் பாகம், இவ்வுலகில் பாசீசம், நாசீசம், கம்யூனிஸம் என்னும் மூன்று கொள்கைகள் காணப்பட்ட போதிலும், முதல் இரண்டு கொள்கைகள் ஒன்றுமில்லாமல் போய், கம்யூனிஸம் மட்டும் தழைத்தோங்கும் என்பதைக் காண்பித்தது. பாசீசமும் நாசீசமும் கம்யூனிஸத்தில் முடிவடையப் போவதால், இனி வரவிருக்கும் நிகழ்ச்சிகளின் காரணமாக, அவர் ருஷியாவின் மேல் கண்ணோட்டமாய் இருக்க வேண்டுமென்று அந்த சத்தம் அறிவுறுத்தியது. அவருக்குண்டான நான்காம் தரிசனத்தில் யுத்தத்துக்குப் பின்பு தொழில் நுட்பத்துறையில் (technology) ஏற்படவிருக்கும் பிரம்மாண்டமான முன்னேற்றங்களைக் குறித்து முன்னுரைக்கப்பட்டது. அதற்கு அடையாளமாக, பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட கூரையைக் கொண்ட முட்டை வடிவமுள்ள ஒரு மோட்டார் வாகனம் யாரும் அதை ஓட்டாமலே தூரத்திலிருந்து முழுவதுமாக இயக்கப்பட்டு (remote control) அழகான நெடுஞ்சாலைகளின் வழியாய் போய்க் கொண்டிருந்தது. அந்த வாகனத்துக்கு திருப்பும் சக்கரம் (Steering Wheel) இருக்கவில்லை. அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் 'செக்கர்ஸ்' (checkers) போன்ற ஏதோ ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பது போல் காணப்பட்டது. 50. அவருக்குத் தோன்றின ஐந்தாம் காட்சி உலகத்தின் ஸ்திரீகளுடன் சம்பந்தப்பட்டதாயிருந்தது. அந்த காட்சியில் ஸ்திரீகளின் நல்லொழுக்கம் வேகமாக சிதைந்து கொண்டு வருவது காண்பிக்கப்பட்டது. அவள் தனக்களிக்கப்பட்ட வோட்டுரிமையின் மூலம் சுதந்தரம் என அழைக்கப்படுவதை பெற்று உலக விவகாரங்களில் பிரவேசிக்கத் தொடங்கின பிறகு, விரைவில் தன் உடலை அதிகமாக வெளிப்படுத்தும் உடைகளை உடுத்த ஆரம்பித்தாள். அவள் தன் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு ஆண்களின் உடைகளை அணிந்து கொண்டாள். முடிவில் அந்த தரிசனத்தில் அவள் ஏறக்குறைய முழு நிர்வாணியாய், அத்தி இலை வடிவிலும் அளவிலும் உண்டாக்கப்பட்ட ஒரு மிகச் சிறிய துணியால் அவளை மறைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பெண்மை தரம் குறைவாக எண்ணப்பட்டு, தேவனுடைய வார்த்தை உரைத்துள்ளபடி மாம்சமான அனைத்தின் மேலும் பயங்கரமான ஒரு சிதைவு உண்டாகி, அதனுடன் கூட சீர்குலைதலும் உண்டானது. அதன்பிறகு, சிறப்பாக உடுத்தியிருந்த மிகவும் அழகான ஒரு பெண் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றினாள். மிகுந்த அதிகாரம் அளிக்கப்பட்டது. அவளுடைய தோற்றம் மிகவும் அழகாக இருந்தபோதிலும், விவரிக்க இயலாத ஒரு கடினத்தன்மை அவளில் காணப்பட்டது. அழகுள்ள அவள், மிகக் கொடூரமும், பொல்லாப்பும், தந்திரமும் நிறைந்தவளாயிருந்தாள். அவள் தன் அதிகாரத்தை நாடெங்கிலும் பிரயோகித்து, ஜனங்களின் மீது முழு ஆதிக்கம் செலுத்தினாள். இத்தகைய ஒரு பெண் எழும்புவாள்; அல்லது தரிசனத்தில் காண்பிக்கப்பட்ட இந்த பெண், வேதத்தில் ஸ்திரீயாக சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு ஸ்தாபனத்துக்கு அடையாளமாயிருக்கக் கூடும் என்பதை அந்த தரிசனம் உணர்த்தினது. அவள் யாரென்பதை ஒரு சத்தம் உரைத்து வெளிப்படுத்தாமல் போனாலும், வேகமாக எழும்பி வரும் ரோமன் கத்தோலிக்க சபைக்கு இந்த ஸ்திரீ எடுத்துக்காட்டாய் இருக்கக்கூடும் என்று அவருடைய இருதயத்தில் தோன்றினது. அவர் எழுதிவைத்த இந்த தரிசனத்தின் முடிவில், இது ஒருக்கால் கத்தோலிக்க சபையாய் இருக்கலாம் என்னும் குறிப்பை எழுதியுள்ளார். 51. இன்னும் ஒரு முறை பார்க்கும்படி அந்த சத்தம் அவருக்கு உத்தரவிட்டது. அவர் திரும்பிப் பார்க்கையில் ஒரு பெரிய வெடி. அமெரிக்க தேசம் முழுவதையும் பாழாக்கி, அழிந்து போன அந்த இடம் புகைக்காடாய் காணப்பட்டது. கண்கள் காணும் தூரம் வரைக்கும் அது குழிகளும் புகைந்து கொண்டிருக்கிற குப்பைகளும் நிறைந்து காணப்பட்டது. மனிதர் எவருமே காணப்படவில்லை. அதன்பிறகு தரிசனம் மறைந்தது. வேதத்தில் பாண்டித்யம் பெற்றிருந்த சிலர், அவருடைய தரிசனங்கள் தேவனுடைய ஏவுதலினால் உண்டாகவில்லை என்று அவரை எச்சரித்தனர். இதைக் குறித்து அவர் பலமுறை கவலையில் ஆழ்ந்து, இந்த விசித்திரமான ஊழியம் அவரை விட்டு போகும் படிக்கு தேவனை நோக்கி ஊக்கமாக விண்ணப்பம் பண்ணினார். இருப்பினும் தரிசனங்கள் அவருடைய கண்களுக்கு முன்பாக தோன்றி. அவை நிறைவேறியும் வந்தன. இந்த தரிசனங்களினால் எவருக்கும் தீங்கு ஏற்படவில்லை, அதற்கு பதிலாக தேவனுடைய பிள்ளைகள் இந்த தரிசனங்களின் மூலம் மிகுந்த பயன் அடைந்தனர். அந்த சமயத்தில், இயேசுவும் கூட பிசாசினால் உண்டானவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டார் என்பதை அவர் உணரவில்லை. மேலும், சோதிடர்களால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட அவருடைய ஊழியம். பவுலின் ஊழியத்தை பிசாசுகள் அடையாளம் கண்டு கொண்டதற்கு ஒத்ததாயிருந்தது என்பதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை. ஆண்டுகள் கடந்தோடின, அவரால் இயன்றவரை அவர் மேய்ப்பராகவும் ஊழியக்காரராகவும் தேவனுக்குப் பணியாற்றி வந்தார். அவர் இந்தியானா அரசாங்கத்தில். வேட்டை அதிகாரியாக இருந்தார். ஒருநாள், 1946ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதியன்று அவர் தமது நண்பர் ஒருவருடன் ஒரு சிறு வேட்டை பயணத்தை மேற்கொள்ள புறப்பட்டுக் கொண்டிருக்கையில், அவருடைய வீட்டின் முற்றத்திலிலுள்ள 'மேப்பில் மரத்தைக் கடக்க நேர்ந்தது. அப்பொழுது அந்த மரத்தின் உச்சியிலிருந்து ஒரு பலத்த காற்று புறப்பட்டு வந்தது. அது அந்த மரத்தை கீழே சாய்த்து விடும் போல் தோன்றினது. அந்த காற்றின் பலத்த தாக்குதலினால் அவர் தள்ளாடினார். அவர் வியாதிப்பட்டு விட்டார் என்று நினைத்து அவருடைய மனைவி அவரிடம் ஓடிவந்தாள். அவர் அவளை நோக்கி, "இருபது ஆண்டுகளுக்கு மேலாக, என்னைக் குறித்தோ அல்லது இந்த ஊழியத்தைக் குறித்தோ என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. இவ்விதமாக நான் தொடர்ந்து சென்று கொண்டிருக்க முடியாது. இதற்கான பதிலை நான் அறிய வேண்டும். இது தேவனால் உண்டானதா? இதெல்லாம் என்ன ? நான் அறிந்தே தீர வேண்டும். நான் உன்னையும் குழந்தையையும் விட்டு போகப் போகிறேன். இதற்கு பதில் கிடைக்கும் வரைக்கும் நான் திரும்பி வரமாட்டேன். என் வேதாகமத்தையும் ஜெபத்தையும் கொண்டு நான் தேவனைத் தேடி , இது என்னவென்று கண்டு பிடிக்கப் போகின்றேன். இல்லையென்றால், நான் திரும்பி வர மாட்டேன்" என்றார். இவ்வாறு சொல்வதும் செய்வதும் எத்தகைய ஒரு கடினமான செயல்! அவரை அறிந்து கொள்வது, இல்லை யேல் இறப்பது என்பது தேவனுக்காக எத்தகைய ஒரு அர்ப்பணிப்பு! 52. இவ்விதம் அவர் தீர்மானித்த பிறகு, அவர் இரகசியமான ஓரிடத்துக்கு தனிமையில் சென்று, தேவனைத் தேடி , இதற்கான பதிலை பெற்று, அவருடைய வாழ்க்கையில் சமாதானம் பெற வேண்டுமென்று தீர்மானம் கொண்டார். மற்றவர் அனைவரிடமுமிருந்தும் அவர் தம்மை மறைத்துக் கொண்டு, முகங்குப்புற விழுந்து, தேவனை நோக்கி கூக்குரலிட்டு, அவருடைய தோல்விகள் அனைத்தும் மன்னிக்கும்படி கெஞ்சி. தேவனுடைய பரிபூரண சித்தத்துக்கு தம்மை முற்றிலுமாக ஒப்புவித்தார். அவர் தமது இருதயத்திலுள்ள அனைத்தையும் கூறி ஜெபம் பண்ணி முடித்த பின்பு, அவர் உட் கார்ந்து கொண்டு, பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். ஏறக் குறைய பதினோறாம் மணி வேளையில், ஒரு மென்மையான ஒளி தோன்றுவதை அவர் கண்டார். அங்கு அந்த மகத்தான நட்சத்திரம் தொங்கிக் கொண்டிருந்தது. அதற்கு முனைகள் இல்லை, அது தீப்பந்தைப் போல் காணப்பட்டது. அதன்பிறகு அவர் காலடி ஓசையைக் கேட்டார். அங்கு பெரிய உருவம் படைத்த ஒரு மனிதன் அவரை நெருங்கி வந்து கொண்டிருந்தான். அவனுடைய எடை 200 பவுண்டு இருக்கும். அவன் கறுப்பு நிறமுடையவனாய் இருந்தான். அவனுடைய தலைமயிர் தோள்வரைக்கும் நீளமாயிருந்தது. அவனுடைய முகத்தில் தாடி இருக்கவில்லை. கம்பீர தோற்றம் கொண்ட இந்த அந்நியனை அவர் கண்டபோது, அவருக்கு மிகுந்த பயம் உண்டானது. ஆனால் இந்த அந்நியன் தயவாய் அவரை நோக்கி, 'பயப்படாதே , உன் விசித்திரமான வாழ்க்கையும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள உன் வழிகளும், நீ உலகிலுள்ள மக்களிடம் சுகமாக்கும் வரத்துடன் தேவனால் அனுப்பப்பட்டவன் என்பதற்கு எடுத்துக்காட்டாயுள்ளன என்பதை அறிவிக்கவே நான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய சமூகத்திலிருந்து அனுப்பப்பட்டேன். நீ மட்டும் உத்தமனாயிருந்து ஜனங்கள் உன்னை நம்பும்படி செய்தால், உன் ஜெபத்துக்கு முன்பாக எதுவுமே நிற்க முடியாது, புற்று நோயும் கூட" என்றான். 53. இதை சகோ. பிரான்ஹாமுக்கு விளக்கின பின்பு, மோசேயைப் போல் அவர் இரண்டு வினோதமான அடையாளங்களைப் பெற்றுக் கொள்வார் என்றும், அவைகளில் ஒன்று ஜனங்களின் விசுவாசத்தை அதிகரிக்குமென்றும், மற்றது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு அடையாளமாயிருக்குமென்றும் தூதன் தொடர்ந்து கூறினான். முதலாம் அடையாளம் இரண்டாம் அடையாளத்துக்கு முன்பு அளிக்கப்பட்டு அது அவருடைய கையில் உண்டாகும் ஒரு வினோதமான அடையாளமாயிருக்கும். இந்த அடையாளம் என்னவெனில், கிருமிகளினால் ஏற்படும் வியாதியுள்ளவர்களின் கையை அவர் பிடித்தால், அது வீங்கிப் போய் வெவ்வேறு நிறங்களை அடைந்து, தன் கையில் அதன் மூலம் அவர் அந்த வியாதியின் பெயரை அறிந்து கொள்வார். அது கிருமிகளினால் உண்டாகும். வியாதியல் லாமல், வேறு வியாதியாக இருக்குமானால், ஆவியானவர் வெளிப்பாட்டின் மூலம் அது என்ன வியாதியென்பதை அவருக்கு அறிவிப்பார். இந்த வரத்தை திரளான மக்கள் கண்டுள்ளனர், அது விசுவாசத்தை அதிகரிக்கும் ஒன்றாக அமைந்திருந்தது. அந்த வரம் இயங்குவதை காணாமல் இதைக் குறித்து படிப்பது குழப் பத்தை விளைவிக்கக் கூடும். ஆனால் அது உண்மையான ஒரு வரம். இதை தொடர்ந்து அளிக்கப்பட்ட இரண்டாம் வரம், மனிதரின் இருதயங்களிலுள்ள இரகசியங்களையும் அவர்களுடைய சரீரப்பிர காரமான பிரச்சினைகளையும் ஆவியில் அறிந்து கொள்ளுதலே. இந்த அடையாளத்தையும் கணக்கற்ற மக்கள் கண்டுள்ளனர். இது விசுவாசத்தை அதிகரிக்கச் செய்வது மட்டுமின்றி, இந்த திறன் தீர்க்கதரிசிக்கு மட்டுமே உரியதானதால், அது கர்த்தர் சீக்கிரமாக வரப்போகிறார் என்பதன் திட்டவட்டமான அடையாளமாகும். இத்தகைய மகத்தான ஊழியத்தைக் குறித்த தகவல் பரவுவதற்கு அதிக காலம் அவசியமில்லாததால், வெகு விரைவில் சங்கை பிரான்ஹாம் பல இடங்களுக்கு அழைக்கப்பட்டார். அவர் அமெரிக்கா முழுவதிலும் உலகின் பல்வேறு பாகங்களிலும் மகத்தான கூட்டங்களை நடத்தினார். அவர் வெளிநாடுகளில் நடத்தின சில கூட்டங்கள் குறிப்பிடத்தக்கவை, ஏனெனில் அவை அவருடைய வாழ்க்கையில் காணப்பட்ட தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துவதாய் அமைந்திருந்தன. உதாரணமாக, இங்கிலாந்து அரசன் காலஞ் சென்ற ஆறாவது ஜார்ஜ் அவர்களின் காலில் இருந்த கோளாறு குணமான விவரம் பலரும் அறிந்ததே. சகோ. பிரான்ஹாமுக்கு நன்றி தெரிவித்து தேவனைத் துதித்து எழுதின அரசனின் கடிதம் சகோ. பிரான்ஹாமின் கடிதக் கட்டுகளில் (File) உள்ளது. மேலும், சகோ. பிரான்ஹாம் பின்லாந்து நாட்டுக்கு சென்றிருந்தபோது, மரித்துப் போன ஒரு பையனை உயிரோடெழுப்பினது பின்லாந்தில் இருந்த பெரும்பாலார் அறிவர். 54. சகோ. பிரான்ஹாம் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பனில் ஆராதனை நடத்தியபோது, ஒரு பிற்பகல் நடந்த கூட்டத்தில் 1,00,000க்கும் மேற்பட்டவர் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களில் 30,000க்கும் அதிகமானவர் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். இந்த பிரம்மாண்டமான தேவனுடைய அசைவின் விளைவாக, அற்புதங்களின் தேவன் உயிரோருக்கிறார் என்றும், அவர் ஒருவர் மட்டுமே உண்மையான தேவன் என்றும் அஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர். சுகமளித்தல் இவ்விதம் நடைபெற்றது. அநேக போதகர்களும் மருத்துவர்களும் பக்கத்தில் நின்று கொண்டிருக்க. சகோ. பிரான்ஹாம் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்துவிட்டு, அதன் பிறகு சுகம் பெற விரும்புகிறவர்களை வரும்படி அழைத்தார். வந்தவர்களில் ஒருவன் ஊனமுற்று பயங்கரமான நிலையில் இருந்தான். அவன் பிறந்த சில நாட்களுக்குள் கொடூரமாக காயமுற்றதன் விளைவாக, அவனால் நிமிர்ந்து நடக்க முடியாமல், ஒரு மிருகத்தைப் போல், தன் கைகளையும் கால்களையும் உபயோகித்து நடந்து கொண்டிருந்தான். அவனை வளர்த்தவர்கள், அவனை தெருக்களில் நடக்கவைத்து, அதனால் கிடைக்கும் காசினால் அவனைப் போஷித்து வந்தனர். அவர்கள், ஒரு கரடிக்குச் செய்வது போல், ஒரு கழுத்து பட்டையை அணிவித்து ஒரு சங்கிலியை மாட்டியிருந்தனர். அவன் ஒரு மிருகம் போல் மேலும் கீழும் துள்ளி, அவனுடைய பிழைப்புக்காக சில காசுகளை சம்பாதித்து வந்தான். அவன் ஜெபத்துக்காக வந்தபோது, அந்த மனிதன் தேவனுடைய வல்லமையினால் சுகமடைந்து நிமிர்ந்து நிற்பது போல் அவர் தரிசனம் கண்டார். இந்த தரிசனம் அவருக்குண்டான போது, அந்த மனிதன் உடனடியாக சுகம் பெற்றால், கர்த்தரை இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்படி அஞ்ஞானிகளுக்கும் அவிசுவாசிகளுக்கும் அவர் சவால் விட்டார். திரளானோர் இந்த மனிதனையும் அவனுக்கு ஏற்பட்டிருந்த சங்கடமான நிலையையும் அறிந்திருந்தனர். அவர் அஞ்ஞானிகளுக்கும், நாத்தீகர்களுக்கும், சபை அங்கத்தினர்களுக்கும், பல்வேறு பழங்குடி மக்களுக்கும் சவால் விட்டார். அவர்கள் அனைவரும். இந்த மனிதன் இயேசுவின் நாமத்தினால் சுகமடைந்தால், இயேசு ஒருவரே தேவன் என்பதை ஒப்புக் கொள்வதாய் கூறினர். சகோ.பிரான்ஹாம் ஜெபித்த மாத்திரத்தில் அவன் நிமிர்ந்து நின்றான். ஜனங்கள் ஆர்ப்பரித்து தேவனைத் துதித்தனர். எல்லோருமே புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பீட அழைப்பு இருமுறை அளிக்கப்பட்டது. அப்பொழுது 30,000க்கும் மேற்பட்டவர் இரட்சிப்புக்காக வந்தனர் என்றும், 25,000 பேர் சுகம் பெற்றனர் என்றும் கணக்கிடப்பட்டது. 55. அந்த நகரத்தில் கூட்டங்கள் முடிவு பெற்ற பிறகு, நகரத் தலைவர் அணிவகுத்து வர, அவரைத் தொடர்ந்து, ஒரு காலத்தில் ஊனமுற்றோர் நடப்பதற்கென உபயோகித்தக் கக்கத்தண்டங்கள், தடிகள். இன்னும் மற்ற பொருட்கள் நிறைந்த ஏழு லாரி வண்டிகள் பவனி வந்தன. இந்தியாவிலுள்ள பம்பாய் நகரத்தில் அவருடைய பிரசங்கத்தைக் கேட்க 4,00,000 பேர் வந்ததாக கணக்கிடப்பட்டது. அவர் அதிகாரத்தோடு தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்து, அவர்கள் அதிக மூட நம்பிக்கையுள்ளவர்கள் என்றும், அவர்களுடைய தெய்வங்கள் வல்லமையற்றவை என்றும் பிரகடனம் செய்தார். இதை தெளிவுபடுத்த சூரிய நமஸ்காரத்தினால் கண் பார்வை முழுவதுமாக இழந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பலரும் அறிந்த ஒரு மனிதனை அவர் தெரிந்து கொண்டார். இந்த பிச்சைக்காரனை நகரத்தலைவரும் நகரத்திலுள்ள அனைவரும் அறிந்திருந்தனர். அவன் யார், அவன் எங்கு வசித்து வந்தான், அவன் எவ்விதம் குருடானான் என்பதை சகோ. பிரான்ஹாம் ஒரு தரிசனத்தில் கண்டார். சுருங்கக்கூறின், அவனைக் குறித்த வரலாறு அனைத்துமே அவர் அறிந்து, அதை அங்கு குழுமியிருந்த மக்களுக்கு வெளிப்படுத்தினார். அவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஆனால் சகோ. பிரான்ஹாம் அங்கிருந்த பிரசித்தி பெற்ற மதத்தலைவர்களிடம் மேடையின் மீது வந்து தங்கள் தெய்வங்களைக் கூப்பிட்டு, இந்த மனிதனுக்கு கண்பார்வை அளிக்கும்படி சவால் விட்ட போது அவர்கள் இன்னும் அதிகம் திகைப்படைந்தனர். அவர் புத்த மதத்தினருக்கும். ஜைன மதத்தினருக்கும் சவால் விட்டார். அவர் எல்லோரையும் அழைத்தார். எவருமே வர மறுத்த போது அவர் அவர்களை நோக்கி, "உங்கள் மதத்தலைவர்கள் அனைவரும் அவர்களுடைய தெய்வங்களின் நாமங்களில் வர மறுத்துவிட்டனர். இன்றைக்கு நான் என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வந்திருக்கிறேன். இந்த மனிதனுக்கு அவர்களுடைய தெய்வங்கள் சுகமளிக்க இயலாது என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் என்னுடைய தேவனால் இயலும் என்று நான் உரைக்கிறேன். அப்படியானால், என் தேவனுக்கு நான் ஜெபத்தை ஏறெடுத்து இந்த மனிதன் சுகமடைந்தால், இந்த வல்லமையற்ற தெய்வங்கள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவரிடம் வருவீர்களா?" என்று கேட்டார். செய்ய வேண்டியது அதுதான் என்று ஜனங்கள் ஒப்புக் கொண்டனர். அந்த மனிதன் கண்பார்வையை மீண்டும் பெறுவதாக சகோ.பிரான்ஹாம் தரிசனத்தில் கண்ட விதமாகவே, அவர் அந்த ஏழை பிச்சைக்காரனை தன் கரங்களில் எடுத்து ஜெபித்தார். அந்த மனிதன் திடீரென்று தன்னால் காண முடிகிறதென்று கூச்சலிட்டு, அதை செயலிலும் காண்பித்தான். அப்பொழுது குழப்பம் விளைந்து, அந்த எளிய மக்கள் சகோ. பிரான்ஹாமைத் தொட்டு சுகம் பெற அவரை அணுக முயன்றனர். 56. ஜெர்மனி நாட்டில் அவருடைய ஊழியத்தை தடுக்க முழு பலத்துடன் புறப்பட்டு வந்த மந்திரவாதிகளை அவர் தோல்வியடையச் செய்தார். அவர்கள் தங்கள் மந்திர சக்தியினால் ஒரு பிரம்மாண்டமான கறுத்த மேகத்தை அவர் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த கூடாரத்தின் மேல் வரவழைத்து, அதனால் ஏற்படும் சூறாவளிக்காற்றினால் கூடாரத்தை சின்னாபின்னமாகக் கிழித்து விட முயன்றனர். சகோ. பிரான்ஹாம் மேடையின் மேல் ஏறினார். அப்பொழுது இயேசுவின் நாமத்தில் அந்த மேகம் உடனே சிதறிப் போய் சூரியன் பிரகாசிக்கத் தொடங்கினது. அமெரிக்காவில் அவர் நடத்தின் வெளி ஊழியத்தில் நடந்த சம்பவங்களில் கவரத்தக்க உதாரணங்களில் ஒன்று ஆரிகானிலுள்ள போர்ட்லாண்டில் நடந்த ஒன்றாகும். அந்த நகரத்தில் பெரிய உருவம் படைத்த மிக்க பலசாலியான ஒரு மனிதன் இருந்தான். அவன் பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்ததால், சுவிசேஷ கூட்டங்களை தகர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தான். அவன் கூட்டங்களுக்கு சென்றிருந்த ஒவ்வொரு முறையும் அவனுடைய முயற்சியில் வெற்றி கண்டான். ஒரு பெரிய அரங்கில் பிரசங்கிக்க சகோ. பிரான்ஹாம் போர்ட்லாண்டுக்கு வந்திருந்தபோது, இந்த மனிதன், பிரசங்கம் நடந்து கொண்டிருக்கையில் திடீரென்று தோன்றி வேகமாக நடந்து மேடையின் மேல் வந்தான். அவன் தன் கை முட்டியை (Fist) அசைத்து, சகோ. பிரான்ஹாமை துன்புறுத்தப் போவதாக பய முறுத்தி, அவரை ஏமாற்றுக்காரன், போலி மனிதன், புல்லின் கீழ் பதுங்கியுள்ள பாம்பு, பிசாசின் கருவி என்றெல்லாம் அழைத்தான். சகோ. பிரான்ஹாம் அப்பொழுது தேவனுடைய வல்லையைக் குறித்து பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருந்தார். எனவே அங்கிருந்த காவல் துறையினர் அவனைப் பிடிக்க முன்னால் ஓடிவந்த போது, அவர்களை சைகை காண்பித்து அனுப்பிவிட்டு, இந்த சவாலை தனியாக சந்தித்தார். அந்த மனிதன் அவரை பயமுறுத்துக கொண்டே அவரை நெருங்கினான். கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் அமைதியாயிருந்து ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஏதோ ஒரு காரணத்தினால் இந்த துன்மார்க்கன் சகோ. பிரான்ஹாம் அருகில் வர இயலாமல் சில அடி தூரம் நின்று தன் வசைமாரியைப் பொழிந்து கொண்டிருந்தான். அப்பொழுது சகோ. பிரான்ஹாம் மிகவும் சாந்தமாக, "சாத்தானே, இந்த கூட்டத்தினருக்கு முன்பாக நீ தேவனுடைய ஊழியக்காரனுக்கு சவால் விட்ட காரணத்தினால், எனக்கு முன்பாக நீ அடி பணிய வேண்டும். இயேசுவின் நாமத்தினாலே நீ என் காலடியில் விழுவாய்" என்றார். திடகாத்திரமுள்ள வனும், கொடுமையானவனும், அவருக்கு தீங்கிழைக்க வேண்டு மென்று தீர்மானம் கொண்டிருந்தவனுமான அந்த மனிதனுடைய தீவிரம் மெல்லக் குறையத் தொடங்கினது. அவனுடைய நெற்றியில் வியர்வை தோன்றினது. அவனுடைய முகத்தில் ஏமாற்றமும் பய மும் காணப்பட்டது. அவன் சர்ப்பத்தைப் போல் நெளிந்து சகோ. பிரான்ஹாமின் காலடியில் விழுந்து அசைவற்றிருந்தான். பலசாலி கள் அவனை அங்கிருந்த தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. அதன்பிறகு அந்த கூட்டம் அதே தேவனுடைய வல்லமையுடன் நடந்து முடிந்தது. 57. இந்த தேவனுடைய தீர்க்கதரிசியின் கண்களுக்கு முன்பாக அற்புதமாக தரிசனங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருந் தன். பின்வருபவை மிகவும் திகைப்பூட்டும். அறிவுணர்த்தும் சில தரிசனங்களாம். தரிசனம் 1 - அசுத்த ஆவிகளுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க எச்சரிக்கை. சகோ. பிரான்ஹாம் இரட்சிப்புக்குள் வந்த சில நாட்களுக்குப் பிறகு, ஓரிரவு ஒரு கர்வாலி. மரத்தின் கீழிருந்த ஓரிடத்தில் தன் தனி ஜெபத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அது நள்ளிரவு ஒரு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையே ஒரு நேரம். அவர் தன் அறைக்குள் பிரவேசிக்கும் சத்தத்தை அவருடைய பெற்றார் கேட்டு, அவரைக் கூப்பிட்டு, அவருடைய இளைய சகோதரி வியாதிப்பட்டிருப்பதாக கூறினர். அவர் முழங்கால்படியிட்டு அவளுக்காக ஜெபித்துவிட்டு தன் அறைக்குத் திரும்பினார். அவர் அறைக்குள் பிரவேசித்த பிறகு, இரண்டு மின்சாரக் கம்பிகள் ஒன்றோடொன்று உராய்வதால் வெளிச்சத்துடன் கூடிய சத்தம் (arc) உண்டாவது போன்ற ஒரு வினோதமான சத்தத்தைக்கேட்டார். அந்த சமயத்தில் அவர் மின்சாரக் கம்பிகளை பார்வையிடும் பணியைச் செய்து வந்தார். எனவே வீட்டில் மின்சார ஓட்டத்தில் பழுது ஏற்பட்டிருக்க வேண்டும் (short circuit) என்று அவர் எண்ணினார். ஆனால் திடீரென்று அந்த சத்தம் மாறி, ஒரு விசித்திரமான ஒளி அந்த அறையை நிறைத்தது. அப்பொழுது அவர் ஆகாயத்தில் நின்று கொண்டிருப்பது போல் அவருக்குத் தோன்றினது. அவர் மிகவும் பயந்து போய், அவர் இறந்து கொண்டிருப்பதாக எண்ணினார். 58. அதன்பிறகு அந்த ஒளி அவரைச் சுற்றிலும் இருப்பதை அவர் கவனித்தார். அவர் மேலே நோக்கியபோது, ஒரு பெரிய நட்சத்திரம் இருப்பதையும் அதிலிருந்து ஒளி புறப்பட்டு வருவதையும் கண்டார். அது அவரை நெருங்கி வந்து கொண்டேயிருந்தது. அதன்பிறகு அவரால் மூச்சு விடவும் பேசவும் முடியாமல் போனது போல் தோன்றினது. அடுத்தபடியாக அந்த நட்சத்திரம் அவருடைய மார்பில் வந்து அமர்ந்தது. அந்த நேரத்தில் காட்சியானது மாறி. அவர் பசும்புல் வளர்ந்திருந்த ஒரு மலையின் மேல் இருந்தது போல் தோன்றினது. அவருக்கு முன்பாக நான்கு முனை கொண்ட பழங்காலத்து மிட்டாய் ஜாடி இருந்தது. அந்த ஜாடிக்குள் ஒரு பெரிய பூச்சி மாட்டிக் கொண்டு, வெளியே வர தத்தளித்துக் கொண்டிருந்தது. அவர் வலது பக்கம் திரும்பினார். அப்பொழுது அந்த வல்லமையுள்ள தூதன் அங்கு நின்றுகொண்டு, அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். தூதன் அவரிடம், "நான் உனக்குக் காண்பிக்கப் போவதைப் பார்" என்றான். அப்பொழுது ஒரு கை கல்லெறிந்து அந்த ஜாடியை உடைப்பதை சகோ. பிரான்ஹாம் கண்டார். அதற்குள் இருந்த பூச்சி வெளியே பறந்து செல்ல முயன்றது. ஆனால் அதனால் இயலவில்லை. அதன் உடல் அதன் குட்டையான செட்டைகளுக்கு மிகவும் கனமாக இருந்தது. அந்த பூச்சியிலிருந்து ஒரு கூட்டம் பூச்சிகள் தோன்றின. அவைகளில் ஒன்று சகோ. பிரான்ஹாமின் காதுக்குள் பறந்த சென்றது. தூதன் அவரை நோக்கி, "நீ கண்ட இந்த பூச்சிகள் குறி சொல்லும் அசுத்த ஆவிகளுக்கு எடுத்துக்காட்டாயுள்ளன" என்றான். அதன்பிறகு அவன் "ஜாக்கிரதையாயிரு" என்று எச்சரித்தான். இந்த தரிசனம் மூன்று முறை தோன்றினது. தரிசனம் முடிந்தவுடன் சகோ. பிரான்ஹாம் தன் சுயநினைவை அடைந்தார். அவரால் அன்றிரவு உறங்கவே முடியவில்லை. அடுத்த நாள் அவர் மிகவும் ஜாக்கிரதையாயிருந்தார். அவர் ஒவ்வொரு அசைவையும் கவனித்து. எந்த நேரத்திலும் ஏதாவதொன்று நடக்குமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காரியம் முழுவதுமே அவருக்குப் புதிதாக இருந்தது. ஏனெனில் இதுவே தரிசனத்தின் மூலம் அவருக்குக் கிடைக்கப் பெற்ற முதலாம் எச்சரிக்கை. 59. அன்று நடுப்பகலில், பகல் உணவு வாங்குவதற்கென அவர் ஒரு சிறு பலசரக்கு அங்காடிக்குச் சென்றார். அந்த அங்காடியில் கிறிஸ்தவர் ஒருவர் வேலை செய்து வந்தார். சகோ. பிரான்ஹாம், அவரை சற்று முன்பு தான் கிறிஸ்துவினிடம் நடத்தினார். அதன் பிறகு அவர் சகோ. பிரான்ஹாமின் சுவிசேஷ பணியில் மிகவும் உதவியாக இருந்து வந்தார். அந்த அங்காடியில் சகோ. பிரான்ஹாம் அவரிடம் இந்த தரிசனத்தை எடுத்துரைத்துக் கொண்டிருந்த போது, ஒரு ஸ்திரீ அந்த அங்காடியின் முன் வாசலுக்குள் நுழைந்தாள். அப்பொழுது சகோ. பிரான்ஹாமுக்கு ஒரு விசித்திரமான உணர்வு தோன்றினது. ஒரு வினோதமான ஆவி உள்ளே வந்துள்ளதை அவர் அறிந்து கொண்டார். அதை அவர் தன் நண்பர் சகோ.ஜார்ஜ் டீ ஆர்க்குக்கு அறிவித்தார். அந்த ஸ்திரீ சகோ.டீ ஆர்க்கின் சகோதரனான எட் என்பவரிடம் வந்து, "பிரான்ஹாம் என்னும் பெயர் கொண்ட ஒருவரை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர் தேவனுடைய மனிதன் என்று என்னிடம் கூறப்பட்டது" என்றாள். அப்பொழுது எட், சகோ. பிரான்ஹாமைக் கூப்பிட்டார். அவர் அவளிடம் வந்த போது, அவள், "நீர் தான் தேவனுடைய தீர்க்கதரிசி வில்லியம் பிரான்ஹாம் என்பவரா?" என்று கேட்டாள். அவர், "நான் வில்லியம் பிரான்ஹாம்" என்று பதிலளித்தார். அவள் தொடர்ந்து, "நீர்தான் மருத்துவமனையில் திரு. வில்லியம் மெர்ரில் என்பவரின் மேல் அந்த அற்புதத்தை விளைவித்து, 17 ஆண்டுகளாக ஊனமுற்றிருந்த மேரி டெர் ஒஹானியன் என்பவளை குணமாக்கினவரா?" என்று கேட்டாள் (அவள் இப்பொழுது கிழக்கு ஓக் தெரு. நியூ ஆல்பனி, இந்தியானா என்மிடத்தில் வசிக்கிறாள்). அவர், "நான் வில்லியம் பிரான்ஹாம், இயேசு கிறிஸ்து அவளை குணமாக்கினார்" என்று பதிலளித்தார். அவள், "நான் சில நிலச் சொத்துக்களை இழந்துவிட்டேன். அவை எங்குள்ளன என்பதை எனக்குக் காண்பித்துத்தர வேண்டும்" என்றாள். சகோ. பிரான்ஹாமுக்கு அவள் நிலச் சொத்துக்களைக் குறித்து கூறினது புரியவில்லை, ஆனால் சாத்தான் தான் இந்தப் பணியில் அவளை அனுப்பியிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டார். அவர் அவளிடம், "அம்மணி, நீ தவறான ஆளிடம் வந்திருக்கிறாய். நீ அசுத்த ஆவிகள் பேசுவதற்கு கருவியாக உபயோகிக்கும் ஒருவரை (medium) நாட வேண்டும்" என்றார். அவள், "நீர் அப்படிப்பட்ட ஒரு கருவி இல்லையா?" என்று கேட்டாள். அவர், "இல்லை. அந்த கருவிகள் பிசாசினால் உபயோகிக்கப்படுபவர்கள், நானோ ஒரு கிறிஸ்தவன், நான் தேவனுடைய ஆவியைக் கொண்டிருக்கிறேன்" என்றார். அதைக் கேட்ட போது, அவள் அவரை முறைத்துப் பார்த்தாள். அவர் அவளிடம் இன்னும் பேசுவதற்கு முன்பு தேவ ஆவியானவர், அவளே ஒரு பிசாசின் கருவி என்றும், அவர் தரிசனத்தில் அவருடைய காதுக்குள் வருவது போல் கண்ட பூச்சி இதுதான் என்றும் உரைப்பதை அவர் கேட்டார் 60. அப்பொழுது அவர் அவளிடம், "நேற்றிரவு ஒரு தரிசனத்தில் கர்த்தர் தமது தூதனை என்னிடம் அனுப்பி, உன்னுடைய வரவைக் குறித்து அறிவித்து, நான் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும் என்று என்னை எச்சரித்தார். அவருடைய வழிநடத்தும் கரத்துக்காக நான் கர்த்தருக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நீ செய்து கொண்டிருக்கும் பணி பிசாசினால் உண்டானது, நீ தேவனுடைய ஆவியை துக்கப்படுத்தவே வந்திருக்கிறாய்" என்றார். அவளுக்கு இருதயத்தில் வலி ஏற்பட்டு அவளுக்கு மருந்து வேண்டும் என்று கேட்டாள். அவர், "அம்மணி, இக்காரியங்களைச் செய்வதை விட்டுவிடு, அப்பொழுது உன் இருதய வலி சரியாகிவிடும்" என்றார். அவள் அங்காடியை விட்டு சிறிது தூரம் நடந்து சென்றவுடனே, மாரடைப்பு ஏற்பட்டு நடைபாதையில் உயிர் நீத்தாள். இது நடந்து சில நாட்கள் கழித்து நியூ ஆல்பனி என்னும் அதே நகரத்தில் சகோ. பிரான்ஹாம் மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் ஓரிடத்தில் (garage) சில 'மெக்கானிக்குகளுடன் கிறிஸ்துவின் அன்பைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தார். அவர்களிடம் அவர் அந்த தரிசனத்தையும் எடுத்துரைத்தார். அவர்கள் ஜெபம் செய்து தங்கள் இருதயங்களை தேவனிடத்தில் கொடுக்க அவர் கேட்டுக் கொள்ளவிருந்த போது, அங்கு வந்திருந்த பக்கத்து 'கராஜை சேர்ந்த ஒரு மனிதன், "பில்லி, எந்த நேரத்திலும் நீர் என் கராஜுக்கு வரலாம், ஆனால் மூடபக்தி வைராக்கியம் கொண்டுள்ள அந்த மார்க்கத்தை நீர் வெளியிலே வைத்துவிட்டு வர வேண்டும்” என்றான். அதற்கு சகோ. பிரான்ஹாம், "ஐயா, இயேசு வரவேற்கப்படாத எந்த ஒரு இடத்துக்கும் நான் வரமாட்டேன். தேவன் எனக்கு வெளிப்படுத்தித் தந்த சத்தியத்தையே நான் உரைக்கிறேன்." என்று பதிலளித்தார். அதைக் கேட்ட அந்த மனிதன் ஏளனமாக கலகலவென்று சிரித்து, சகோ. பிரான்ஹாமிடம் கைகுலுக்கி விட்டு, வெளியே சென்றுவிட்டான். அவன் தன் கராஜை அடைவதற்கு முன்பு, அவனுடைய மருமகன், பழைய இரும்பு நிறைந்த தன் மோட்டார் வாகனத்தை பின்புறமாக வெளியே எடுக்க முயன்றபோது அவன் மேல் அதை ஏற்றி விட்டான், அதன் விளைவாக அவனுடைய இரண்டு பாதங்களும் கணுக்கால்களும் நசுங்கிப் போயின. 61. இரண்டு நாட்கள் கழித்து, அவர் தெருப் பிரசங்கம் செய்து கொண்டிருக்கையில் கை ஊனமுற்ற ஒரு பெண் சகோ. பிரான்ஹாமிடம், "தேவனுடைய அபிஷேகம் உமது மேல் தங்கியிருக்கிறதென்று எனக்குத் தெரியும், நீர் ஜெபிக்கும்போது ஊனமுற்ற என் கையை நினைவுகூருவீராக. அது பல ஆண்டுகளாக இந்நிலையில் உள்ளது" என்றாள். அவர் அவளை நோக்கி, "நீ உண்மையில் விசுவாசிப்பாயானால், உன் கரத்தை நீட்டு, இயேசுகிறிஸ்து உன்னை குணமாக்கி விட்டார்' என்றார். உடனே அவளுடைய கரம் நீட்டப்பட்டு குணமானது. அந்த ஏழை பெண் ஆனந்தக் கண்ணீர் வடித்து முழங்கால்படியிட்டு தேவனுக்கு நன்றி செலுத்தினான். அங்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ஸ்திரீ, "பில்லி பிரான்ஹாம் பெற்றுள்ள அந்த மார்க்கம் உண்மையோ என்னமோ , அது எனக்கு சிறிது கூட தேவையில்லை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்து சென்றபோது, ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது. அவள் அங்கிருந்த ஒரு பலகை தடுக்கி கீழே விழுந்து, அவள் கரம் 15 இடங்களில் முறிந்து போனது. உடைந்த அந்த கரம், குணமாக்கப்பட்ட அந்த ஸ்திரீயின் அதே பக்கத்து கரமாயிருந்ததுதரிசனம் II – மில் டவுன் தரிசனம் சில நாட்கள் கழித்து, சகோ.பிரான்ஹாம் அவர் தாயாரின் வீட்டுக்குச் சென்றிருந்தார். இந்த தரிசனமும் மற்ற தரிசனங்களைப் போலவே விடியற்காலை ஏறக்குறைய இரண்டு அல்லது மூன்று மணிக்கு உண்டானது. தரிசனத்தில் அவர் இருள் சூழ்ந்த ஒரு காட்டில் இருந்தது போல தோன்றினது. அவர் நடந்து செல்கையில் மிகவும் பரிதாபமான ஒரு குரல் கேட்டது. அது ஒரு ஆட்டுக் குட்டி அழுவது போல் இருந்தது. "அந்த ஏழை மிருகம் எங்குள்ளது என்று நினைத்து மேகமூட்டத்தினால் ஏற்பட்டிருந்த இருளின் வழியாக அதை தேடிச் சென்றார். ஆனால் அவர் அந்த சத்தத்தை நெருங்கு கையில் அது ஒரு மனிதக் குரலாக இருந்து, 'மில் டவுன், மில் டவுன்" என்றுரைத்தது. சகோ. பிரான்ஹாம் இந்த பெயரை முன்பு கேட்டதேயில்லை. அப்பொழுது அவர் அந்த தரிசனத்தை விட்டு சுயநினைவுக்கு வந்தார். அவர் தன் நண்பர்களிடம், எங்கோ ஓரிடத்தில் தேவனுக்குச் சொந்தமான ஆட்டுக்குட்டிகளில் ஒன்று துயரத்தில் இருப்பதாகவும், அந்த இடம் மில்டவுன் என்றழைக்கப்படும் இடத்துக்கு அருகில் உள்ளதாகவும் கூறி வந்தார். சகோ. பிரான்ஹாமின் சபைக்கு வரும் ஜார்ஜ் ரைட் என்னும் பெயர் கொண்ட ஒருவர், தான் வசித்துக் கொண்டிருந்த இடத்துக்கு சிறிது தூரத்தில் மில்டவுன் என்னும் ஓரிடம் இருப்பதாக கூறினார். (அவர் இந்தியானாவிலுள்ள டீபா என்னுமிடத்தில் வசிக்கிறார்). எனவே அடுத்த சனிக்கிழமை, சகோ. பிரான்ஹாம் மில்டவுனுக்குச் சென்றார். 62. அந்த இடத்தை அடைந்ததும், அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். அவர் ஏதாவதொன்றை அங்கு செய்ய வேண்டும் என்று கர்த்தர் அவரிடம் உரைப்பதாக அவருக்குத் தோன்றவேயில்லை. முடிவில் அவர் ஒரு அங்காடிக்கு முன்பாக ஒரு தெருக்கூட்டம் நடத்த தீர்மானித்தார். அப்பொழுது அவருடன் கூட வந்திருந்த சகோ. ரைட், அவர் அங்கு செய்ய வேண்டிய வேலை ஒன்று உள்ளதாகவும், சகோ. பிரான்ஹாம் அவருடன்கூட வரமுடியுமா என்று கேட்டார். அதற்கு அவர், "சரி ஐயா, நான் வருகிறேன்" என்றார். அவர்கள் ஒரு மலையின் மேல் காரில் சென்று கொண்டிருந்த போது. சகோ. பிரான்ஹாம் ஒரு கல்லறையின் பக்கத்தில் ஒரு பெரிய பாப்டிஸ்டு ஆலயம் இருப்பதைக் கண்டார். சகோ. ரைட் அவரிடம், "சவ ஆராதனைகளுக்குத் தவிர, வேறெதற்குமே இந்த ஆலயம் உபயோகப்படுத்தப்படவில்லை" என்றார். அவர் அதை சொன்ன மாத்திரத்தில் சகோ. பிரான்ஹாம் தன் இருயத்தில் ஏதோ ஒரு அசைவு ஏற்படுவதை உணர்ந்தார். அங்கு தான் கர்த்தருக்கு அவருடைய தேவை இருந்தது. அவர் சகோ.ரைட்டிடம் இதைக் கூறின போது, சகோ.ரைட், "நான் போய் ஆலயத்தின் திறவுகோல்களை வாங்கிக் கொண்டு வருகிறேன். நீங்கள் உள்ளே சென்று அதை பாருங்கள்" என்றார். சகோ. பிரான்ஹாம் ஆலயத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, "பரலோகப் பிதாவே, இங்கு தான் நான் வரவேண்டும் மென்று நீர் விரும்பியிருந்தால், எனக்கு கதவைத் திறந்து தாரும் என்று ஜெபித்தார். அது நடக்க கர்த்தர் அனுமதித்தார். ஒரு கூட்டம் அங்கு நடத்தப் போவதாக சகோ. பிரான்ஹாம் அறிவித்தார். ஆனால் சூழ்நிலை மிகவும் கடினமாயிருக்கும் என்று அவர் விரைவில் அறிந்து கொண்டார், ஏனெனில் அங்கிருந்த சபைகள் தெய்வீக சுகமளித்தலுக்கு விரோதமாய் போதித்திருந்தன. சகோ. பிரான்ஹாம் கூட்டத்துக்கு வரும்படி அழைத்த முதல் மனிதன், "எந்த எழுப்புதல் கூட்டத்துக்கும் செல்ல எங்களுக்கு நேரமில்லை, நாங்கள் கோழிப் பண்ணை வைத்திருக்கிறோம், வேறெதற்கும் எங்களுக்கு நேரமே இல்லை” என்று சொல்லிவிட்டான். ஆனால் சிறிது காலத்துக்குப் பிறகு அவன் இறந்து போனான், அவனால் கோழிகள் வளர்க்க இயலாமல் போனது. 63. அடுத்த ஞாயிறன்று அவர்கள் எழுப்புதல் கூட்டத்தை தொடங்கினர். நான்கு பேர் மட்டுமே கூட்டத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் ரைட்டின் குடும்பத்தினர். அடுத்த இரவு கூட்டம், சென்ற இரவு கூட்டத்தை விட சற்று நன்றாயிருந்தது. மூன்றாம் இரவின் கூட்டத்தின் போது கொடூர தோற்றம் கொண்ட ஒரு மனிதன் ஆலயத்தின் வாசற்படியில் வந்து தன் புகைக் குழாயிலிருந்து புகையிலை சாம்பலை கீழே கொட்டி விட்டு, உள்ளே நுழைந்து பின்னால் உட்கார்ந்து கொண்டார். அவர் சகோ.ரைட்டிடம். "அந்த பில்லி சண்டே எங்கே? அவரை நான் நன்றாக காண விரும்புகிறேன்" என்றார். சகோ.ரைட் சகோ பிரான்ஹாமிடம் வந்து, "கடினமான ஒருவர் இப்பொழுது தான் கட்டிடத்துக்குள் வந்திருக்கிறார்" என்றார். ஆனால் அன்றிரவு ஆராதனை முடியும் முன்பு, அவர் பீடத்துக்கு நடந்து வந்து தேவனை நோக்கி கூக்குர லிட்டார். அவருடைய பெயர் வில்லியம் ஹால். அவர் இப்பொழுது அந்த சபையின் போதகராக இருந்து வருகிறார். விரைவில் அநேகர் கூட்டத்துக்கு வரத் தொடங்கினர். சகோ. பிரான்ஹாம் ஜனங்களிடம் அவர் கண்ட தரிசனத்தைக் குறித்து கூறினார். அப்பொழுது சகோ. ஹால் அவரிடம், "சகோ. பிரான்ஹாமே, இங்குள்ள இந்த மலையின் மேல் ஒரு பெண் வசிக்கின்றாள். அவள், "இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்' என்னும் உங்கள் புத்தகத்தை படித்துக் கொண்டு வருகிறாள். அவள் எட்டு ஆண்டு ஒன்பது மாத காலமாக படுக்கையில் படுத்துக் கொண்டேயிருக்கிறாள், அவளால் படுக் கையை விட்டு எழுந்திருக்கவே முடியவில்லை. அவளுக்கு காசநோய் உள்ளது. அநேக ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவர்கள் அவள் பிழைப்பாள் என்ற நம்பிக்கையில்லை என்று சொல்லி விட்டனர். இப்பொழுது அவளுக்கு 23 வயதாகின்றது. காச நோய் அவளை தின்று கொண்டே வருவதனால், அவளுடைய எடை இப்பொழுது ஏறக்குறைய நாற்பது பவுண்டு மட்டுமே. உம்மை அவளிடம் கொண்டு வரவேண்டுமென்று அவள் எவ்வளவோ கெஞ்சியும் அழுதும் பார்த்துவிட்டாள். ஆனால் அவளுடைய பெற்றோர் இங்குள்ள ஒரு குறிப்பிட்ட சபையைச் சேர்ந்தவர்கள், அந்த சபையிலுள்ள யாராகிலும் உம்முடைய கூட்டத்துக்கு சென்றால், அவர்கள் சபையிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் அவளிடம் போவீரா? என்று கேட்டார். அதற்கு சகோ. பிரான்ஹாம், "அவளுடைய பெற்றோர் சம்மதம் தெரிவித்தால், நான் போகத் தயாராயிருக்கிறேன்" என்றார். தேவன் அவரை அந்த வழியாக நடத்துகிறார் என்று சகோ. பிரான்ஹாம் உணர்ந்தார். அந்த பெண்ணின் பெயர் ஜார்ஜியா கார்டர். அவளுடைய தந்தை கல் உடைக்கும் ஓரிடத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். அந்த பெண்ணின் தயார், சகோ. பிரான்ஹாம் சென்று அந்த பெண்ணைக் காணலாம் என்று அனுமதி அளித்தாள். ஆனால் அந்த நேரத்தில் அவளும் அவளுடைய தகப்பனும் வீட்டில் இருக்க மாட்டார்கள் என்று தகவல் அனுப்பினாள். 64. சகோ. பிரான்ஹாம் அந்த பெண் இருந்த அறைக்குள் பிரவேசித்த போது அவளிடம், "நீ என்ன படித்தாயோ அதை விசுவாசிக்கிறாயா?" என்று கேட்டார். அவள், "ஐயா, நான் விசுவாசிக்கிறேன்" என்றாள். அவள் மிகவும் தாழ்ந்த குரலில் இதை கூறினதால், அவள் கூறியதைக் கேட்க அவர் அவள் அருகாமையில் குனிய வேண்டியிருந்தது. தெய்வீக சுகமளித்தலைக் குறித்து தற்பொழுது அவருக்குள்ள அறிவைப் போல் அப்பொழுது அவருக்கு இருக்கவில்லை. ஆனால் அவர் தரிசனத்தில் மக்கள் சுகம் பெறுவதை காணும்போது, அவர்களுக்காக ஜெபிப்பது வழக்கமாயிருந்தது. எனவே, அவர் அவளிடம் சுகமடைந்த நேல் பெண்ணைப் பற்றி எடுத்துக்கூறி, அவளுக்கு ஜெபிக்க வேண்டுமென்று தேவன் அவருக்கு ஒரு தரிசனத்தில் காண்பிக்கும்படி அவள் ஜெபிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். (பிற்காலத்தில் அவர், தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதன் மூலம் எல்லோரும் சுகம் பெற முடியும் என்றும், அநேகர் சுகம் பெறுவதை தேவன் அவருக்கு தரிசனத்தில் வெளிப்படுத்துகிறார் என்றும் அறிந்து கொண்டார்). கூட்டங்கள் அந்த இடத்தில் தொடர்ந்து நடைபெற்றன. தேவன் தொடர்ந்து ஆசீர்வதித்துக் கொண்டே வந்து, முடிவில் நூற்றுக் கணக்கானோர் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தனர். ஒருநாள் சகோ. பிரான்ஹாம் பாட்டம் ஃபோர்டு என்னுமிடத்தில் இருக்கும் நீல நதியில் ஞானஸ்நான ஆராதனை நடத்திக் கொண்டிருந்தார். அந்த பிற்பகலில் அவர் முப்பது நாற்பது பேர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டியதாயிருந்தது. அதற்கு சற்று முன்பு, அந்த இடத்தில் ஒரு ஊழியக்காரர் கூட்டம் ஒன்றை நடத்தி, முழுக்கு ஞானஸ்நானத்துக்கு விரோதமாய் பிரசங்கித்தார். ஆனால் அந்த பிற்பகலில் தேவன் தமது வல்லமையை சிறப்பாக வெளிப்படுத்தினதின் விளைவாக, அந்த ஊழியக்காரரைச் சேர்ந்த பதினைந்து பேருக்கும் அதிகமானவர்கள் தாங்கள் உடுத்தியிருந்த நல்ல உடைகளுடன் தண்ணீருக்குள் நடந்து சென்று ஞானஸ்நானம் பெற்றனர். 65. அந்த வாரம் முழுவதும் ஜார்ஜியா ஜெபித்துக் கொண்டே வந்தாள். அவள், "ஒ. கர்த்தாவே, சகோ. பிரான்ஹாம் என்னை மறுபடியும் காணும்படி அவரை அனுப்புவீராக; நான் சுகம் பெறுவதை அவருக்குத் தரிசனத்தில் காண்பிப்பீராக. அப்பொழுது நான் மற்றவர்களுடன் கூட ஞானஸ்நானம் பெற முடியும்" என்று ஊக்கமாக ஜெபித்தாள். ஞானஸ்நான ஆராதனைக்கான நாள் வந்த போது, அந்த பெண் மிகவும் அமைதியற்றவளாய் அழுது கொண்டேயிருந்தாள். தாயார் அவளை சமாதானப்படுத்த முயன்றாள். ஆனால் அவள் இருதயம் உடைந்து போய், அவளை சமாதானப்படுத்த இயலவேயில்லை. ஞானஸ்நான ஆராதனை முடிந்தவுடனே, சகோ. பிரான்ஹாம் மாலை உணவுக்காக (supper) சகோ.ரைட்டின் வீடடுக்குச் சென்றார். அவருடைய மற்ற தரிசனம் நிறைவேறின போது அவருடன் கூட இருந்து சகோ. ப்ரேஸ் என்பவரும் அவருடன் சகோ.ரைட்டின் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்பொழுது ஆவியானவர் சகோ.பிரான்ஹாமிடம், "இப்பொழுது உணவு அருந்தாதே, காட்டுக்குப் போய் ஜெபி' என்றார். எனவே சகோ. பிரான்ஹாம் அங்கிருந்தவர்களிடம், "நான் ஜெபிப்பதற்காக காட்டுக்குச் செல்கிறேன். உணவு தயாரானவுடன் மணி அடியுங்கள், அப்பொழுது நான் வந்து விடுகிறேன்" என்றார் (அவர்கள் நகர்புற மணி ஒன்றை வைத்திருந்தனர்). இவ்விதம் சொல்லிவிட்டு, சிறிது தூரத்திலிருந்த காட்டுக்கு சென்று ஜெபிக்கத் தொடங்கினார். அவருடைய உடையில் அநேக அட்டைகள் ஒட்டிக் கொண்டதால் அவருக்கு ஜெபிப்பது கடினமாயிருந்தது. கூட்டத்துக்கு நேரமாகிவிடுமோ என்று அவர் எண்ணிக் கொண்டேயிருந்தார். இருப்பினும், அவர் முழு இருதயத்தோடும் ஜெபிக்கத் தொடங்கினார். விரைவில் அவர் ஆவிக்குள்ளானார். முடிவில் காட்டில் எங்கோயிருந்து கூப்பிடும் ஒரு சத்தத்தை அவர் கேட்டார். அவர் எழுந்தார், சூரியன் மறைந்து இருட்டாகத் தொடங்கினது. உணவு மணி அடித்தது. ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. அவரைக் கண்டு பிடிக்க, தேடுகிறவர்கள் அனுப்பப்பட்டனர். அவர் எழுந்தபோது, வானத்திலிருந்து மஞ்சள் நிற ஒளி ஒன்று புறப்பட்டு காட்டில் வீசுவதை அவர் கண்டார். ஒரு சத்தம் அவரிடம், "கார்டரின் வீட்டுக்குச் செல்" என்றுரைத்தது. அவ்வளவுதான். அதன் பிறகு காட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து சத்தம் எழும்பி, "ஓ, சகோ. பிரான்ஹாமே" என்று அவரை அழைப்பதைக் கேட்டார். அவர் காட்டிலிருந்து வேகமாக புறப்பட்டு ஏறக்குறைய சகோ.ரைட்டின் கரங்களில் போய் அடைந்தார். சகோ.ரைட் அவரிடம், “உணவு தயாராகி ஒரு மணி நேரத்துக்கு மேலாகி விட்டது. நாங்கள் உங்களை மணி அடித்து அழைத்துக் கொண்டிருந்தோம். என்ன நேர்ந்தது?" என்று கேட்டார். சகோ. பிரான்ஹாம், "இப்பொழுது என்னால் உண்ண முடியாது. நாம் இப்பொழுது கார்டரின் வீட்டுக்குச் செல்லப் போகிறோம். ஜார்ஜியா குணமாவதற்கென கர்த்தர் என்னை அங்கு அனுப்புகிறார்" என்றார். சகோ.ரைட் "நிச்சயமாகவா?" என்று கேட்டார். சகோ.ரைட் கூப்பிட்ட போது, சகோ. பிரேஸ் வந்தார். அவர்கள் காரில் ஏறி ஏழு மைல் தூரத்திலுள்ள கார்டரின் வீட்டுக்குப் புறப்பட்டு சென்றனர். அவர்கள் மற்றவர்களிடம், உணவு உண்டு விட்டு ஆலயத்துக்கு நேராக வரும்படி கூறினர். அவர்களால் காத்திருக்க முடியவில்லை, ஏனெனில் தரிசனம் சகோ. பிரான்ஹாம் அங்கு செல்லும்படி உரைத்தது. 66. தேவன் கம்பியின் இரு முனைகளிலும் கிரியை செய்தார். ஜனங்கள் மாற்குவின் வீட்டில் ஒன்றுகூடி, அவர்கள் அனைவரும் ஜெபித்துக் கொண்டிருந்த நேரத்தில் தூதன் பேதுருவினிடம் அங்கு போக உரைத்தது உங்களுக்கு நினைவிருக்கும். அதுபோன்று தான் இதுவும். அந்த நேரத்தில் ஜார்ஜியா அமைதியற்று இருந்தாள். தாயார் மிகவும் துயரமடைந்து, அடுத்த அறைக்குச் சென்று ஜெபிக்கத் தொடங்கினாள். அவள், "கர்த்தாவே, நான் என்ன செய்வேன்? அந்த ஆள் பிரான்ஹாம் இங்கு வந்து என் மகளை கலக்கமுறச் செய்துவிட்டார். அவள் ஒன்பது ஆண்டு காலமாக மரிக்கும் நிலையில் இருக்கிறாள். இந்த மனிதன் யார்?' என்று கேட்டாள். அதன்பிறகு அவள் ஜெபசிந்தையில் ஆழ்ந்துவிட்டாள். அப்பொழுது திடீரென்று "மேலே நோக்கிப் பார்" என்னும் ஒரு சத்தத்தைக் கேட்டாள். அவள் தலை நிமிர்ந்து பார்த்தபோது, சுவற்றில் ஒரு நிழலைக் கண்டது போல் அவளுக்குத் தென்பட்டது. அது ஒரு நபரின் நிழல், அது இயேசுவின் உருவம் போல் காணப்பட்டது. அவள், "ஆண்டவரே, நான் என்ன செய்வேன்?" என்றாள். தரிசனத்தில் கர்த்தர் அவளிடம், "வாசலுக்குள் யார் வருகிறார் என்று பார்" என்றார். அவள் சகோ. பிரான்ஹாமையும் அவரைப் பின்தொடர்ந்து இருவர் வருவதையும் கண்டாள். அவருடைய பரந்த நெற்றியின் மூலமும் அவருடைய மார்பினருகில் அவர் பிடித்திருந்த வேதாகமத்தின் மூலமும் அவள் சகோ. பிரான்ஹாமை அடையாளம் கண்டு கொண்டாள். அவள், "நான் கனவு காணவில்லை, நான் கனவு காணவில்லை என்று எண்ணுகிறேன்" என்று கூறத் தொடங்கினாள். அவள் பக்கத்து அறைக்கு ஓடிச் சென்று, "ஜார்ஜியா, ஏதோ ஒன்று நடந்துவிட்டது" என்று ஆச்சரியத்துடன் கூறினாள். அவள் தரிசனத்தை கூறி முடிக்கும் தருவாயில், கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அவள் பார்த்தபோது, சகோ. பிரான்ஹாம் அப்பொழுது தான் உள்ளே வந்து கொண்டிருந்தார். அவர் கதவைத் தட்டவில்லை. அவர் கதவுக்குள் பிரவேசித்து உள்ளே வந்தார். தாயார் ஏறக்குறைய மயக்கமுற்று நாற்காலியில் சாய்ந்தாள். சகோ.பிரான்ஹாம் படுக்கையினருகில் நடந்து சென்று ஜார்ஜியாவிடம், "சகோதரியே, தைரியமாயிரு. நீ சேவித்து, சிநேகித்து, உன் ஜெபத்தை ஏறெடுத்த இயேசுகிறிஸ்து உன் விண்ணப்பத்துக்குச் செவி கொடுத்து ஒரு தரிசனத்தின் மூலம் என்னை இங்கு அனுப்பியுள்ளார். எழுந்து நில், அவர் உன்னை சுகமாக்கிவிட்டார்' என்றார். 67. சகோ. பிரான்ஹாம் அவள் கையைப் பிடித்து தூக்கி விட்டார். அவள் அநேக ஆண்டுகளாக படுக்கையை விட்டு எழுந்திருக்கவேயில்லை என்பதை நினைவில் கொள்ளவும். அவள் உடல் முழுவதும் புண் இருந்ததால், அவளுக்கு அடியில் ஒரு துப்பட்டியை அவர்களால் விரிக்க இயலவில்லை. அவளுடைய தலை ஏறத்தாழ ஒரு சதுரத்தைப் போல் காணப்பட்டது. அவளுடைய கண்கள் ஆழமாக குழி விழுந்திருந்தன. அவளுடைய கைகள் துடைப்பக்குச்சியைப் போல் இருந்தது. ஆனால் சகோ. பிரான்ஹாம் இயேசு அவளை சுகமாக்கினார் என்று கூறின மாத்திரத்தில், அவள் எழுந்து காலூன்றி நின்றாள். அவளுடைய மகள் ஒன்பது ஆண்டுகள் கழித்து முதன் முறையாக, எந்த மனிதனையும் தாங்காமல், தன் சொந்த பலத்தினால் அல்ல, பரிசுத்த ஆவியின் பலத்தினால் தரையில் நடப்பதைக் கண்ட தாயார் அலறினாள். சகோ. பிரான்ஹாம் கட்டிடத்தை விட்டு வெளியே செல்லப் புறப்பட்டபோது, அவளுடைய சகோதரி ஓடி வந்து, அவளும் அலறத் தொடங்கினாள். பிறகு, அவளுடைய தந்தை வீட்டுக்கு வந்த போது, அவருடைய மகள் பியானோவின் அருகில் உட்கார்ந்து கொண்டு இசைப்பதைக் கண்டு ஏறக்குறைய மயக்கமடைந்தார். அவர் மலைக்கு கீழேயுள்ள நகரத்துக்குச் சென்று அங்கிருந்த மக்களிடம் நடந்ததைக் கூறினார். அந்தப் பெண் கொல்லைப்புறத்துக்குச் சென்று புல்தரையில் உட்கார்ந்து கொண்டு புற்களையும் இலைகளையும் ஆசீர்வதிக்கத் தொடங்கினாள். அவள், "ஓ தேவனே, எனக்கு நீர் எவ்வளவு நல்லவராக இருக்கிறீர்" என்று கூறி ஆனந்தமடைந்தாள். அன்றிரவு ஆலயம் ஜனங்களால் நிரம்பி வழிந்தது. ஞாயிற்றுக்கிழமை வந்தபோது, அவர்களுக்கு மற்றுமொரு ஞானஸ்நானம் ஆராதனை இருந்தது. அப்பொழுது ஜார்ஜியாவும் அந்த நேல் பெண்ணும் பாட்டம் ஃபோர்டு என்னுமிடத்தில் ஞானஸ்நானம் பெற்றனர். தற்பொழுது ஜார்ஜியா மில் டவுன் பாப்டிஸ்டு ஆலயத்தில் பியானோ இசைத்து வருகிறாள். அவள் பூரண சுகமுள்ளவளாய் இருக்கிறாள். 68. மேலே உரைக்கப்பட்டவை இரண்டு சம்பவங்கள் மட்டுமே. உண்மையைக் கூறினால் மேடையின் மேல் ஏற்பட்ட சுகமளித்தலின் தொடர்பாக ஆயிரக்கணக்கான தரிசனங்கள் தோன்றியுள்ளன. அவைகளில் ஒன்றும்கூட நிறைவேறாமல் போனதில்லை. அவை பிழையற்றவைகளாய் இருந்தன. இனி வரப்போகும் தரிசனங்களும் அவ்வாறே பிழையின்றி இருக்கும். சகோ. பிரான்ஹாமின் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள், அவர் அடிக்கடி “கர்த்தர் உரைக்கிறதாவது" என்று கூறுவதை அறிந்துள்ளனர். அவர் அவ்விதம் கூறும்போது, அவர் எதன் தொடர்பாக அவ்விதம் உரைக்கிறாரோ அது நிச்சயம் நிறைவேறும். ஒருமுறை கூட அது நிறைவேறாமல் போனதில்லை. அவர் அந்த சொற்களை கூறாமல் இருந்தால், அது கண்டிப்பாக நிறைவேறும் என்று சுட்டிக்காட்டும் தரிசனம் எதுவும் உண்டாகவில்லை என்று அர்த்தம். இதை தெளிவாக புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தை நாம் பார்ப்போம். இங்கு இருவர் ஊனமுற்றோராய் அவருடைய முன்னிலையில் நிற்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களைக் குறித்து அவர் கண்ட தரிசனத்தின் மூலம், அவர்கள் யாரென்றும், அவர்கள் எங்கிருந்து வருகின்றனர் என்றும், அவர்களுக்கு இந்த நிலை எவ்வாறு ஏற்பட்டது என்றும் அவர் எடுத்துரைக்கிறார். ஜெபித்த பிறகு அவர் ஒருவரிடம், "நீர் உம் வழி சென்று தேவனை விசுவாசியும்" என்றுரைக்கலாம். ஆனால் மற்றவரிடமோ அவர், “கர்த்தர் உரைக்கிறதாவது, நீர் சுகமடைந்து விட்டீர்" என்றுரைக்கக் கூடும். அவ்விதம் உரைக்கப்பட்ட இரண்டாம் நபர் உடனே எழுந்து நிற்கக் கூடும், அல்லது அவரை சிறிது கழிந்து சொஸ்தப்படுத்த தேவன் சித்தங்கொண்டால், அதனால் ஒரு வித்தியாசமுமில்லை, அவர் நிச்சயம் சுகம் பெறுவார். பாருங்கள், முதலாம் நபரின் விஷயத்தில், அவர் சுகம் பெறுவார் என்று தரிசனம் காணவில்லை. ஆனால் இரண்டாம் நபரின் விஷயத்தில், அவர் நடப்பதை ஒரு தரிசனத்தில் கண்டார். ஒவ்வொரு தரிசனமும் அவர் கண்டவிதமாகவே பிழையின்றி நிறைவேறி வந்துள்ளது. இதோ இதைக் குறித்த மற்றொரு உதாரணம். ஒரு நாள் நடந்த கூட்டத்தின் போது, ஒரு குருடன் ஜெபத்துக்காக வந்திருந்தான். சகோ.பிரான்ஹாம் அவனுக்காக ஜெபித்தபோது, அவர், "கர்த்தர் உரைக்கிறதாவது, நீ சுகமடைந்துவிட்டாய்" என்றார். அந்த மனிதனோ அவனுடைய பார்வையற்ற நிலையிலே வீடு திரும்பினான். அவன் சகோ. பிரான்ஹாமின் கூட்டங்களை ஒழுங்கு செய்த ஒரு குழுவினரிடம் சென்று, அந்த தீர்க்கதரிசனம் நிறைவேறாததைக் குறித்து குழப்பமுற்றுள்ளதாகக் கூறினான். அந்த குழுவினரில் ஒருவர் ஜெப வரிசை ஆராதனை பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாவை மறுபடியும் போட்டுக் கேட்ட போது, சகோ. பிரான்ஹாம் அவனைக் குறித்த தரிசனம் கண்டு உறுதியாக "கர்த்தர் உரைக்கிறதாவது, நீ சுகமடைந்துவிட்டாய்" என்று கூறினது அதில் பதிவாகி இருந்தது. அந்த நபர் குருடாயிருந்தவனை உற்சாகப்படுத்தி, அது உண்மையென்றும், அவன் தேவனை விசுவாசிக்க வேண்டுமென்றும், தேவன், "உன்னை நான் ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன்... உன்னைப் பெருகப் பண்ணுவேன்" என்று ஆபிரகாமிடம் உரைத்தது போன்றே இவனுடைய விவகாரமும் என்று கூறினார். "நீ சுகமடைந்து விட்டாய் என்று நான் உரைக்கிறேன், அது இப்பொழுதே நிறைவேறி விட்டது என்று நீ விசுவாசிக்க வேண்டும்" என்பதே அதன் அர்த்தம். அந்த குருடன் மகிழ்ச்சியுற்றவனாய், தேவன் அவனைச் சுகப்படுத்தினதற்காக அவரைத் துதித்துக் கொண்டேயிருந்தான். ஒரு நாள் அவன் முகச் சவரம் செய்வதற் காக சவரக் கடைக்கு சென்ற போது, அங்கிருந்து நாவிதன் கேலியாக சகோ. பிரான்ஹாமைக் குறித்தும் சுகமடைதலைக் குறித்தும் குறிப்பிட்டான். அப்பொழுது அந்த குருடன், "ஆம், அதைக் குறித்து எனக்கு எல்லாம் தெரியும். நான் அங்கு சென்றிருந்தேன். அவர் எனக்காக ஜெபித்தார். நான் சுகமடைந்ததற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்றான். அவன் அதை சொன்ன மாத்திரத்தில் பூரண சுகமடைந்தான். அவன் நாற்காலியை விட்டு குதித்தெழுந்து, தேவனைத் துதித்தான். 69. 1950ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சங்கை பிரான்ஹாம் டெக்ஸாஸிலுள்ள ஹவுஸ்டனில் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த போது, மிகவும் பிரமிக்கத்தக்க ஒரு சம்பவம் நிகழ்ந்து, இயற்கைக்கு மேம்பட்ட ஒரு ஒளி அவருடைய சுகமளித்தலின் ஊழியத்தை தொடருகிறது என்னும் உண்மையை சதாகாலங்களுக்கும் உறுதி படுத்திவிட்டது. அப்பொழுது கோபங்கொண்ட ஒரு போதகர் சகோ. பிரான்ஹாம் வியாதியஸ்தரை சுகப்படுத்துவதாக தவறாகக் கூறுவதாக அவர் மேல் குற்றஞ் சாட்டினார். சுகமளித்தல் இந்நாளுக்குரியதல்ல என்றும் அவர் சாதித்தார். அவர் இன்னும் சில ஊழியக்காரருடன் சேர்ந்து கொண்டு இவ்விஷயத்தை மிகவும் வலியுறுத்தினதால், இதைக் குறித்த ஒரு விவாதத்தை நடத்துவதென கூட்டத்தை ஒழுங்கு செய்த அதிகாரிகள் தீர்மானித்தனர். இது செய்தியாளர்களுக்கு மிகவும் ருசியான வாய்க்கு உணவாக அமைந்திருந்தது. முடிவில் அது மிகவும் ஒழுக்கக்குறைவான நாடகமாக மாறி விட்டது. சங்கை பெஸ்ட் என்று அழைக்கப்பட்ட இவர் அயர்ஸ் அண்டு கிப்பர்மான் என்னும் நிர்வாகத்தைச் சேர்ந்த புகைப்படம் எடுப்பவர்களிடம், சகோ. பிரான்ஹாம் சங்கை பாஸ்வர்த்தின் மூக்குக்குக் கீழ் தன் கைமுட்டியை நீட்டும்போது புகைப்படங்கள் எடுக்கும்படிக்கும், அவர் இங்குமங்கும் மேடையின் மேல் நடக்கும்போது இன்னும் சில புகைப்படங்கள் எடுக்கும்படிக்கும் உத்தரவிட்டார். சங்கை பெஸ்டும் அவருடைய குழுவினரும் இந்த விஷயத்தில் ஜெயிக்க முடியவில்லை. கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் சகோ. பிரான்ஹாமை ஆதரித்தனர் என்பது தெளிவான போது, விவாதத்துக்கு முன்னால் வரும்படி சகோ. பிரான்ஹாமுக்குத் தொடர்ச்சியாக சவால் விடுக்கப்பட்டு கொண்டே வந்தது. சகோ. பிரான்ஹாம் ஞானமுள்ள, தேவனுடைய தாழ்மையான ஊழியக்காரன். சத்தியமான வார்த்தையின் வல்லமை கிரியை செய்தவன் மூலம் ஜனங்கள் உண்மையைக் காண முடியவில்லை என்றால், விவாதத்தின் மூலம் அவர்கள் நிச்சயம் அதைக் காண இயலாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். முடிவில் அவர் விவாதத்துக்கு இசைந்து முன்னுக்கு வந்தார். அவர் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டிருந்த போது இன்னும் ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது, அது சகோ. பிரான்ஹாமின் புகைப்படம். அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட போது, சங்கை பிரான்ஹாமின் தலைக்கு மேல் ஒரு பிரகாசமான ஒளி தோன்றினதை பலர் கண்டனர். ஆனால் பெரும் பாலோர் அதைக் காணவில்லை. அந்த 'பிலிம்' ஸ்டூடியோவில் 'டெவலப் செய்யப்பட்ட போது, சங்கை பெஸ்டை எடுத்த எட்டு அல்லது ஒன்பது புகைப்படங்கள் விழவேயில்லை. ஆனால் சகோ. பிரான்ஹாமின் புகைப்படம் மட்டும் தெளிவாக விழுந்திருந்தது, அவருடைய தலைக்கு மேல் ஒரு ஒளி காணப்பட்டது. இந்த புகைப்படம் அப்பொழுது இரகசிய போலீஸ் இரசாயனக் கூடத்துக்கு தலைவராயிருந்த டாக்டர் ஜார்ஜ் லேஸி என்பவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அந்த புகைப்படம் பொய்யான கருத்துக்காக திருத்தி அமைக்கப்படவில்லையென்றும் (tampered), இருமுறை ஒரே பிலிம்'மில் படம் எடுக்கப்படவில்லையென்றும் (double exposure), தெரிந்துள்ள எல்லா பரிசோதனைகளும் உபயோகிக்கப்பட்டு, இது தொடப்படாத (untouched) புகைப்படம் என்றும் தீர்ப்பு அளிக்கப்படுகிறது என்று அவர் கையொப்பமிட்ட இரண்டு வாக்குமூலங்களை அளித்தார். உலகிலேயே இது ஒன்று மட்டும் இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றின் உண்மையான புகைப்படமாயுள்ளது என்று அவர் தன் சொந்த அபிப்பிராயத்தைத் தெரிவித்தார். 70. இந்த மனிதனின் பொது ஊழியத்தைக் குறித்து கணக்கற்ற புத்தகங்கள் உண்மையில் எழுதப்படக் கூடும். ஆனால் நாம் தொடர்ந்து எழுத போதிய இடம் இல்லாத காரணத்தால் அவருடைய தனிப்பட்ட ஊழியத்தில் நடந்ததும், அவருடன் கூட சென்ற கூட்டாளிகள் கண்ட சில காரியங்களையும் எடுத்துரைப்பது நலமாயிருக்கும். 71. சகோ. பிரான்ஹாம் இயற்கையில் பிரியமுள்ளவர். அவர் வேட்டையாடுவதும் மீன் பிடிப்பதும் வழக்கம். அவர் குதிரை சவாரி செய்து, பல மைல்கள் நடப்பார். எனவே பின்வரும் சம்பவங்கள் அவர் அதிகமாக நேசிக்கும் காடுகளுடனும் மலைகளுடனும் தொடர்பு கொண்டவை. ஊர்ஜிதம் செய்யப்பட்ட உயிர்த்தெழுதல் ஒருநாள் சகோ. பிரான்ஹாம், முன்பு யேகோவா சாட்சிகள் ஸ்தாபனத்தை சேர்ந்திருந்த இரு சகோதரர்களாகிய பாங்க்ஸ் மற்றும் லயல் உட்ஸ் என்பவர்களுடன் மீன் பிடிக்க டென்னஸியிலுள்ள டேல் ஹாலோ என்னுமிடத்துக்குச் சென்றார். முதலாம் நாள் காலையில் பாங்க்ஸும் லையலும் தண்ணீரில் இருந்தபோது, சர்ச் ஆஃப் காட் சபையைச் சேர்ந்த ஒரு அருமையான அம்மணி, அவர்கள் புசிக்க புதிய ரொட்டியும் பாலும் கொடுப்பதை அவர்கள் நினைவுகூர்ந்து அதைக் குறித்து பேசிக் கொண்டனர். அவர்கள் அவளுடைய கிறிஸ்தவ உபசரிப்பை எண்ணின போது, பாங்க்ஸ் லையலிடம், அவர்கள் இருவரும் அவளிடம் சென்று அவர்கள் இப்பொழுது இரட்சிக்கப்பட்டு தேவனை சேவிக்க முயல்வதை எடுத்துரைக்க வேண்டும் என்று கூறினார். அவர் அவ்விதம் கூறினபோது, தேவ ஆவியானவர் தன் மேல் அசைவாடி தன் கவனத்தைக் கவர்ந்ததை சகோ. பிரான்ஹாம் உணர்ந்தார். அப்பொழுது ஒரு சத்தம். "கர்த்தர் உரைக்கிறதாவது, இன்னும் சில மணி நேரங்களில் ஒரு சிறு பிராணியின் உயிர்த்தெழுதல் உண்டாகும்" என்றுரைத்தது. உடனே அவருடைய மகன் ஜோசப் கட்டித் தழுவும் போது தரையிலே போட்டு கால் ஊனமுற்ற பூனைக்குட்டி அவருக்கு ஞாபகம் வந்தது. ஒருக்கால் அது இறந்து விட்டிருக்குமென்றும், விசுவாசமுள்ள ஜெபம் அதன் சொந்தக்காரனுக்கு அதை உயிரோ டெழுப்பித் தரக்கூடும் என்றும் அவர் எண்ணினார். அவர்கள் சில மணி நேரமாக மீன் பிடித்துக் கொண்டிருந் தனர். அப்பொழுது லயல் நீல நிற சிறு மீன் ஒன்றைத் தன் தூண்டிலில் பிடித்து வெளியே இழுத்தார். அது மிகவும் சிறிய மீனாக இருந்த போதிலும் ஒரே கவ்வில் தூண்டில் முள்ளையும் அதில் கண்ணியாக வைக்கப்பட்டிருந்ததையும் விழுங்கிவிட்டது. அதை தூண்டில் முள்ளிலிருந்து வெளியே எடுக்க வழியே இல்லை, எனவே லயல் தூண்டில் கயிற்றை பலமாகக் குலுக்கினார், அப்பொழுது தூண்டில் முள் வெளியே வந்தது. ஆனால் அதனுடன் கூட அந்த மீனின் செவுள்களும் குடல்களும் வெளிவந்தன. அவர் அந்த மீனைத் தண்ணீரில் போட்டார். அது ஓரிரு முறை உடலை குலுக்கி பக்கவாட்டில் விழுந்து, கரைக்கு வந்து கொண்டிருக்கும் அலைகளின் மேல் மிதந்து கொண்டிருந்தது. 72. சுமார் 30 நிமிடங்கள் கழித்து, சகோ. பிரான்ஹாமுக்கு ஒரு வினோதமான உணர்வு தோன்றினது. அவர் கடற்கரையில் இருந்த மரங்களை அண்ணாந்து பார்த்த போது, பலத்த காற்றடிக்கிற முழக்கம் கொண்ட சுழற்காற்று அசைந்து கொண்டிருந்தது. தேவ ஆவியானவர் அவரிடம், "எழுந்து நின்று அந்த சிறு மீனிடம் பேசு, அது உயிர் பெறும்' என்றார். அவர் உடனே காலூன்றி எழுந்து நின்று, "சிறு மீனே , உனக்கு உயிர் தருகிறேன்" என்றார். இறந்து போய், சில வினாடிகளுக்கு முன்பு கரையை நோக்கி வந்து கொண்டிருக்கும் அலைகளின் மேல் மிதந்து கொண்டிருந்த அந்த மீன் உடனே உடலை அசைத்து கடலின் ஆழத்துக்கு வேகமாக நீந்திச் சென்றது. பாங்க்ஸ் உட் அந்த அற்புதத்தைக் கண்டு பிரமித்துப் போய், மறுரூபமலையின் மேல் இயேசுவின் சீஷர்கள் கூறினது போல், "நாம் இங்கே இருக்கிறது நல்லது" என்றார். லயல் கவலை கொண்டு, "சகோ. பிரான்ஹாமே, அது எனக்காக செய்யப்பட்டது, இல்லையா?" என்றார். சகோ.பிரான்ஹாம், "இல்லை, உமக்காக அல்ல" என்றார். இந்த இருவரும் பிரமிக்கத்தக்க இந்த சம்பவத்துக்கு நம்பத் தகுந்த சாட்சிகளாவர். அந்த மீனை தேவன் ஏன் உயிரோடெழுப்பினார்? சகோ. பிரான்ஹாம் வைத்திருந்த ஜெபப் பட்டியலில் உதவி தேவையுள்ள நூற்றுக்கணக்கானோர் இருக்கவில்லையா? அவர் ஊனமுற்ற சிலரை , அல்லது புற்றுநோயால் அவதிப்படுவர்களை தேவனுடைய மகிமைக் கென்று எழுப்பியிருந்தால் நலமாயிருந்திருக்கும் அல்லவா? ஆம், அவர்களை எழுப்ப அவர் விரும்புகிறார். ஆனால் இந்த மீனின் உயிர்த்தெழுதல் தேவன் முழு உலகுக்கும் - அது பெரிதானாலும் சிறிதானாலும் - தேவனாயிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அவர் தம் சிருஷ்டிகளுக்காக கவலை கொள்கிறார். அவர் அவர்கள் அனைவரையும் நேசிக்கிறார். கலைமானும் கரடியும் 73. சகோ. பிரான்ஹாம் எப்பொழுதுமே விசுவாசமுள்ள ஒரு மகனாக இருந்து வந்தார். எனவே அவருடைய தாயார் மரித்த போது, அந்த இழப்பை அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் ஆறுதலின் தேவன், அவருடைய தாயாரைக் குறித்து தன் இருதயத்தில் கொண்டிருந்து துயரத்தைப் போக்க அவருக்கு ஆறுதல் கூறினார். இழப்பின் துயரத்திலிருந்த அவருடைய கவனத்தை எவ்விதம் திசை திருப்ப வேண்டுமென்று ஒரு அன்புள்ள தகப்பனுக்குத் தெரியும். வருங்காலத்தில் கனடாவில் சகோ.பிரான்ஹாம் மேற்கொள்ளவிருந்த ஒரு வேட்டைப் பயணத்தைக் குறித்த தரிசனத்தை தேவன் அவருக்கு அருளினார். இது நிறைவேறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே சகோ. பிரான்ஹாம் இந்த தரிசனத்தை ஜெபர்ஸ்ன்வில்லில் இருந்த சபையோருக்கு விவரித்தார். அவர் கண்ட தரிசனத்தில் அவர் வட அமெரிக்காவில் எங்கோ ஓரிடத்தில் ஒரு பெரிய வேட்டைப் பொருளை வேட்டையாடிக் கொண்டிருந்தார். அது எந்த இடம் என்று அவரால் சரியாக கூற இயலவில்லை, ஆனால் அவருக்குக் கிடைக்கப் போகின்ற வேட்டைப் பொருள் என்னவென்பதை அவர் அறிந்திருந்தார். அந்த வேட்டைப் பொருட்களில் ஒன்று காண்பதற்கு மானைப் போல் இருந்தது, ஆனால் அது மானைக் காட்டிலும் பெரிதாயிருந்தது. அவருடைய வாழ்க்கையிலே அவர் அத்தகைய ஒன்றைக் கண்டதுமில்லை, வேட்டையாடினதுமில்லை. அவர் அந்த மிருகத்தை வேட்டையாடச் சென்றபோது, அவருடன் இருவர் இருந்தனர், அவர்களில் ஒருவர் கட்டம் போட்ட பச்சை சட்டை அணிந்திருந்தார். மானைப் போல் காணப்பட்ட இந்த மிருகத்தை அவர் சந்தடியின்றி பின்தொடரும் கையில், அவருடைய கண்களில் அதே இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்மானும் ஒரு மான்குட்டியும் தென்பட்டன. அவர் சரியான ஒரு நிலையில் துப்பாக்கியை குறிவைத்து அந்த மிருகத்தை சுட்டு வீழ்த்தி விட்டு, அதை பரிசோதிக்கச் சென்றார். அவர் அவ்விதம் பரிசோதிக்கையில், ஒரு சிறு பிள்ளையின் கரம் போன்ற ஒன்று அதன் கொம்பின் நீளத்தை அளப்பதை அவர் கண்டார். அளக்கும் நாடாவில் அது 42 அங்குலமாயிருந்தது. அவர் வேட்டையாடிய இந்தப் பொருளைக் கொண்டு வருகை யில், வெள்ளி முனை கொண்ட 'கிரிஸ்லி' வகையைச் சேர்ந்த (grizzly) ஒரு கரடியைக் கண்டார். அதை அவர் ஒரே சுட்டில் கொன்று விட் டார். அது செத்து கீழே கிடக்கையில், அவர் 270 துப்பாக்கியை உபயோகித்து 130 ரவைக் குண்டினால் அதைக் கொன்று விட்டதைக் குறித்து சிந்தனை செய்யத் தொடங்கினார். உண்மையில் அந்த அளவு வேட்டைப் பொருளுக்கு இது மிகவும் சிறிய துப்பாக்கி. அவர் கரடியின் தோலை உரித்தார். அதன்பிறகு அந்த தரிசனம் அவரை விட்டு நீங்கினது. 74. ஒரு மாதம் கழித்து, அருமை நண்பர் ஒருவர், கரடியும் நீர் எருமையும் (moose) வேட்டையாட அவரை அலாஸ்காவுக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அந்த அழைப்பு தரிசனத்துடன் பொருந்து வதாகத் தோன்றவில்லை, ஏனெனில் நீர் எருமையின் கொம்புகள் பலகை வடிவாயிருக்கும், ஆனால் தரிசனத்தில் அவர் கண்ட மிருகத்துக்கு மானின் கொம்புகளைப் போன்ற கொம்புகள் இருந்தன . மற்றொரு மாதம் கடந்தது. அவருக்கு பட் (ஹார்வி) சவுத்விக் என்பவரிடமிருந்து, அவருடனும், மற்றொரு கிறிஸ்தவ சகோதரனும் அவருடைய போதகருமாகிய எட்டி பிஸ்கல் என்பவருடனும் சேர்ந்து கரடி வேட்டையாட அழைப்பு வந்தது. சகோ.சவுத்விக் அலாஸ்கா நெடுஞ்சாலையில் முதல் தர வழிகாட்டியாக பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு சகோ. பிரான்ஹாம் அங்கு வேட்டையாடச் சென்றிருக்கிறார். அப்பொழுது மிகவும் வியாதிப்பட்டிருந்த ஒரு பையன் சுகம் பெற அவர் உதவி செய்தார். அவன் சுகம் பெறுதல் இவ்வாறு நிகழ்ந்தது. ஃபோர்ட் செயின்ட் ஜான் என்னுமிடம் தூர வடக்கில் உள்ளது. உண்மையில் அது யூகான் பிரதேசத்தில் உள்ளது. அங்கு சூரியன் அஸ்தமிப்பதில்லை, இருட்டாகும் என்பது மட்டுமே. எனவே வேட் டைக்காரர்களுக்கு ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து பேச நிறைய நேரம் இருந்தது. சங்கை பிஸ்கல் பட்டிடம் சகோ. பிரான்ஹாமின் கூட்டங்களைக் குறித்தும், தரிசனங்கள், சுகம் பெறுதல் போன்றவைகளைக் குறித்தும் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது பட், வலிப்பு நோயினால் அவதியுறும் தன் சகோதரனை சகோ. பிரான்ஹாம் காண நேரிட்டால் நலமாயிருக்கும் என்று கூறினார். ஏனெனில் அதன் மூலம் நன்மையானது ஒன்று நிச்சயம் பிறக்கும் என்று அவர் உறுதியாக அறிந்திருந்தார். சகோ. பிரான்ஹாம் ஒரு தரிசனம் கண்டு அந்த பையன் சுகம் பெற ஜெபிப்பது குறித்து அவர் அடிக்கடி பேசிக் கொண்டு வந்தார். ஒருநாள் சகோ. பிரான்ஹாம், பாதை தவறி திரிந்து கொண்டிருந்த குதிரைகளை மீண்டும் பாதையில் கொண்டு வர தன் கூட்டாளிகளுக்கு உதவி செய்து முடித்த பிறகு, இந்த வாலிபனைக் குறித்த தரிசனம் ஒன்றைக் கண்டார். அவர் பாதையில் குதிரையின் மேல் சவாரி செய்து கடைசியில் வந்து கொண்டிருந்தார். எனவே அவர் பட்டிடம் பேசுவதற்காக குதிரையை காலால் தட்டி ஓட்டி முன்னால் வந்தார். அவர் திரு. சவுத்விக்கிடம், அவருடைய சகோதரனுக்கு சிறு வயது முதற்கொண்டே இந்த வலிப்பு நோய் இருந்து வந்திருப்பதாக தரிசனம் அவருக்குக் காண்பித்தது என்று கூறி, அந்த வாலிபனைக் குறித்து விவரித்துக் கொண்டே சென்றார். அது முற்றிலும் உண்மையாயிருந்தது. அதன்பிறகு அவர், அந்த பையனுக்கு ஆளனுப்பி ஃபோர்ட் செயின்ட் ஜானுக்கு கொண்டு வந்து அவனைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றும், அடுத்த முறை வலிப்பு வரும்போது அவனுடைய சட்டையைக் கிழித்து நெருப்பில் எரிந்தால் வலிப்பு நோய் அவனை விட்டுப் போய் விடுமென்றும், இதையெல்லாம் அவர் கர்த்தரின் நாமத்தில் செய்தால், வெற்றி நிச்சயம் என்றும் கூறினார். 75. நல்லது. அவர்கள் அந்த பையனை ஃபோர்ட் செயின்ட் ஜானுக்கு கொண்டு வந்தனர். பட் தன் மனைவியிடம் அவருக்கு "கர்த்தர் உரைக்கிறதாவது என்பது உள்ளதென்றும், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், செய்யக் கூறினதை அவ்விதமே பின்பற்றுதலே என்றார். அந்த ஏழை பையனுக்கு சில நாட்களில், ஒரே நாளில் ஆறு முறை வலிப்பு வந்ததுண்டு. அவனுக்கு அடுத்த முறை வலிப்பு வந்தபோது, பட் அப்பொழுது வீட்டில் இல்லை. ஆனால் திருமதி.சவுத்விக் ஆவியில் நிறைந்த ஒரு கிறிஸ்தவப் பெண். அவள் அவனுடைய சட்டையைக் கிழித்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அதை நெருப்பில் எரிந்தாள். வலிப்பு நின்று போய் அது மறுபடியும் வரவேயில்லை எனவே வேட்டைக்காக சகோ. பிரான்ஹாமுக்கு அழைப்பு வந்த போது, அவருக்குப் போக வேண்டும் என்னும் உணர்வு உண்டானது. அவரும் ஃபிரட் சாத்மனும் புறப்பட்டுச் சென்று, போகும் வழியில் நூற்றுக்கணக்கானோரிடம் அந்த தரிசனத்தைக் கூறினர். எனவே அநேகர், அவருடைய பயணத்தின் விளைவை அறிய ஆவலாய் காத்திருந்து, இம்முறை அந்த தரிசனம் நிறை வேறுமோ நிறைவேறாதோ என்று எண்ணிக் கொண்டிருந்தனர். இந்த இருவரும், அவர்கள் வேட்டைக்குப் போகின்ற அந்த காட்டுப் பிரதேசத்தின் அமைப்பையும் அவர்களுக்குக் கிடைக்கப் போகின்ற இரு மிருகங்களையும் வரையும் அளவுக்குச் சென்றுவிட்டனர். அந்த இடத்தை அடைந்தவுடன் அவர் தன்னுடைய வழிகாட்டியிடம் இதைக் குறித்து பேசினார். அந்த காட்டில் அத்தகைய மிருகங்கள் எதுவுமில்லை என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது; சொல்லப் போனால் மான்களே அங்கு அபூர்வம். மேலும் கலைமான்களுக்கு பலகை வடிவுள்ள கொம்புகளே இருக்கும், தரிசனத்தில் கண்ட அந்த மிருகத்துக்கு அப்படிப்பட்ட கொம்புகள் இருக்கவில்லை. மட்டுமின்றி, அங்கு கரடிகள் - முக்கியமாக வெள்ளி முனை கரடிகள் - கிடையவே கிடையாது. 76. சங்கை பிரான்ஹாம் அதைக் குறித்து கவலை கொள்ளவே யில்லை. ஏனெனில் அந்த தரிசனம் ஒருக்கால் வரப்போகும் நாட்கள் ஒன்றில் நிறைவேறக் கூடும், ஆனால் அந்த தரிசனம் எப்படியும் நிறைவேறும் என்பதை மட்டும் அவர் அறிந்திருந்தார் அவர்கள் ஆடுகளைத் தேடத் தொடங்கினர். மூன்று நாட்கள் கழித்து எட்டி ஒரு ஆற்றில் விழுந்தார். எனவே அவர் இடுப்பை மாற்றிக் கொள்ள ட்ரெயிலர்' வண்டிக்குச் சென்றார். மற்றவர்கள் தொடர்ந்து மலையில் ஏறி உயரத்தை அடைந்தனர். காலையில் அவர்கள் ஒரு கலைமானையும் அதன் குட்டியையும் கண்டனர். அதன் பிறகு அவர்கள் சில ஆடுகளைக் கண்டனர். எட்டி ஒரு ஆண் கலை மானைக் கண்டு அதை சுட்டுக் கொன்றார். அவர்கள் அதைச் சுத்தம் செய்து தங்கள் முகாமுக்குக் கொண்டு சென்றனர். சகோ. பிரான்ஹாமும் பட்டும் வேட்டைப் பொருளைத் தேடி மலையின் மற்ற பாகத்துக்குச் செல்ல எண்ணி அங்கு புறப்பட்டுச் சென்றனர். சகோ.பிரான்ஹாம் தன்னிடமிருந்த தூரப்பார்வை கண்ணாடியைக் கொண்டு மலையை முழுவதும் நுட்பமாக பார்வையிட தீர்மானித்தார். அவர் அவ்விதம் செய்த போது, அவர் தரிசனத்தில் கண்ட அந்த மிருகம் அங்கிருந்தது. அவர் தூரப் பார்வை கண்ணாடியை பட்டிடம் கொடுத்தார். அவர் ஒரு பெரிய கலைமானைக் கண்டார். அதன் கொம்புகள் வித்தியாசமாயிருந்தன. அவை பலகை வடிவில் இராமல், மான்களின் கொம்புகள் போல் இருந்தன. அந்த மிருகமும் அந்த காட்சியின் அமைப்பும் அவர் தரிசனத்தில் கண்டபடியே அமைந்திருந்தன. அப்பொழுது பட் சகோ. பிரான்ஹாமிடம், அப்படியானால் அங்கு ஒரு கரடியும் கட்டம் போட்ட பச்சை சட்டை அணிந்த ஒருவரும் இருக்க வேண்டுமே என்றார். சகோ. பிரான்ஹாம் அவரிடம், முகாம் இருந்த திசையில் பார்க்கும்படி கூறினார். அங்கு எட்டி, வேட்டைக்குச் செல்கையில் அவர் எடுத்துச் சென்ற மூட்டையில் தன் மனைவி வைத்திருந்த கட்டம் போட்ட பச்சை சட்டை அணிந்தவராய் அங்கிருந்தார். அப்பொழுது பட் மறுபடியும் அந்த கலைமானை உற்று நோக்கினார். அது அவர்கள் இருந்த திசையை நோக்கிக் கொண்டிருப்பதாலும், அவர்களை மறைப்பதற்கு அங்கு போதிய புதர்கள் இல்லாதனாலும் அதை நிச்சயம் சுட்டு வீழ்த்த முடியாது என்று அவர் எண்ணினார். ஆனால் அவர்கள் தொடர்ந்து முன்சென்றனர், அந்த மிருகமோ அசையாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது. அவர்கள் 35 கெஜ தூரத்தை அடைந்தனர். சகோ. பிரான்ஹாம் அந்த கலைமானைச் சுட்டு வீழ்த்தினார். மற்ற கலைமான்களும் சுற்று வட்டாரத்தில் இருந்தன. ஆனால் அவை பலகை வடிவுள்ள கொம்புகளைக் கொண்டிருந்தன. 77. அப்பொழுது ஒரு கேள்வி எழுந்தது. அதாவது, ஒரு கரடியும் அங்கிருக்குமா? அது பழைய ஏற்பாட்டின் காலத்தில் எழுந்த கேள் வியைப் போன்றது. அதாவது, தேவன் மன்னாவைப் புசிக்கக் கொடுத்தார். ஆனால் அவரால் தண்ணீரும் கொடுக்க முடியுமா? பட் தூரப் பார்வை கண்னாடியை எடுத்து மலையை நுட்பமாக நோக்கினார். அவரால் மலையின் முழு பரப்பையும் காண முடிந் தது. ஆனால் அங்கு கரடியோ அல்லது கரடி ஒளிந்திருக்கும் இடமோ இருக்கவில்லை. பட் சந்தேகம் கொள்ள ஆரம்பித்தார். ஆனால் சகோ. பிரான்ஹாம், தேவனின் நாமங்களில் ஒன்று "நமக்குக் கொடுக்கிற கர்த்தர்" என்பதை பட்டுக்கு நினைவுபடுத்தினார். தேவன் ஒரு கரடியை கொடுப்பதாக வாக்களித்து விட்டு அவர் அதை கொடுக்காமல் போனால் அது விசித்திரமான ஒன்றாயிருக்கும். சுற்றுவட்டாரத்தில் ஆட்டுக்கடாக்கள் இல்லாதிருக்கையில், தேவன் ஆபிரகாமுக்கு புதரில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கொடுத்தார். எனவே ஒரு கரடி விரைவில் காட்சியில் வர வேண்டும். மேலும் "கர்த்தர் உரைக்கிறதாவது", அது பெரிய 'கிரிஸ்லி' கரடியாயிருக்கும் என்பதாய் உள்ளது. அவர்கள் கட்டம் போட்ட பச்சை சட்டை அணிந்த மனிதனைக் கண்டு விட்டனர், அவர்கள் ஏற்கனவே “அங்கிருக்க சாத்தியமில்லை" என்று கருதப்பட்ட மிருகத்தைக் கொன்று விட்டனர். எனவே வாக்களிக்கப்பட்ட மூன்றாவது காரியமும் நிறைவேற வேண்டும். அவர்கள் நடந்து செல்லத் தொடங்கினர். பட் தன் சந்தேகங்களைத் தெரிவித்துக் கொண்டே வந்தார். அவருக்கு விசுவாசிக்கப் பிரியமில்லை என்பதனால் அல்ல, ஆனால் சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்ததனாலும், கரடி எதுவும் அவர்கள் பார்வைக்குத் தென்படாதனாலும், அது ஒளிந்து கொள்வதற்கு இடம் எதுவும் இல்லாதனாலும், இதை விசுவாசிப்பதென்பது கடினமாகத் தோன்றினது. 78. பட் ஒரு குறிப்பிட்ட திசையில் தூரப் பார்வை கண்ணாடியைக் கொண்டு நுட்பமாக பார்த்துக் கொண்டிருந்த போது, சகோ. பிரான்ஹாம் மற்றொரு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் பட்டிடம் அவர் பக்கம் திரும்பக் கூறி, மலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி, அவர் அங்கு காண்பது என்னவென்று கேட்டார். அங்கு பட் அதுவரை காணாத மிகப் பெரிய வெள்ளி முனை கொண்ட 'கிரிஸ்லி கரடி' ஒன்றைக் கண்டார். அவர் அதைக் கண்டபோது ஏறக்குறைய மயங்கி விழுந்து விட்டார். அங்கு பசுவின் அளவுக்குப் பெரிதாயிருந்த அந்த கரடி நான்கு கால்களிலும் நின்று கொண்டிருந்தது. காற்று அதன் உரோமம் வழியாய் வீசி அதை உயரப் பறக்கச் செய்தது. அந்த தூரத்திலிருந்தே அந்த கரடியைச் சுட பட் எண்ணினார். ஆனால் தரிசனத்தின்படி அவர்கள் 500 கெஜ தூரத்துக்குள் வரவேண்டும். அந்த கரடிக்கு மிகவும் அருகில் செல்ல பட் பயந்தார், ஏனெனில் இருதயத்தில் குண்டு பாய்ந்த ஒரு கரடி அப்பொழுதும் அவர்களை நோக்கி வேகமாக ஓடி கொன்று போட வாய்ப்புண்டு. ஏனெனில் 'கிரிஸ்லி' வகையைச் சேர்ந்த கரடிகள் மிகவும் கொடூரமானவை. அவை ஜனங்களைக் கொன்று போடும் ஒரு காலத்தில் அது சமவெளியில் தீவிர பயத்தை உண்டாக்கும் ஒன்றாகத் திகழ்ந்து வந்தது. அமெரிக்க இந்தியர்களால் அது "மனிதனைப் போல் நடக்கும் கரடி" என்று அழைக்கப்பட்டு வந்தது. எனவே அவர்கள் கரடியை நோக்கி நடந்து சென்றனர். சகோ. பிரான்ஹாமின் கையில் அந்த 270 எண் சிறு துப்பாக்கியும் 130 ரவை தோட்டாக்கள் மட்டுமே இருந்தன. கரடியைச் சுடுவதற்கு வெதர்பி துப்பாக்கியாவது அவசியம். ஆனால் தரிசனமோ நெருங்கின தூரத்தில் ஒரு சிறு துப்பாக்கியைக் கொண்டு அந்த கரடி சுடப்படும் என்றும், அது உருண்டு வந்து அவர்களுடைய கால்களின் அருகே விழும் என்றும் காண்பித்தது. தரிசனம் காண்பது மிகவும் அருமையானது தான், ஆனால் அந்த தரிசனத்தின் ஒரு பாகமாக விளங்கி, அதை பயங்கர ஆபத்துகளினிடையே நிறைவேற்றுவதென்பது மற்றொரு காரியம். அப்போஸ்தலனாகிய பவுல், கப்பல் சேதம் ஏற்பட்டு, அது மூழ்கி, அதிலிருந்த அனைவரும் - நீந்தத் தெரியாதவரும் கூட - கரையைப் பாதுகாப்பாக அடைந்ததாக தரிசனம் கண்டான். அந்த தரிசனம் காண்பதற்கு அற்புதமாயிருந்தது, ஆனால் அதன் தலைவனாக இருந்து அதை நிறைவேற்ற பவுலுக்குத் தைரியம் தேவையாயிருந்தது. எனவே இருவரும் கரடியை நோக்கி நடந்து சென்றனர். சகோ. பிரான்ஹாம் பட்டை உற்சாகப்படுத்தி, அவரிடம் பி.பி.துப்பாக்கி இருந்தாலும் அவரால் அந்த கரடியைச் சுட்டு வீழ்த்த இயலும், ஏனெனில் தேவனுடைய வார்த்தை ஒரு போதும் தவறாது என்று கூறினார். 79. அவர்கள் மெல்ல மெல்ல கரடியை நெருங்கினர். சகோ. பிரான்ஹாம் கரடியை முதுகில் சுட்டு அதன் முதுகெலும்பை உடைத்து அதை ஓட முடியாமல் செய்துவிட வேண்டுமென்று பட் கருத்து தெரிவித்தார். ஆனால் சகோ. பிரான்ஹாமோ இருதயத்தைச் சுட வேண்டுமென்று தீர்மானித்தார். ஏனெனில் தரிசனத்துக்கு கீழ்ப்படியாமல் இருத்தல் தோல்வி அல்லது சேதத்தை விளைவிக்கக் கூடும். வேண்டுமானால் பட் பின்னால் தங்கி விடலாம் என்று அவரிடம் ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் பட்டோ அவ்விதம் செய்ய விரும்பவில்லை. கரடி இருந்த இடத்திலிருந்து 300 கெஜ தூரத்துக்குள் இருந்த ஒரு சிறு குன்றின் உச்சியின் மேல் அவர்கள் ஏறினர். அந்த கரடி அங்கிருந்தது. பெரிய உருவம் கொண்ட அந்த 'கிரிஸ்லி' கரடி அவர்களை நோக்கி விரைவாக ஓடிவந்தது. அப்பொழுது சங்கை பிரான்ஹாம் அதன் இருதயத்தைக் குறி வைத்து சுட்டார். அது மலையின் மேலிருந்து கீழே வந்த காரணத்தால், அது மிகவும் விரைவாக அவர்களை நோக்கி ஓடி வந்து, முடிவில் அவர்களுக்கு 50 கெஜ தூரத்தில் விழுந்தது. அந்த கரடி இறந்து போனது. அவர் கண்ட தரிசனத்தின் படி, எல்லாமே பூரணமாக நிறைவேறினது. பட் பிரமிப்பால் வாயடைத்து போனார். அவரால் பேசவே முடியவில்லை. அவர்கள் முகாமில் கலைமானின் கொம்புகளை அளந்து நோக்கும்போது அது சரியாக 42 அங்குலம் இருந்தால், அவர் வாய் விட்டு அலறுவார் என்று அவருக்குத் தோன்றினது. சகோ. பிரான்ஹாம் அவரிடம், வேண்டுமானால் அவர் இப்பொழுதே வாய் விட்டு அலறலாம் என்றும், ஏனெனில் அது நிச்சயமாக 42 அங்குலம் இருக்கும் என்றும் கூறினார். அவர்கள் முகாமை அடைந்த போது, முகாமில் இருந்த எட்டியின் சிறு மகன் கொம்புகளை அளக்கும் போது கவனிக்கும்படி அவர் பட்டிடம் கூறினார், ஏனெனில் அதை அளப்பது ஒரு சிறு கை என்பதாக அவர் தரிசனத்தில் கண்டார். எட்டி அளக்கும் நாடாவைக் கையிலெடுத்து, கொம்புகளை அளப்பதற்காக தன் மகனைக் கூப்பிட்டு, அவனிடம் நாடாவின் ஒரு முனையைப் பிடித்துக்கொள்ளக் கூறின போது, அவர் தரிசனத்தில் கண்டவிதமாகவே, ஒரு சிறு கரம் அந்த நாடாவைப் பிடித்துக் கொண்டிருந்தது. அது சரியாக 42 அங்குலம் இருந்தது. 80. பட்டால் பேசவே முடியவில்லை. அவர் இப்பயணத்தில் அதிக மாக கண்டுவிட்டார். அவர் ஆச்சரியத்துடன் சகோ. பிரான்ஹாமிடம் திரும்பி, அடுத்த ஆண்டு அவர் எங்கிருப்பார் என்று கேட்டார். அவருக்கு ஒருக்கால் எல்லாமே தெரிந்திருக்கக் கூடும் என்று அவர் எண்ணினார். அவர் அதிகமான காரியங்களை இப்பயணயத்தில் கண்டு கொண்டார். தேவன் இத்தகைய காரியங்களை ஏன் செய்கிறார்? ஏனெனில் அவர் நம்மில் அன்பு கூர்ந்து நமக்காக கவலை கொள்கிறார். அவர் நமது வாழ்க்கையில் எல்லா நேரத்திலும் கூட இருக்கப் பிரியப் படுகிறார். ஒருநாள் அதை நாம் உணர்வோம். அப்பொழுது காலதாமதமாய்யிருக்காது என்று நான் நம்புகிறேன். தரிசனம் நிறைவேறுவதென்பது மிகப் பெரிய காரியம்தான். ஆனால் மற்றவர்கள் அதிசயிக்கும் மற்றொரு கட்டம் சங்கை பிரான்ஹாமின் ஊழியத்தில் காணப்பட்டது. அந்தப் புது ஊழியத்தில், அவர் வார்த்தையை உரைத்தபோது, அவர் உரைக்கும்போதே அது நிறைவேறினது. அது மாற்கு 11:23ல் உரைக்கப்பட்டதன்படி அமைந்திருந்தது: "எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப் படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும். அந்த வார்த்தை உரைக்கப்பட்டு நிறைவேறின சம்பவங்களில் சில பின்வரு மாறு: சகோதரி பிரான்ஹாம் சுகம் பெறுதல் : 1950ம் ஆண்டில் சகோ. பிரான்ஹாம் கலிபோர்னியாவில் வியாதியஸ்தர்களுக்காக ஊழியம் செய்து கொண்டிருந்தபோது, அப்பொழுது வியாதிப்பட்டிருந்த சகோதரி மில்லிகியானிடம் அவளுடைய காலில் வியாதியுள்ளதாக கூறினார் (Milk leg). ஆனால் அந்த வியாதியின் அறிகுறி எதையும் அவள் உணராததால், அது உண்மையாயிருக்க முடியாது என்று எண்ணினாள். சகோ. பிரான் ஹாம் அவளிடம், அந்த வியாதியைக் காண்பிக்கும் அடையாளம் தன் கையில் உண்டாயிருப்பதை அவளிடம் காண்பித்தார். பூரண சுகமுள்ளவருக்கு அவருடைய கையில் எந்தவிதமான அடையாளமும் காணப்படாது என்பதை அவளுக்குக் காண்பிக்க எண்ணி, அவர் தன் மனைவியின் கரத்தை தன் கையில் பிடித்து, "என் கையில் இப்பொழுது எந்த மாறுதலோ நிற வித்தியாசமோ ஏற்பட வில்லை என்பதைப் பார்" என்று கூறினார். ஆனால் அவருக்குப் பெரும் அதிர்ச்சி அப்பொழுது ஏற்பட்டு, "மேடா, உனக்கு எவ்வித கோளாறும் இல்லை என்று எண்ணியிருந்தேன். ஆனால் உன் இடது கருப்பையில் (ovary) வீக்கம் (Cyst) உள்ளது" என்றார். அதற்கு சகோதரி பிரான்ஹாம் "நான் நன்றாகத்தான் இருக்கிறேன்" என்றாள். 81. சகோ. பிரான்ஹாம். "அப்படியானால் சரி, ஆனால் அது நிச்சயமாக அங்குள்ளது" என்றார். சகோதரி பிரான்ஹாம் இயற்கையாக பிரசவிப்பது கிடையாது. அவளுடைய குழந்தைகள் 'சிசேரியன்' அறுவை சிகிச்சை மூலமே பிறந்தனர். அவளுக்கு எற்கனவே 'பெக்கி' என்னும் மகள் இருந்தாள். எனவே அவள் இரண்டாம் குழந்தையை பிரசவிக்கப் போகும் தருணத்தில், சகோ. பிரான்ஹாம் மருத்துவரிடம் அந்த வீக்கம் உள்ளதா என்று பார்க்கச் சொன்னார். மருத்துவரும் பார்த்த போது, அங்கு அவர் எதையும் காணவில்லை. பல ஆண்டுகள் கடந்தன, அவள் நன்றாகவே இருந்தாள். அதன் பிறகு அவளுக்கு மூன்றாம் குழந்தை பிறந்தது. அதுவே அவளுடைய கடைசி குழந்தை. அப்பொழுதும் மருத்துவர் வீக்கம் உள்ளதா என்று பார்த்தபோது அது இருக்கவில்லை. ஆனால் 1962ம் ஆண்டில் சகோதரி பிரான்ஹாமுக்கு இடது பாகத்தில் வலி ஏற்பட்டு அவளைத் தொந்தரவு செய்தது. அந்த பாகம் சிறிது வீங்கிப் போனது. அவள் மருத்துவரைக் காணச் சென்றபோது, அவளுக்கு ஒரு சிறு வீக்கம் இருந்ததாகவும், அது சிறு கட்டியாக (Tumour) மாறிவிட்டதாகவும் அவளிடம் கூறப்பட்டது. அவள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்று மருத்துவர் ஆலோசனை கூறினார். இருப்பினும், அந்த குடும்பம் தேவன் பேரில் விசுவாசம் கொண்டிருக்கும் குடும்பமாதலால், அவர்கள் கர்த்தரின் சமூகத்தில் காத்திருக்கத் தீர்மானம் கொண்டனர். அந்த கட்டி வளர்ந்து கொண்டே வந்தது. அவர்கள் ஜெபர்ஸ்ன்வில்லை விட்டு டூசானுக்குச் சென்று வசித்தனர். அவளைப் பரிசோதித்த மருத்துவர் கென்டக்கியிலுள்ள லூயிவில்லில் இருந்தார். அவர் டூசானிலுள்ள ஒரு சிறந்த மருத்துவருக்கு கடிதம் எழுதி அதனுடன் கூட மருத்துவ அறிக்கையும் சேர்த்து அனுப்பினார். அந்த கட்டி வளர்ந்து மிகவும் பெரிதாகி அவளுக்கு அதிக அசௌகரியத்தை விளைவித்தது. மருத்துவர்களும் அது புற்றுநோய் சம்பந்தமாக இருக்கக் கூடுமா என்று கவலை தெரிவித்தனர். இருப்பினும் அந்த அறுவை சிகிச்சை தள்ளி வைக்கப்பட்டது. அது கர்த்தரை இன்னும் தேடுவதற்காக மட்டுமல்ல, 1963ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது குடும்பத்தினர் ஜெபர்ஸன் வில்லுக்குச் சென்று திரும்பி வரும் வரைக் கும் அவள் சமாளித்துக் கொள்வாள் என்று அவர்கள் எண்ணினர். 82. அந்த சமயத்தில் சகோ. பிரான்ஹாம் நியூயார்க்கில் கூட்டங்கள் நடத்தி விட்டு திரும்பி வந்தார். அவருடைய மனைவி எவ்வளவாக வியாதிப்பட்டிருக்கிறாள் என்றும் அவளுக்கு அறுவை சிகிச்சை அவசியம் என்றும் அவர் அறிந்திருந்தார். அவள் சகோ. பிரான்ஹாமை தொலைபேசியில் கூப்பிட்டு, அவளால் நடக்கவே முடிய வில்லை என்றும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை உடனே செய்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துவதாகவும் கூறினாள். அவளிடம் சிறிது பொறுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, அவளால் முடியுமா என்று கேட்டார். அவளுடைய நிலையைக் கண்டு அவர் மிகவும் பரிதாபமடைந்து, ஜெபர்ஸன்வில்லில் இருந்த அவருடைய அறைக் குச் சென்று (ஷரீப்போர்ட் கூட்டத்துக்கு போகும் வழியில் ஜெபர் ஸன்வில்லில் இருந்த பழைய போதகர் வீட்டில் அவர் தங்க நேர்ந்தது. ஷரீவ்போர்ட் கூட்டத்தை முடித்துவிட்டு அவர் டூசானுக்கு செல்வதாக இருந்தது.) அவர்கள் வழக்கமாக குடும்பமாக சுற்றிலும் ஜெபிக்கும் மெத்தை நாற்காலியின் அருகில் முழங்கால்படியிட்டு ஊக்கத்தோடும் கண்ணீரோடும் ஜெபித்து, தன் மனைவியின் மேல் இரக்கமாயிருக்க வேண்டுமென்று கெஞ்சினார். அப்பொழுது தேவனுடைய சமுகத்தை அவர் உணர்ந்தார். அக்கினி ஸ்தம்பம் அவருடைய அறையில் தொங்கினது. தேவனுடைய சத்தம் அவரிடம், "எழுந்து காலூன்றி நில். நீ இப்பொழுது எதை உரைத்தாலும், அது அப்படியே நடக்கும்” என்றது. இந்த வாக்குத்தத்தத்தைக் குறித்து அவர் நன்கு அறிந்திருந்ததனால் அவர், "மருத்துவர் அவளைத் தொடுவதற்கு முன்பே கட்டி மறையக்கடவது" என்றார். அடுத்த நாள் காலையில் சகோதரி பிரான்ஹாமும் சகோதரி நார்மனும் மற்றொரு பரிசோதனைக்காக மருத்துவரைக் காணச் சென்றிருந்தனர். பரிசோதனைக்கு முன்பு அணிந்து கொள்ள வேண்டிய வெண்ணிற நீண்ட ஆடையை அணிய நர்ஸ் உதவி செய்தாள். பரிசோதனை மேசையின் மேல் ஏறவும் கூட அவளால் முடியவில்லை. மருத்துவர் உள்ளே வந்து, மருத்துவ அறிக்கைகளெல்லாம் பார்த்துவிட்டு, வீக்கத்தின் அளவைப் பரிசோதிக்கக் குனிந்தார். அவருடைய கை அவளைத் தொடுவதற்கு முன்பு, ஒரு குளிர்ச்சியான உணர்வு ஏற்பட்டு, அந்த கட்டி சுருங்குவது போல் தோன்றினது. மருத்துவர் அவளுடைய இடது புறத்தை தொட்டுப் பார்த்தார், அதன்பிறகு அவர் சுற்றி வந்து வலது புறத்தை தொட்டுப் பார்த்தார். அவர் மிகவும் குழப்பமுற்று, "அந்த வீக்கம் உங்கள் இடதுபுறத்தில் இருந்தது, இல்லையா திருமதி. பிரான்ஹாமே" என்று கேட்டார். 83. அதற்கு சகோதரி பிரான்ஹாம், "ஆம், ஐயா, அது இடது புறத்தில்தான் இருந்தது" என்றாள். அவர் மிகவும் கவனமாகத் தேடி முடிவில், "என்ன நேர்ந்தென்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் அந்தக் கட்டி இப்பொழுது இங்கில்லை. அது மறைந்து விட்டது. என்னால் அதை விளக்க இயலவில்லை, ஆனால் நீங்கள் கவலைப்படு வதற்கு ஒன்றுமில்லை” என்றார். அடுத்த முறை சகோ. பிரான்ஹாம் தன் மனைவியிடம் ஷ்ரீவ் போர்ட்டிலிருந்து தொலைபேசியில் பேசினபோது, அவள், "பில், உங்களுக்குத் தெரியுமா அந்த கட்டி...' என்று கூறத் தொடங்கின போது, அவர் குறுக்கிட்டு, “ஆம், இனியவளே, எனக்குத் தெரியும். அது மறைந்து விட்டது' என்றார். அவள், “உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டாள். அவர் அவளிடம் நடந்த அனைத்தையும் கூறினார். சகோதரி மோஸியருக்கு தேவனின் வரம் 1962ம் ஆண்டின் அணில் வேட்டை காலத்தின் போது, சகோ. பிரான்ஹாமும் சகோ.உட்டும் பகல் உணவு அருந்துவதற்காக சகோதரி ஹாட்டி மோஸியர் வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். சகோதரி மோஸியர் ஒரு அருமையான கிறிஸ்தவ விதவை. அவளும் அவளுடைய இரண்டு மகன்களும் சொற்ப உதவித் தொகையைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். இருப்பினும், அவள் ஒழுங்காக தசமபாகம் செலுத்தியும், தன் நலம் கருதாது பிறர் நலனுக்காக பண உதவி செய்தும் வந்தாள். அவளுக்குப் பிறவியிலேயே ஊன முற்ற ஒரு சகோதரி இருந்தாள். அவள் தன் வாழ்நாளில் நடந்ததேயில்லை. இந்த பரிசுத்தவாட்டி (சகோதரி மோஸியர்) தேவனுக்கு ஒரு சாட்சியாகத் திகழ்ந்தாள். அவளுடைய வீட்டில் ஒரு கிறிஸ்தவ பெண்மணிக்குத் தகுதியான சூழ்நிலை அமைந்திருந்தது. அவர்கள் உட்கார்ந்து உணவு உண்டு கொண்டிருந்த நேரத்தில், தேவனுடைய நன்மையான செயல்களைக் குறித்து அவர்கள் அனைவரும் அளவளாவிக் கொண்டிருந்தனர். சகோ. பிரான்ஹாம் தேவனுடைய வார்த்தையைக் குறித்தும், ஆவியின் ஊழியத்தைக் குறித்தும் அதன் தொடர்பாக நடைபெற்ற கிருபையான காரியங்களைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று, விசேஷமாக அந்த உரையாடலின் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கட்டத்தின் போது, சகோதரி மோஸியர், "சகோ. பிரான்ஹாமே, அது முற்றிலும் உண்மை " என்றாள். 84. அவள் அவ்விதம் கூறினபோது, தேவ ஆவியானவர் சகோ. பிரான்ஹாமின் மேல் இறங்கினார். அவர், "சகோதரி மோஸியர், நீ அவ்விதம் கூறினபடியால், உனக்கு விருப்பமான எதையும் நீ பெற்றுக் கொள்ளலாம் என்று உன்னிடம் கூறும்படி தேவன் என்னிடம் உரைக்கிறார்" என்றார். அப்பொழுது பரலோக வல்லமை அந்த அறையை நிரப்பினது. விருந்தாளிகளின் முகங்களில் கண்ணீர் வழிந்தோடியது. "நீ எதைக் கேட்டாலும் அது உன்னுடையதாகி விடும். அதை கர்த்தரின் நாமத்தினால் உனக்குத் தருகிறேன்" என்று சகோ. பிரான்ஹாம் மறுபடியும் கூறினார். சகோதரி மோஸியர், “என்ன கேட்பதென்று எனக்குத் தெரிய வில்லை" என்றாள். அதற்கு சகோ. பிரான்ஹாம், "ஊனமுற்ற உன் சகோதரி சுகமாக வேண்டுமென்று நீ கேட்கலாம். அவள் சுகமடைவாள். நீ பரம ஏழை, உனக்குப் பணம் தேவை. வேண்டுமானால் நீ பணம் கேட்கலாம். உன் இருதயத்திலுள்ள எதையும் நீ கேட்கலாம், அது உன்னுடையதாகி விடும்" என்றார். அவள் சிறிது நேரம் அவரையே உற்று நோக்கி விட்டு, "சகோ. பிரான்ஹாமே, என் இரண்டு மகன்களும் இரட்சிக்கப்படவில்லை. அதுதான் எனக்குத் தேவை. அவர்கள் இரட்சிக்கப்படுவார்களாக" என்று தன் இருதயத்தில் இருந்ததைக் கூறினாள். அவர், "கர்த்தரின் நாமத்தினாலே உன் இரு மகன்களையும் உனக்குத் தருகிறேன்" என்றார். சற்று முன்பு சிரித்துக் கொண்டும், பையன்கள் வழக்கமாக செய்வது போல் கோமாளித்தனம் செய்து கொண்டும் இருந்த இந்த இரு பையன்களும் இதைக் கேட்ட போது, அவர்களுடைய முகங்கள் வெளுத்தன. அவர்கள் தேவனிடம் திரும்ப வேண்டும் அல்லது அவரைச் சேவிக்க வேண்டும் என்று சிறிதேனும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. தேவனுடைய ஆவி அவர்கள் மேல் இறங்கி அவர்களுடைய ஆத்துமாக்களை வல்லமையாக அசைத்ததன் விளை வாக, அவர்கள் தேவனை நோக்கி, கதறி அழுது, மனந்திரும்பி கர்த்தருக்கு முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்தனர். 85. அந்த பையன்கள் இரட்சிக்கப்பட்டனர். இன்றைக்கு அவர்கள் கூடாரத்தில் உறுப்பினர்களாயுள்ளனர். அவர்கள் தேவனுக்கென்று வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மற்ற பரிசுத்தவான்களுடன் கர்த்தருடைய பந்தியிலும் கால் கழுவுதலிலும் ஐக்கியங் கொண்டு, அவர்களுடைய பேச்சிலும் நடத்தையிலும் கர்த்தருக்கு சாட்சி யாகத் திகழ்கின்றனர். உறுதிப்படுத்துதலை விவரிக்கும் இந்த பாகத்தை வானத்தில் உண்டான அடையாளத்தைக் கூறாமல் முடிப்பது சரியல்ல. பரிசேயர்கள் வானத்தில் ஒரு அடையாளத்தைக் காண விரும்பினது உங்களுக்கு நினைவிருக்கும். இன்றைக்கும் பலர் வானத்தில் ஒரு அடையாளத்தைக் காண விரும்புவது போல் தோன்றுகிறது. நட்சத்திரம் பிரத்தியட்சமாவதை நாம் ஏற்கனவே கூறினோம். இதோ மற்றொரு அடையாளம். தூதர்களைக் கொண்ட மேகம் தேவன் சகோ.பிரான்ஹாமை மேற்கு பாகத்திற்குச் செல்லும் படி கட்டளையிடும் ஒரு நேரம் வருமென்று அவர் பல ஆண்டுகளாக வெளிப்பாட்டின் மூலம் அறிந்திருந்தார். தேவனிடமிருந்து நேரடியான வெளிப்பாட்டைப் பெறாமலேயே, அவர் டூசானுக்கு போக விரும்புவதை உணர்ந்தார். எனவே அவர் அதற்கேற்றவாறு திட்டமிட்டார். 1962ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதியன்று, அவர் படுக்கையை விட்டு எழுந்திருக்கையில், அவருடைய கண்களுக்கு முன்பாக ஒரு தரிசனம் உண்டானது. அந்த தரிசனத்தில் அவர் அரிசோனாவில் ஒரு மலையின் மேல் நின்று கொண்டு டூசானை நோக்கிக் கொண்டிருந்தார். அவருடைய கால் சட்டையில் ஒட்டிக் கொண்டிருந்த முட்களை எடுத்துப் போடுவதற்காக அவர் குனிந்தார். அந்த நேரத்தில் அவருடைய மகன் ஜோசப் அருகில் நின்று கொண்டிருப்பதாக தோன்றினது. அவர் முட்களை களைந்து விட்டு நிமிர்ந்து நின்ற போது, வானத்திலிருந்து ஒரு பெரிய வெடி சத்தம். தென் பாகத்திலிருந்து புறப்பட்டு வந்தது. அந்த வெடி மலைகளை அசைத்து, பாறைகள் மலைகளின் சரிவில் உருண்டோடும்படி செய்தது. பூமியதிர்ச்சி உண்டானது போல், அது குன்றுகளைக் குலுக்கினது. இந்த பயங்கரமான வெடி பூமியை அசைத்துக் கொண்டிருந்த போது, ஏழு பலமுள்ள தூதர்களைக் கொண்ட ஒரு பிரகாசமான ஒளி பயங்கரமான வேகத்துடன் அவரைத் தாக்கியது. இந்த தரிசனம் அவரை அதிகமாக பாதித்ததன் விளைவாக, அவர் பல நாட்களாக திகைப்பில் ஆழ்ந்திருந்தார். ஒருக்கால் அது அவருடைய மரணத்தைக் குறிக்கின்றதோ என்று அவர் வியந்தார். ஆனால் ஜோசப் அவரருகில் இருந்து, அந்த வெடியின் அதிர்ச்சியினால் அவனுக்கு தீங்கு நேரிடாமல் இருந்த காரணத்தால் இந்த கருத்தை அவர் தள்ளி வைத்து விட்டார். 86. இந்த வினோதமான தரிசனத்தைக் குறித்து இந்த புத்தகத்தின் ஆக்கியோனிடம் அவர் டிசம்பர் 26ம் தேதியன்று விளக்கினார். இந்த அற்புதமான தேவனுடைய தீர்க்கதரிசியை நான் நன்கு அறிந்துள்ளபடியால், வெளிப்படுத்தல் 10ம் அதிகாரத்தில் உரைக் கப்பட்டுள்ளதும், யோவான் கேட்டு அதை எழுதக் கூடாதென்று கட்டளை பெற்றதுமான அந்த ஏழு இடிமுழக்கங்களின் இரகசியத்தை அவர் அறிந்து கொள்வார் என்பதன் அடையாளமாக இந்த தூதர்கள் இடி முழக்க சத்தத்துடன் தேவனுடைய சமுகத்திலிருந்து அனுப்பப்பட்டவர்களாயிருக்க வகையுண்டு என்று நாங்கள் எண்ணினோம். அப்பொழுது இது ஒரு ஊகமாக மட்டும் இருந்தது. அதன் அர்த்தம் என்னவென்று எவருமே நிச்சயமாக அறிந்திருக்கவில்லை. சங்கை பிரான்ஹாம் உடனே டூசானுக்கு வசிக்கச் சென்றார். அந்த சமயத்தில் அவர் கூட்டங்கள் எதற்கும் செல்லாததால், வேட்டையாடுவதற்காக தன் இரு நண்பர்கள் ஜூன் நார்மன், ஃபிரட் சாத்மன் என்பவர்களுடன் மலைக்குச் சென்றார். வேட்டை யாடுகையில், இவ்விருவரும் சங்கை பிரான் ஹாமின் கூடச் செல்லாமல் சற்று தூரத்தில் இருந்தனர். சங்கை பிரான்ஹாம் மலைச் சரிவில் இருக்கையில் அவருடைய கால் சட்டையில் ஒட்டிக் கொண்டிருந்த சில முட்களை எடுத்துப் போடுவதற்கு குனிந்தார். அவர் அவ்விதம் செய்தபோது, ஒரு பெரிய வெடி தென் பாகத்திலிருந்து புறப்பட்டு வந்து மலைகளை அசைத்ததன் விளைவாக, கற்பாறைகள் மலைச் சரிவுகளில் உருண்டன, சிறு குன்றுகள் மேலும் கீழும் குதிப்பது போல் தோன்றின. அந்த க்ஷணத்தில் அவர் பயந்து போய் ஏதோ ஒரு வேட்டைக்காரன் அவரைச் சுட்டு விட்டதாக நினைத்தார். இவையெல்லாம் அவருக்கு அதிர்ச்சியை விளைவித்தன. அப்பொழுது உண்மையாகவே ஏழு பலமுள்ள தூதர்கள் ஒரு கூர்நுனிக் கோபுர வடிவில், 'V' என்னும் எழுத்தின் உருவில், ஒளி வேகத்தில் அவரிடம் துரிதமாக இறங்கி வந்தனர். அவர் அவர்கள் நடுவில் அந்த பயங்கரமான இடியில் எடுக்கப்பட்டது போல் தோன்றினது. ஒரு சத்தம், "கிழக்கு பாகத்துக்குச் திரும்பிச் செல்" என்று உரைத்தது. அப்பொழுது அவர், ஜெபர்ஸன்வில்லுக்குச் சென்று வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஏழு முத்திரைகளின் பேரில் பிரசங்கித்து எழுதப்படாத இடி முழக்கங்களின் இரகசியங்களை வெளிப்படுத்த நேரம் வந்து விட்டது என்பதை அறிந்து கொண்டார். 87. இப்பொழுது கூறப்பட்டது சத்தியம். அவருடன் இருந்த அந்த இருவரும் ஓடிச் சென்று அவரைக் கண்டு பிடிக்க முயன்றனர். அவர்கள் அந்த ஒளியைக் கண்டனர், ஆனால் கண்ணைப் பறிக்கும் அந்த ஒளியில் இருந்த தூதர்களை அவர்கள் காணவில்லை. தென் பாகத்திலிருந்து உண்டான பயங்கரமான இடிமுழக்கத்தை அவர்கள் கேட்டனர். இதைக் கண்டதன் விளைவாக அந்த தேவனுடைய மனிதன் அதிர்ச்சியுற்றிருந்ததை அவர்கள் கண்டனர். இந்த காட்சி அரிசோனாவிலுள்ள பிளாக்ஸ்டாஃப் என்னுமிடத்திற்கு வெளியே நடந்தது. இந்த பிரம்மாண்டமான சம்பவம் நிகழ்ந்த அந்த நாளில் அதே நேரத்தில், மேகம் போல் காணப்பட்ட ஒன்று வானத்தில் தோன்றினது. அது இருபத்தாறு மைல் உயரத்தில் இருந்தது, அதன் குறுக்களவு முப்பது மைல். வாயு மண்டலத்தின் அந்த பாகத்தில் மேகங்கள் உண்டானதில்லை, அவை உண்டாகவும் முடியாது. விசாரணை செய்து பார்த்த போது (அநேக புகைப்படங்கள் எடுக்கப்பட்டன) அந்த நேரத்தில் வானத்தில் எந்த 'ஜெட் விமானமும் பறக்கவில்லை என்று அவர்கள் அறிந்து கொண்டனர். அந்த மேகம் எந்த விதத்திலும் அந்த உயரத்தில் உருவாக வகையில்லை என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். வான் நிலை ஆராய்ச்சியாளர்கள், கிழக்கு நோக்கி வேகமாய் வந்த அந்த மிகப் பெரிய, நீண்ட வட்ட உருவில் (oval shaped) அமைந்திருந்த மேகத்தின் பேரில் விஞ்ஞானக் கட்டுரை ஒன்றை எழுதினர். ஆனால் ஒருவருக்குமே அது எங்கிருந்து வந்தது, அது எவ்விதம் அங்கு வந்தது. அது எங்கு சென்றது என்று தெரியவில்லை. ஆனால் சத்தியத்தை அறிந்துள்ள மக்கள் அந்த மேகத்தைக் குறித்து அறிவர் - அதாவது அது தூதர்கள் கொண்ட ஒரு மேகம் என்றும், உலகத்தின் கண்களுக்குப் புதிராக உள்ள மேகமாகிய அந்த தூதர்கள் தங்களை வெளிப்படுத்த தேவன் அனுமதித்தார் என்றும் அவர்கள் அறிவர். 1963ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி வெளியான லைஃப் பத்திரிக்கை அந்த மேகத்தின் நான்கு புகைப்படங்களை வெளியிட்டது. 1963ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி வெளியான 'சைன்ஸ்' பத்திரிக்கையின் அட்டைப்படமாக அது வெளிவந்தது. 88. மார்ச் மாதத்தில் சங்கை பிரான்ஹாம் முத்திரைகளைப் பிரசங்கிப்பதற்கென கிழக்கு பாகத்திற்கு வந்தார். 17ம் தேதி முதல் 24ம் தேதி முடிய அவர் பிரசங்கித்தார். அவர் பிரசங்கித்ததை அவர் முன்பு அறிந்திருக்கவில்லை. உண்மையைக் கூறினால், அவர் முன்பு பிரசங்கித்த சில காரியங்களைத் திருத்துவதாக அவருடைய பிரசங்கம் அமைந்திருந்தது. அவர் அவ்விதம் திருத்தக் காரணம் என்னவெனில், ஒவ்வொரு நாளும் அவர் தேவனுடைய சமுகத்தில் காத்திருக்கையில், சொகுசாவின் (amber) நிறம் கொண்ட அந்த அக்கினி தோன்றி, மேகத்திலிருந்து தேவனுடைய சத்தம் உண்டாகி, முத்திரைகளில் அடங்கியுள்ள சரியான சத்தத்தையும் அந்த ஏழு இடி முழக்கங்கள் என்ன உரைத்தன என்பதையும் அவருக்கு வெளிப்படுத்திக் கொடுத்தது. தீர்க்கதரிசியின் வாயின் மூலமாக “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பது இந்த சந்ததிக்கு - கடைசி சந்ததிக்கு - மறுபடியும் வந்து விட்டது. அனைத்துமே கர்த்தருடைய வார்த்தையின்படியே நிறைவேறி வருகின்றது. முடிவுரை 89. வேத வாக்கியங்களையும் தீர்க்கதரிசி - தூதனை உறுதிப்படுத்துகின்ற வழக்கத்திற்கு மாறான அடையாளங்களையும் எடுத்துரைத்த பிறகு, இவையிரண்டையும் ஒற்றுமைப்படுத்தி தேவனுடைய அற்புதமான கிரியைகளை இவைகளில் காண்பது நலமாயிருக்கும். இந்த மனிதன் பலமுறை தன்னைத்தானே ருசுப்படுத்துகிறவரா யிருக்கிறார் (Self-vindicated) என்பதை சற்று நேரம் சிந்தித்துப் பாருங்கள். வேறுவிதமாகக் கூறினால், அவர் தன்னுடைய சாட்சியைக் கூறி, அவர் தேவனால் அனுப்பப்பட்ட மனிதன் என்று மற்றவர் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்ட நேரங்கள் இருந்திருக் கின்றன. காலாகாலங்களில் காட்சியில் தோன்றின தீர்க்கதரிசிகள் இவ்வாறே செய்து வந்துள்ளனர். இவ்வாறு செய்யாத தீர்கதரிசி எவருமே இல்லை எனலாம். மோசே இஸ்ரவேல் ஜனங்களின் முன்னிலையில் சென்றபோது, "தேவன் எரிகிற முட்செடியிலிருந்து என்னுடன் பேசினார்" என்றான். அதன்பிறகு அவன் தேவன் அவனுக்கு அளித்திருந்த இரண்டு அடையாளங்களைக் கொண்டு அதை நிரூபிக்கத் தொடங்கினான். உடனடியாக உண்டான விளைவு இரு தரப்பட்டது. சிலர் அதை விசுவாசித்தனர், மற்றவர்களோ, “நாங்கள் அப்பொழுது அங்கில்லையே, தேவன் அக்கினி மேகத்தி லிருந்து உம்முடன் பேசினார் என்று எங்களுக்கு எப்படி தெரியும்?" என்றனர் ஆனால் மோசே சோர்ந்து போகவில்லை. அவன் தொடர்ந்து சென்றான். அவனுடைய அழைப்பில் தேவன் அவனோடு கூட இருக்கிறார் என்று அவன் அறிந்திருந்தான், ஏனெனில் அவன் கீழ்ப்படிந்த சத்தம் வேதப்பிரகாரமான சத்தமாகும். மோசேயைப் போன்ற உண்மையான தீர்க்கதரிசி எவனும் வார்த்தையுடன் இணைந்து ஒன்றாயிருப்பான். முட்செடியிலிருந்து பேசின அந்த சத்தம், அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய ஆபிரகாமுக்கு அளிக்கப்பட்டிருந்த தேவனுடைய வாக்குத்தத்தத்தை எடுத்துரைத்து, "என் ஜனங்களுக்கு நான் அளித்திருந்த வாக்குத்தத்தத்தை நினைவு கூருகிறேன்" என்றது. எனவே மோசே அதற்கு செவி கொடுத்து கீழ்ப்படிந்ததன் மூலம், அந்த சந்ததியிலிருந்த ஜனங்களுக்கு தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் கொண்டு வந்தான். 90. யோவான் ஸ்நானனைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அவனுடைய காலம் வரைக்கும் தோன்றின தீர்க்கதரிசிகளில் அவனே மிகப் பெரிய தீர்க்கதரிசியாக இருந்தான். அவனுடைய சாட்சி என்ன? யோவான் 1:31-34. "நானும் இவரை அறியாதிருந்தேன், இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான். பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப் போல வானத்தி விருந்திறங்கி, இவர் மேல் தங்கினதைக் கண்டேன். நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார் மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான். இதோ யோவான் தன் சாட்சியை கூறுகிறான். அவன், "தேவன் என்னுடன் பேசி, நான் இப்பொழுது உங்களிடம் கூறினதை எனக்கு உரைத்தார்" என்றான். அப்பொழுதும் உடனடியாக உண்டான விளைவு இருதரப்பட்டது என்பதைக் காணலாம். ஒரு சாரார் அதை விசுவாசித்தனர், மற்ற வர்களோ, “அப்பொழுது நாங்கள் அங்கில்லை, எனவே சத்தம் உண்டானதா இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. மேலும், எங்களுக்கு என்ன அடையாளத்தைக் காண்பிக்கப் போகிறாய்?" என்றனர். வில்லியம் பிரான்ஹாமின் விஷயத்திலும் அப்படித்தான். ஜனங்கள் மேல் ஒரு ஒளி தோன்றுவதை அவர் காண்பதாகக் கூறுகின்றார். அந்த ஒளியின் புகைப்படமும் எடுக்கப்பட்டு விட்டது. அதை நீங்கள் இப் புத்தகத்தில் காணலாம். இருப்பினும் வெகு சிலரே அந்த ஒளியைக் கண்டுள்ளனர். அவருடைய சாட்சியை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களோ இல்லையோ என்பது உங்களைப் பொறுத்தது. ஆனால் இப்பொழுது நீங்கள் யோவானின் சாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவனிடம், தீர்க்கதரிசிகள் பெரும்பாலோருக்கு இருந்தது போல, அடையாளங்கள் காணப்படவில்லை. மேலும் மோசேக்கு இருந்தது போலவே சங்கை பிரான்ஹாமுக்கும் இருந்தது. அக்கினி ஸ்தம்பம் முற்றிலும் வேதப் பூர்வமானது. சத்தமும் அப்படியே , அது சிறிதும் கூட வார்த்தையை விட்டு அகலவேயில்லை. அப்படியானால், இக்காலத்திற்கென அளிக்கப் பட்டுள்ள தேவனுடைய வாக்குத்தத்தத்தை நாம் அவரிடமிருந்து கேட்டு கற்றுக் கொள்ள கடமைபட்டவர்களாயிருக்கிறோம். 91. மேலும் வில்லியம் பிரான்ஹாம், அவருக்கு ஒரு தூதன் பிரத்தி யட்சமாவதாகக் கூறுகின்றார். அவர் அந்த தூதனை விவரிக்கிறார். இதனால் உங்களில் ஏற்படும் விளைவு உங்களைப் பொறுத்தது. நீங்கள் அதை நம்பலாம், அல்லது நம்பாமல் போகலாம். ஆனால் எந்த ஒரு மனிதனுக்கும் மற்றொருவர் கூறுவதை மறுக்க உரிமை இல்லை - முக்கியமாக, அவ்வாறு கூறுபவர் வேத ஆதாரங்களைக் கொண்டிருப்பாரானால். தூதர்கள் பிரத்தியட்சமாகுதல் என்பது வேத ஆதாரம் கொண்டது. தன்னைக் குறித்தே சாட்சி கொடுப்பது என்பது வேதபூர்வமானது. தேவன் அந்த வெளிப்பாட்டை ஆதரிக் கிறார். பவுலின் விஷயத்தில் இவ்வாறு நடந்தது. அவன் புற ஜாதிகளுக்கான முழு வெளிப்பாட்டுடன் வந்தான், தேவன் அநேக அடையாளங்கள், அற்புதங்கள், பரிசுத்த ஆவியின் வரங்கள் மூலம் அவனை உறுதிப்படுத்தினார். அது போன்று, தேவன் வில்லியம் பிரான்ஹாமையும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கண்ட தரிசனங்களில் ஒன்றாகிலும் தவறாயிருந்ததில்லை. அது மட்டுமல்ல, அவர் "கர்த்தர் உரைக்கிறதாவது" என்று சொல்லி, தன் வாயிலிருந்து புறப்பட்ட சொற்கள் ஒரு முறையாகிலும் தவறினதில்லை. நான் இப்பொழுது கூறப் போவதின் நிமித்தம் கடிந்து கொள்ளப்பட ஏதுவுண்டு, இருப்பினும் இதை நான் சொல்லியே தீர வேண்டும். அதாவது, பவுலின் வெளிப்பாட்டின் ஊழியத்தை உறுதிப்படுத்தும் வேதப் பிரகாரமான அத்தாட்சிகள் மிகச் சொற்பமே. தேவன் முழு வெளிப்பாட்டையும் தனக்கு அளித்ததாக பவுல் உரிமை கோருவதை உறுதிப்படுத்துகின்ற தேவனுடைய அதிசயமான சான்றுகள் வெகு சொற்பமே. இருப்பினும் எவருமே அதை சந்தேகிப்பதில்லை, அந்த மனிதனையும் அவன் பெற்றிருந்த வெளிப் பாட்டின் உண்மைத்துவத்தையும் எவருமே சந்தேகிக்கக் கூடாது. இன்றைக்கு இந்த மனிதன், வில்லியம் பிரான்ஹாம், தேவனிடத்தி லிருந்து அவரை உறுதிப்படுத்துகின்ற ஆயிரக்கணக்கான அடையா ளங்களை பெற்றிருக்கிறார். இதனுடன் கூட, தீர்க்கதரிசியின் உத்தியோகத்துக்குத் தகுதியான மற்றெல்லா அம்சங்களும் அவரு டைய வாழ்க்கையில் அமைந்துள்ளதால், அவைகளின் நிமித்தம் அவர் ஏற்றுக் கொள்ளப்படத்தான் வேண்டும். அவருடைய தகுதிகளின் நிமித்தம் அவர் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது அவசியம். பரிசுத்த ஆவியினால் அவர் வாயிலிருந்து எழுந்த "கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்கும், பவுலின் வாயில் எழுந்த "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதற்கும் யாதொரு வேறு பாடும் இல்லை. ஏனெனில் பேசினது அதே பரிசுத்த ஆவியானவரே. அக்கினி ஸ்தம்பத்திலிருந்து மோசேயுடன் பேசின பரிசுத்த ஆவியானவரே பெந்தெகொஸ்தே நாளில் அக்கினி மேகமாக இறங்கினார். அதே வெளிச்சம் தான் பவுலுக்குப் பிரத்தியட்சமாகி அவனைக் குருடாக்கி அவனுடன் பேசினது. இன்றைக்கு அந்த வெளிச்சம் அல்லது அக்கினி நம்முடன் மறுபடியும் இருந்து வரும் கின்றது. அதன் சத்தம் முன்பிருந்த அதே சத்தமே, ஏனெனில் முன்பு போல் அதே அடையாளங்கள் அளிக்கப்பட்டு, தீர்க்க தரிசனமாக உரைக்கப்படுபவை தவறுவதேயில்லை. எனவே இந்த தீர்க்கதரிசியிடம் ஜெபத்துக்காக மனிதர் வந்து, அவர்களை பாதிக்கின்ற வெவ்வேறு வியாதிகள் பிரச்சினைகள் என்னவென்று அவர் எந்த தவறுமின்றி அவர்களுக்கு எடுத்துரைத்த பிறகும், அந்த அடையாளத்திலிருந்து அவர்கள் பின்வாங்கி, அவர் சிந்தனைகளைப் பகுத்தறிதலில் மட்டுமே தீர்க்கதரிசியாயிருக்கிறார் என்றும், அவர் வார்த்தையில் நிலைத்திருக்கும் தீர்க்கதரிசி அல்லவென்றும் கூறுவது மிகவும் வெறுக்கத்தக்க அவிசுவாசமாகும். ஓ, அவிசுவாசியே, நீ வார்த்தையை விசுவாசிப்பதற்கென உன் கவனத்தைக் கவரும் வதற்கான அடையாளமே அது என்பதை உன்னால் காண முடிய வில்லையா? வார்த்தையே முக்கியம் வாய்ந்தது. உங்களை வார்த் தைக்கு நடத்துவதற்கே அந்த அடையாளம். 92. ஆனால் மனிதன் எப்பொழுதும் அவனுடைய வழியிலேயே சென்று கொண்டிருக்கிறான். இயேசு இவ்வுலகில் வந்தபோது, அவர் மனிதரை சுகமாக்கும் அற்புதங்களின் மூலமாகவும், தண்ணீரை திராட்சரசமாக மாற்றியும், அப்பங்களையும் மீன்களையும் அதிகரிக்கச் செய்தும் அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தார். ஆனால் அவர்களுடைய கருத்துக்களுக்கு முரணான வார்த்தையை அவர் பிரசங்கித்து, உண்மையான உபதேசங்களை அவர்களுக்கு முன்னால் வைத்த போது, அவர்கள் அவரை விட்டு தூர விலகிச் சென்றனர். அவ்வாறே சங்கை பிரான்ஹாம் முதலில் காட்சியில் தோன்றின போது, ஆயிரக்கணக்கானோர் தவறாமல் சுகம் பெற்றனர். எதுவுமே அவருக்கு முன்னால் நிற்க முடிய வில்லை. அதன்பிறகு அவர் வார்த்தையைப் போதிக்கத் தொடங்கினார். தேவன் அவரை ஒரு செய்தியுடன் அனுப்பியிருந்தார். ஆனால் அந்த செய்தியோ ஸ்தாபன சபைகளின் செய்தியுடன் முற்றி லும் வேறுபட்டதாயிருந்தது. அதற்காக அவர் தள்ளி வைக்கப்பட்டடார். ஆனால் தேவன் உண்மையுள்ளவராகவே இருந்து வருகிறார். அவருடைய தீர்க்கதரிசிகளை விசுவாசிப்பவன் எவனும் செழிப்பான். 1963ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி முதல் 24ம் தேதி வரைக்கும் இந்த மனிதன், அக்கினி ஸ்தம்பத்திலிருந்து பேசின ஒரு சத்தத்தின் மூலம் நேரடியான வெளிப்பாட்டைப் பெற்றார். அது ஏழு முத்திரைகளைக் குறித்த சரியான, பிழையற்ற வியாக்கியானமாகும். இந்த செய்திகள் ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. விரைவில் அவை புத்தக வடிவில் வெளியாகும் (இந்த செய்தி தற்பொழுது ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளன. இப்புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: வில்லியம் பிரான்ஹாம் நற்செய்தி சங்கம், 7 டாக்டர் சுப்பராயன் நகர் முதல் தெரு, கோடம்பாக்கம், சென்னை - 600 024 - தமிழாக்கியோன்). 93. அவருடன் பேசி, இதன் அர்த்தத்தை அவருக்கு விளக்கித் தந்த அந்த சத்தம், விளக்கப்படாத வெளிப்பாட்டை அன்பான சீஷனான யோவானுக்கு அளித்த அதே சத்தமே. இந்த தரிசனம் தவறு என்று கூறி அதை மறுதலிக்கத் துணிவு கொள்பவருக்கு நாங்கள் கூறுவது என்னவெனில், "அவர் தீர்க்கதரிசி என்பதற்கு வேறென்ன அத்தாட்சி வேண்டும்? பிரமாணங்களை வகுத்துள்ள வேத வாக்கியங்களுக்கு அப்பால் உங்களால் செல்ல முடியாது. எல்லாமே நிறைவேறி விட்டது. எதுவுமே குறைவுபடவில்லை. உங்களுக்கு ஒரு அடையாளம் தேவையானால், அதைக் கேளுங்கள். இஸ்ரவேலில் இருந்த அதே அவிசுவாசம் இன்றைக்கும் உள்ளது என்பதை அது நிரூபிக்கின்றது. அக்காலத்தில், ஜனங்களின் சிந்தனைகளை அறிகின்ற அடையாளத்தை ஆதாரமாகக் கொண்டு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட போது. அந்தகாரப்பட்ட பரிசேயர்கள் அந்த அடையாளத்தை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு, மற்றுமொரு அடையாளத்தைக் கேட் டனர். அவர்கள் கர்த்தரை சிலுவையில் அறைந்த போது, தேவனிடத்திலிருந்து அதற்கான கடுமையான தண்டனையைப் பெற்றனர். தீத்து என்பவன் மிகவும் கொடூரமாக அந்த பட்டினத்தை அழித்து போட்டு, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களின் இரத்தம் சாக்கடைகளை நிரப்பினது; சிலுவையில் அறையப்பட்டவர்களின் சிலுவைகள் நாடு முழுவதிலும் நிறைந்து காணப்பட்டன. “உன்னைத் தள்ளி விடுகிறவன், என்னைத் தள்ளிவிடுகிறான்" என்பது தற்காலத் திலும் சர்வ வல்லமையுள்ள தேவனின் வார்த்தையாக உள்ளது. வில்லியம் பிரான்ஹாமின் வாழ்க்கையில் நேர்ந்த மகத்தான அனுபவங்கள் கணக்கற்றவைகளும் வேத பூர்வமாகவும் உள்ளபடியால், அவைகளின் பேரில் நாம் கவனம் செலுத்தாமல் கடந்து செல்வது கூடாத காரியம். அவர் ஒஹையோ நதியில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த அந்த சம்பவத்தை நாம் எடுத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் அக்கினி ஸ்தம்பம் இறங்கி வருவதை 4000 பேர் கண்டனர். அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் அவருடன் பேசி, "கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு யோவான் ஸ்நானன் முன்னோடியாயிருந்தது போல, உன் செய்தி (உலகமோ அதைப் புறக்கணிக்கிறது) கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாயிருக்கும்" என்றது. யோவான் யோர்தானில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த அந்த சம்பவத் துடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள். யோவான் ஒரு தீர்க்கதரிசி. வார்த்தை எப்பொழுதுமே தீர்க்கதரிசியிடமே வரும். அங்கு அவர் (வார்த்தை) மாம்சத்தில் வெளிப்பட்டவராய் வந்தார். முன்னோடியும் ராஜாவும் முக முகமாய் சந்தித்தனர். விரைவில் கிறிஸ்து தமது நோக்கத்தை நிறைவேற்ற தம்மை வெளிப்படுத்தினார், யோவான் சிறுகத் தொடங்கினான். இந்த தீர்க்கதரிசி 1933ம் ஆண்டில் தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுத்த சம்பவத்தை இப்பொழுது எண்ணிப் பாருங்கள். அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார், ஆனால் ஜனங்களின் மத்தியில் அவர் அவ்வாறு அறியப்படவில்லை. இப்பொழுது அதே வார்த்தை மறுபடியும் தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறது, ஏனெனில் வார்த்தை எப்பொழுதுமே தீர்க்கதரிசியினிடத்தில் தான் வரும். பவுலுக்கு பிரத்தியட்சமாகி அநேகரால். காணப்பட்ட அதே ஒளி மீண்டும் இப்பொழுது பிரத்தியட்சமாகி அநேகரால் காணப்பட்டது. பவுல் மட்டுமே அதிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டது போல, வில்லியம் பிரான்ஹாம் மட்டுமே அந்த சத்தத்தைக் கேட்டார், ஆனால் அந்த சத்தம் உரைத்ததை அவர் வெளிப்படையாய் கூறினார். வெளிப்படுத்தப்பட்ட அந்த வார்த்தை தன் மணவாட்டியை எடுத்துக் கொண்டு செல்ல விரைவில் மறுபடியும் வரும். செய்தி அந்த நோக்கத்திற்காகவே அளிக்கப்பட்டுள்ளது. அது கடைசி காலத்து ஜனங்களை ஆயத்தப் படுத்துவதற்காகவே. 94. இந்த தேவனுடைய தீர்க்கதரிசி சபை காலங்களைக் குறித்து பேசின போது (அதுவும் புத்தக வடிவில் வெளிவர இருக்கிறது) (குறிப்பு: சபை காலங்களின் புத்தகம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: வில்லியம் பிரான்ஹாம் நற்செய்தி சங்கம், 7. டாக்டர் சுப்பராயன் நகர் முதல் தெரு, கோடம்பாக்கம், சென்னை - 600 024 - தமிழாக்கியோன்), அவர் கற்பித்த அனைத்தும் உண்மையில் ஆவியானவரால் கற்பிக்கப்பட்ட வையே என்பதற்கு அறிகுறியாக ஒரு அடையாளத்தைக் காண் பிக்க வேண்டுமென்று தேவனிடம் வேண்டிக் கொண்டார். அப்பொழுது பதினைந்து நிமிடங்களுக்கு. அந்த அக்கினி ஸ்தம்பம் இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில் என்னுமிடத்தில் அமைந்திருந்த பிரான்ஹாம் கூடாரத்தின் சுவற்றில் தோன்றினதை 300 பேர் கண்டனர். 95. புறஜாதிகளுக்கு அளிக்கப்பட்ட இந்த கடைசி காலத் தீர்க்கதரிசி ஐரிஷ், சிகப்பு இந்தியர் வம்சத்தில் தோன்றின அமெரிக்கர் என்பது அநேகருக்கு வியப்பாயுள்ளது. அவருடைய பூர்வீகத்தைக் குறித்து வேதத்தில் ஒன்றும் கூறப்படாமல் போனாலும், அவர் இந்த அமெரிக்க நாட்டில் பிறந்ததைக் குறித்து வேதப்பூர்வமான சான்று உள்ளது. கர்த்தருடைய வருகையின் தொடர்பாக கூறப்பட்டுள்ள சகரியா 14:6-7 வசனங்களில், "அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும். ஒரு நாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்" என்று உரைக்கப்பட்டுள்ளது. சூரியன் மேற்கில் மறைகின்றது, அது கிழக்கில் உதிக்கின்றது. நீதியின் சூரியன் கிழக்கிலுள்ள பாலஸ்தினாவில் எழும்பினார். சபையானது எருசலேமில் பிறந்தது. அன்று முதல் ஒவ்வொரு காலத்திலும் சுவிசேஷமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டே வந்துள்ளது. மேற்கு திசையை நோக்கி உண்டான இந்த நகருதலில், கடைசி மூன்று காலங்கள் கவனத்தை மிகவும் கவரும் காலங்களாக அமைந்துள்ளன. சீர்திருத்தக் காலமாகிய சர்தை சபை காலத்தில் அது ஏற்கனவே மேற்கு ஐரோப்பாவை அடைந்திருந்தது. பிலதெல்பியா சபை காலத்தில், அது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து, இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து பிரிட்டனை அடைந்தது. கடைசி காலமாகிய இந்த லவோதிக்கேயா சபையின் காலத்தில், அது சுழன்று அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி அமெரிக்காவை அடைந்துவிட்டது. இப்பொழுது அமெரிக்கா, முன்காலத்தில் ஐரோப்பா இருந்தது போல், மிகவும் முக்கியமான அரணாகவும், சுவிசேஷத்தை மற்ற இடங்களுக்கு பரப்புகின்ற ஒரு இடமாகவும் அமைந்துள்ளது. இப்பொழுது நாம் அமெரிக்கக் கரையை விட்டுப் புறப்பட்டுச் செல்வோமானால், நாம் கிழக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்போம். செல்வதற்கு வேறிடம் எதுவுமில்லை. சாயங் காலத்திலே வெளிச்சம் என்பது அமெரிக்காவிலுள்ள வெளிச்சத்தைக் குறிக்கின்றது. எனவே தீர்க்கதரிசி - தூதன் இந்த நாட்டிலிருந்து வரவேண்டும். அவருடைய பெயர் அறியப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, அது தீர்க்கதரிசனத்தில் உரைக்கப்பட்டது. கர்த்தருடைய வருகைக்கு முன்பு வில்லியம் பிரான்ஹாம் என்றும் பெயர் கொண்ட தீர்க்கதரிசி தோன்றுவார் என்றும், அவருடைய ஊழியத்தின் நிமித்தம் அவர் அமெரிக்காவின் மேற்கு கரையில் அறியப்படுவார் என்றும் தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்பட்டது. அவருடைய ஊழியம் மிகச் சிறப்பாக மேற்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டதென்பது வினோதமாக இருந்தாலும், அது உண்மையே. அநேக மகத்தான அற்புதங்கள் அங்கு நடக்க தேவன் அனுமதித்தார். இன்றைக்கும் கூட அவர் இந்தியானாவிலிருந்து புறப்பட்டு அதற்கும் மேற்கு திசையிலுள்ள ஒரு இடத்துக்கு சென்றுவிட்டார். மேற்கிலுள்ள ஒரு இடத்தில் வசிப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். 96. இந்த மனிதனின் ஊழியம் இக்காலத்திற்கு எலியாவின் ஊழியமாக அமைந்துள்ளதால், போதிய வேதப்பூர்வமான விவரணத்தை நாம் நிச்சயம் காணலாம். எலியாவின் சுபாவத்தை பரிசீலனை செய்து பாருங்கள். அவனுடைய இயல்பு வனாந்தரத்தில் தங்கியிருக்கும் ஒரு மனிதனின் இயல்பாகும். அவன் வாழ்ந்த காலத்தில், அவன் சொற்புரட்டுபவனாகவோ அல்லது அரசியலில் தொடர்பு கொண்டவனாகவோ இருக்கவில்லை. அவன் தேவனுக்கென்று தன்னை அர்ப்பணித்து, தைரியமுள்ளவனாகவும், கபடமின்றி பேசுகிறவனாகவும் இருந்தான். தேவனிடமிருந்து அவனுக்குக் கிடைக்கப் பெற்ற செய்திக்கு புறம்பே வேறெதையும் அவன் கூறினதாகத் தெரியவில்லை. அவன் நாட்களில் இருந்த மார்க்க சம்பந்தமான ஒழுங்கைச் சேர்ந்த தீர்க்கதரிசிகளிடமிருந்து தன் னைப் பிரித்துக் கொண்டான். அவன் சீர்குலைந்த பெண்மையை அருவருத்து, அவனுடைய காலத்தில் இருந்த பெண் தீர்க்கதரிசியை (கள்ள மார்க்கங்களை) எதிர்த்து நின்றான். அதன்பிறகு இந்த ஊழியம் வில்லியம் பிரான்ஹாமின் மேல் வந்த போது. எலியாவின் வாழ்க்கையில் காணப்பட்ட அதே மனப்பான்மையும் அவனுக்கு உண்டான எதிர்ப்புகளும் இவர் வாழ்க்கையிலும் காணப்பட்டன. இதை நாம் யோவான் ஸ்நானனின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்ப்போமானால், எலியாவிடம் காணப்பட்ட அதே சுபாவமும், தன்மைகளும், நடத்தையும் இவனிடமும் காணலாம். கேட்பதற்கு செவியும் காண்பதற்கு கண்ணும் இருக்குமானால், இன்று எலியாவின் ஊழியத்தைக் கொண்டுள்ள இந்த மனிதனைக் கண்டுபிடிப்பது கடினமேயல்ல. ஜீவனுள்ள தேவனுடைய ஊழியக்காரனாகிய இந்த மனிதன் வில்லியம் பிரான்ஹாம் கொண்டுள்ள இயற்கையானதும் இயற்கைக்கு மேம்பட்டதுமான உறுதிப்படுத்தும் அடையாளங்களைக் கொண்டிருக்கும் மனிதன் வேறு எவருமே இல்லை. மூட நம்பிக்கை கொண்டுள்ள ஜனங்கள் ஒரு விசித்திரமான உண்மையில் அதிகமாக நிலைகொள்கின்றனர். ஆனால் தள்ளி விடக் கூடாத சில விசித்திரமான உண்மை உண்டு. இருப்பினும் அதற்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்துக்கு மிஞ்சின அர்த்தத்தையும் அதற்கு நாம் கொடுத்து விடக் கூடாது. இந்த மனிதனின் குடும்பப் பெயர் பிரானாம் (Branam) என்பதாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அவருடைய தந்தை அந்த பெயருடன் 'H' என்னும் எழுத்தை சேர்த்து அதை பிரான்ஹாம் (Branham) என்பதாக செய்து விட்டார். சாதாரணமாக இந்த மாற்றத்துக்கு சிறப்பான கவனம் அளிக்கப்பட்டிருக்காது. ஆனால் இன்றைக்கு ஆவிக்குரிய முயற்சியில், 'Ham' என்பதில் முடிகின்ற பெயர்களை இருவர் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது - கிரகாம் (Graham) மற்றும் பிரான்ஹாம் (Branham). இவர்கள் இருவரும் தங்களின் பிரத்தியேகமான ஊழியத்தில் மிகவும் தலைசிறந்து விளங்குகின்றனர். நாம் லோத்தின் காலத்திற்கு ஒத்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இப்பொழுது நாம் ஒரு வினோதமான ஒற்றுமையைக் காணலாம். குமாரனைப் பெற்றுக் கொள்வதற்கென ஆபிராம் (Abram) என்னும் பெயர் ஆபிரகாம் (Abraham) என்று மாற்றப்பட்டது. அவருடைய ஊழியத்தை பாருங்கள். ஆபிரகாம் தன் காலத்தில் தீர்க்கதரிசியாக விளங்கினது போல, இவரும் இக்காலத்து தீர்க்கதரிசியாக விளங்குகிறார். எனவே சங்கை பிரான்ஹாம், தேவன் என்ன செய்யவிருக்கிறார் என்பதைக் குறித்த வெளிப்பாட்டை பரிசுத்த ஆவியானவரின் மூலம் பெற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் சங்கை கிரகாம் எங்கே? அவர் பெயர் கிறிஸ்தவ சபைகளுக்கும் இன்னும் மற்ற சபைகளுக்கும் சென்று தங்கள் ஜீவன் தப்ப ஓடும்படிக்கு அவர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார். இது ஒற்று மையை (coincidence) விட சற்று அதிகமானதே. இது உண்மை யானது. 97. லோத்தின் காலத்தைக் குறித்த கருத்தை மேலும் தொடர்ந்து பாருங்கள். பகலின் உஷ்ண வெயிலில் தேவன் முதலாவதாக தரிசனமானார். அவ்வாறே 1933ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு உஷ்ண மான ஞாயிற்றுக்கிழமையன்று, அக்கினி ஸ்தம்பம் முதலாவதாக தோன்றி, அதை ஆயிரக்கணக்கானோர் கண்டனர். அப்பொழுது தேவன் என்ன செய்யவிருக்கிறார் என்பதைக் குறித்து அவருக்கு முதலாவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது சங்கை கிரகாமைக் குறித்து வேள்விப்படுவதற்கு நீண்ட காலம் முன்பே நிகழ்ந்தது. ஆனால் லோத்தை எச்சரிக்க தூதர்கள் மாலை வேளையில் அவனிடம் சென்றது போல, இப்பொழுதுள்ள சாயங்கால வேளையில் இந்த மனிதன் கிரகாம், கர்த்தர் சீக்கிரமாக வரப் போகிறார் என்றும், தங்கள் பாவத்தை விட்டு மனந்திரும்பி ஜீவன் தப்ப ஓடிப் போக வேண்டுமென்றும் மனிதரை எச்சரிப்பதற்காக தோன்றியுள்ளார். 98. லோத்தின் காலத்தில் "பாவம் நிறைந்த மக்களை எச்சரித்த மற்ற தூதனுக்கு இன்று எடுத்துக்காட்டாயுள்ள மனிதன் யார்? என்று யாராகிலும் ஒருவர் கேட்க வகையுண்டு. லோத்தின் காலத்தில் இம் மூவரும் ஒரே நிலப்பகுதியில் இருந்தபடியால், மூன்று அமெரிக்கர்கள் - பிரான்ஹாம், கிரகாம், ராபர்ட்ஸ் என்ப வர்களுக்கு - இவர்கள் எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர். ஆனால் இந்த மூன்று பெயர்களில் உலகம் இருவரை மட்டும் நன்கு அறிந்துள்ளது என்பதை கவனிக்கவும் - கிரகாம், ராபர்ட்ஸ் எனப வர்களை. இவர்கள் இருவருமே வானொலி, தொலைகாட்சி போன்ற வைகளில் தோன்றுகின்றனர். ஆனால் பிரான்ஹாம் எங்கே? தீர்க்கதரிசி என்னும் முறையில் (அதற்கு ஆபிரகாம் முன்னடையாளமாய் இருக்கிறான்). அவர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுடன் மலைப் பிரதேசத்தில் இருந்து கொண்டு, வார்த்தையை சரிவர வியாக்கியானம் செய்து, மணவாட்டியை வார்த்தை மணவாட்டியாக்கி, அவள் மீண்டும் விசுவாசமுள்ள மனைவியாய், பரிசுத்தமாக்கப்பட்ட சபையின் பாகமாகத் திகழும் மகத்தான கிரியைகளை வெளிப்படுத்து வதற்கென, அவர் தேவனிடமிருந்து வெளிப்பாடுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். மேற்கூறியது இறுமாப்புள்ளதாக தொனிக்கக் கூடும். ஒரு மனிதனை அத்தகைய உயர்ந்த நிலைக்கு உயர்த்தி மற்றவர்கள் இதைக் காட்டிலும் முக்கியம் குறைந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூற யாருக்குமே உரிமையில்லை என்று வாதாடுவதற்கு வகையுண்டு. அப்படியல்ல. இது தேவனுடைய இராஜாதிபத்திய மாகும். தேவனே இதைத் தெரிந்து கொண்டார், நாம் அல்ல. இதை சற்று சிந்தித்துப் பாருங்கள். எந்த ஒரு காலத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய தீர்க்கதரிசி (major prophet) இருக்க வில்லை என்பது உண்மையல்லவா? சத்தியத்தை வெளிப்படுத்த தேவன் ஒருக்காலும் பல மனிதர் கொண்ட ஒரு குழுவினரை உபயோகிக்கவில்லை என்பது உண்மையல்லவா? இன்றைக்கு அவ்வாறு நடந்து கொண்டிருப்பதாக மக்கள் நம்மை நம்ப வைக்க முயல்கின்றனர் அல்லவா? அப்போஸ்தலர்களுக்கும் கூட குழுவினர் முறையில் வெளிப்பாடு அளிக்கப்படவில்லை. பேதுரு முதலாம் தீர்க்கதரிசியாகவும் பிரதிநிதியாகவும் விளங்கினான். அதன்பிறகு பவுல் வந்தான். பவுல் மட்டுமே புறஜாதிகளுக்கு தீர்க்கதரிசி - தூதனாக இருந்தான். யோவானைத் தவிர மற்றனைவரும் மரித்த பிறகு, யோவான் அந்த நேரத்தில் தீர்க்கதரிசியாக விளங்கினான். இது சரியென்பது உறுதி. இந்த காலத்திலும் தேவன் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டிருக்க வேண்டும். அவர் மூலம் மட்டுமே, சரியான உறுதிப்படுத்துதலின் மூலம், தேவனுடைய வார்த்தையின் சரியான வியாக்கியானம் கிடைக்கப் பெற்று, இக்கடைசி காலத்தில் அது சரியாக பொருத்திக் காண்பிக்கப்படும். 99. நமது மத்தியில் ஒரு தீர்க்கதரிசி எழும்ப வேண்டுமென்றால், அவர் மற்றொரு வேதாகமத்தை எழுதலாமே என்று விவாதிக்க வகையுண்டு. இதை சற்று சிந்தித்து பார்ப்போம். வேதாகமத்தை எழுதின அதே பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது மறுபடியும் ஒரு மனிதனில் இருந்து கொண்டு வேதாகமத்தை வெளிப்படுத்தி தருகிறார். அது உண்மை. அந்த ஆவியானவர் மற்றொரு வேதாகமத்தை அவர் சொல்லி எழுதக் கூறினால் (dictate), அது ஏற்கனவே எழுதப்பட்ட வேதாகமமாகவே முற்றிலும் அமைந்திருக்கும். அது அவ்வாறே இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு வார்த்தையும் கூட மாறக் கூடாது - எழுத்தின் மேலுள்ள ஒரு புள்ளி அல்லது கோடும் கூட. எனவே மற்றொரு வேதாகமத்தை எழுத ஆலோசனை கூறுவது அறிவீனமாகும். தங்களுக்கு வார்த்தையைக் குறித்த வெளிப்பாடு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும் மூடத்தனமே, ஏனெனில், வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருவது மட்டுமல்ல, அந்த காலத்திலுள்ள மக்களுக்கு அளிக்கப்படுவதற்கென, வேதத்தின் வெளிப்பாடும் தீர்க்கதரிசியிடமே வருகின்றது. அந்த வார்த்தையின் வெளிப்பாட்டின் பேரில் தான் நாம் சிரத்தை கொண்டிருக்கிறோம். வேதாகமத்தை எழுதின அதே ஆவியானவர் அதற்கான சரியான விளக்கத்தையும் அளிக்கிறார். முன் கூறப்பட்ட இந்த சொற்கள் நம்மை ஒரு முக்கியமான தீர்மானத்துக்கு கொண்டு செல்கின்றன. அதாவது, பவுல் முதலாம் சபையின் காலத்தில் பேசின போது அது எவ்விதம் தேவனுடைய சத்தமாக இருந்ததோ, அதேவிதமாக இந்த மனிதனின் சத்தமும் நமக்கு தேவனுடைய சத்தமாக இருக்கும். 1 தெச. 2:13ல் பவுல், "ஆகையால், நீங்கள் வேத வசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக் கொண்ட போது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக் கொள்ளாமல், தேவ வசனமாகவே ஏற்றுக் கொண்டதினாலே, நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம். அது மெய்யாகவே தேவனுடைய வசனந்தான்' என்கிறான். இந்நாள் வரைக்கும் காலாகாலங்களில் மறைபொருளாயிருந்த இரகசியங்களை வெளிப்படுத்த தேவன் ஒரு தீர்க்கதரிசியை எழுப்பினார் என்பதையும், இந்த சந்ததிக்கு அவருடைய சத்தம் தேவனுடைய சத்தமாயுள்ளது என்பதையும் மறுதலிப்பதென்பது, பவுலின் நாட்களில் அவனுடைய சத்தம் தேவனுடைய சத்தமாகத் திகழ்ந்தது என்பதை மறுதலிப்பதாகும். இது தீர்க்கதரிசியை மக்களுக்கு தேவனாக்கி விடுவதில்லை. ஆனால் இது யாத். 4:16ல் "நீ அவனுக்குத் தேவனாயிருப்பாய் என்று உரைக்கப்பட்டுள்ளதை தெளிவுபடுத்துகிறது. மோசே ஆரோனுக்கு தேவனாயிருந்தான், ஏனெனில் தேவனுடைய வார்த்தை மோசேயின் மூலம் ஆரோனிடம் வந்தது. ஆரோன் தீர்க்கதரிசியின் உத்தியோகத்தை பெற்றிருக்கவில்லை (அது தேவனிடமிருந்து வருகின்ற வரம்). எனவே வெளிப்பாட்டைப் பெற அவன் தேவனிடம் நேரடியாகச் செல்ல இயலவில்லை. மோசே அதைச் செய்தான், ஆரோன் அதை ஏற்றுக் கொண்டான். இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. வெளி. 10:6ல் தேவன் நம்மிடம், காலகாலங்களில் மறைந்துள்ள தேவரகசியங்களை ஒரு தீர்க்கதரிசி வெளிப்படுத்துவார் என்றும், அதன் விளைவாக முத்திரிக்கப்பட்டிருந்த ஏழு இடி முழக்கங்களின் இரகசியம் வெளிப்படும் என்றும் உரைத்துள்ளார். அப்படியானால், நாமும் கூட ஒரு தீர்க்கதரிசியின் முலம் தேவனுடைய சத்தத்தை கேட்க வேண்டியவர்களாய் இருக் கிறோம். அது அந்த விதத்தில் நமக்கு தேவனாக அமைந்திருக்கும். ஆனால் அது அங்கு முடிவடைந்து விடுகிறது. அதற்கு மேல் நாம் செல்லக்கூடாது, ஆனால் அதே சமயத்தில் அதற்கு குறைவாகவும் நாம் எண்ணத் துணிச்சல் கொள்ளக் கூடாது. இதை இன்னும் தெளிவுபடுத்த யோவான் 10:34-36 வசனங்களையும் சங். 82:6 ஐயும் ஒப்பிட்டுப் பாருங்கள். "நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடம் வருகிறது. அது வேறெந்த வழியிலும் வருவதில்லை. பவுல் கொரிந்தியர்களுக்கு இதை நன்றாக விளக்கியிருக்கிறான். 100. அவன், "தேவ வசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது?" என்று கேட்கிறான் (1 கொரி. 14:36). தேவனுடைய வார்த்தை எப்பொழுதுமே தீர்க்கதரிசியினிடம் வருகிறது, அதன்பிறகு தீர்க்கதரிசியின் மூலமாக அது ஜனங்களிடம் வருகிறது. எனவே ஜனங்களுக்கு அளிப்பதற்கென தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக் கொள்பவர்களை தேவர்கள் என்று தேவன் அழைக்கிறார். இந்த விதத்தில் தீர்க்கதரிசிகள் மக்களுக்கு தேவனாகவே இருந்து வந்தள்ளனர். தீர்க்கதரிசியாகிய சாமுவேல் ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டபோது தேவன், "அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, என்னைத் தான் தள்ளினார்கள்" என்றார் (1 சாமு. 8:7). சாமுவேல், அவனிடம் வந்த வார்த்தையின் நிமித்தம், ஜனங்களுக்குத் தேவனாயிருந்தான். இது மறுபடியும் உபாகமம் 18ம் அதிகாரத்துக்கு செல்லுகிறது. அங்கு ஜனங்கள், அவர்கள் மரித்துப் போவார்கள் என்ற பயத்தினால், தேவனுடன் நேரடியாக ஈடுபாடு கொள்ள மறுத்தனர். எனவே தேவன் அவர்களுக்கு தீர்க்கதரிசிகளைக் கொடுத்தார். இந்த தீர்க்கதரிசிகள், தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தின் மூலம் ஜனங்களுடன் ஈடுபட்டதன் விளைவாக தேவனை ஜனங்களிடம் கொண்டு வந்தனர். 101. இதை இன்னும் தெளிவாக்க, இயேசுவின் மூன்று பட்டப் பெயர்களை ஒப்பிட்டுப் பாருங்கள். அவர் மனுஷகுமாரன், தேவ னுடைய குமாரன், தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்டார். அவர் தீர்க்கதரிசியாயிருந்த காரணத்தால், தம்மை தொடர்ச்சியாக மனுஷகுமாரன் என்று அழைத்துக் கொண்டார். எசேக்கியல் தன்னை 'மனுபுத்திரன்' அல்லது 'மனுஷகுமாரன்' என்று அழைத்துக் கொள்வதை நாம் காண்கிறோம். எசேக்கியல் தீர்க்கதரிசியாயிருந்தான். இயேசுவும் தீர்க்கதரிசியாயிருந்தார். அவர் உயிரோடெழுந்து மகிமையடைந்து இன்றைக்கு தேவனுடைய குமாரனாயிருக்கிறார். அவர் இன்னும் தாவீதின் குமாரனாக ஆகவில்லை. இப்பொழுது லூக். 17:30ஐ கவனியுங்கள். இதைக் காணத் தவற வேண்டாம். "மனுஷ குமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். எந்த நாளில்? சோதோமின் நாளில் இருந்தது போன்ற ஒரு நாளில். சோதோமின் நாளில் நடந்தது என்ன? தேவன் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும், குமாரனாகிய ஈசாக்கு (கிறிஸ்துவுக்கு முன்னடையாள மானவன்) வருவதற்கு முன்பு, மாம்சத்தில் தீர்க்கதரிசியாகத் தோன்றவில்லையா? இயேசு இந்தக் கடைசி காலத்தில் மீண்டும் மனுஷகுமாரனாக தம்மை வெளிப்படுத்த வேண்டுமானால், "மனுஷ குமாரன் என்னும் பட்டப் பெயர் அவருடைய தீர்க்கதரிசி ஊழியத்தைக் குறிக்குமானால், தேவ ஆவியானவர் மீண்டும் வார்த்தையினால் உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசிக்குள் வாசம் செய்து ஜனங்களிடம் வரவேண்டியது அவசியம். அந்த தீர்க்கதரிசி சபையை வரப் போகின்ற குமாரனிடம் (இயேசு) சுட்டிக் காட்டுவார். எனவே, தேவன் தமது வார்த்தைக்கு உண்மையுள்ளவராக இருக்க வேண்டும் மென்றால் அவர் நமக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்ப வேண்டும். நாம் ஒரு தீர்க்கதரிசியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். எலியாவின் வருகையை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். அது அவ்வளவு தெளிவாயுள்ளது. அது முற்றிலும் உண்மை. மேலும் இதை உங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன், அதாவது வெவ்வேறு கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் கொண்ட குழுவினரால் தேவனுடைய மக்கள் அவருடைய வருகைக் கென பூரணப்படுத்தப்பட்டு ஒன்றாக சேருவதில்லை. அது எப்பொழுதுமே ஒரே நபராயிருக்கும். ஒருவன் மட்டுமே (மோசே) தேவனுடைய வார்த்தையுடன் வந்தான். ஒருவன் மட்டுமே (யோவான்) இயேசுவின் வருகைக்கு முன்பு வந்தான். மறுபடியும் ஒரே ஒரு தீர்க்கதரிசி மட்டுமே வார்த்தையைக் கொண்டவராய் வார்த்தை ஊழியத்துடன் வருவார். அது ஜனங்களை உலகத்தினின்று குலுக்கி வேறுபடுத்தி அவர்களை நீதியில் நிலை நாட்டும். இந்த அறிவிப்புகள் சரியா என்று அறிய வேண்டுமானால், நீங்கள் சுற்றிலும் நோக்கி, "வார்த்தையின் பேரில் யார் யாருடன் ஒத்துப் போகின்றனர்? என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ஜனங்கள் ஒரே சிந்தையுடையவர்களாய் இருக்கவில்லை என்பது தெளிவாகின்றது. நமக்கு மறுபடியும் தேவனுடைய சிந்தை அவசியமாயுள்ளது. நமக்கு மறுபடியும் "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பது அவசியமாயுள்ளது. நமக்கு உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி அவசியம். 102. சிலர் செய்யும் முக்கியமான வாக்குவாதத்தைக் குறித்து விமர்சனம் செய்யாமல் இவ்விளக்கக் கட்டுரையை முடிப்பது பொருத்தமானதாய் இராது. தேவன் ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் வல்லமையான கிரியைகளின் மூலம் தம்மை வெளிப்படுத்து வதில்லை என்றும், ஆவியின் கனிகளின் மூலமாகவே தம்மை வெளிப்படுத்துகிறார் என்றும் சிலர் வாதாடுகின்றனர். தேவனுடைய வார்த்தையின்படி இவ்விரண்டுமே அவசியம் என்பதே எங்களுடைய உரிமையான கருத்தாகும். இது பவுலின் வாழ்க்கையில் வெளிப்பட்டது. அவன் வல்லமை, கனி இவ்விரண்டையும் கொண்டிருந்தான். பவுலுக்கு உரியதாயிருந்த இது. இக்காலத்து தேவனுடைய தூதனாக விளங்கும் வில்லியம் பிரான்ஹாமுக்கு உரியதாயுள்ளது. வேண்டுமானால், எல்லோருமே அவருடைய ஊழியத்தைப் புறக்கணித்து அவருக்கு கள்ளன் என்னும் பெயர் சூட்டலாம். ஆனால் அவருடைய பிரதிஷ்டை செய்யப்பட்ட, குற்றமற்ற வாழ்க்கைக்கு முன்பாக இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவிடு பொடியாகி விடும். இவ்வளவு வல்லமை கொண்டு, அதே சமயத்தில் இவ்வளவு தாழ்மையாய் நடந்து கொள்ளும் மனிதன் எவருமே இல்லை. இவர் தன்னை விட மற்றவர்களை அதிகமாக மதிக்கிறார். தன்னுடைய தேவைகளுக்கு மேலாக மற்றவர்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். ஒரு சத்துருவுக்கு எதிராக அவர் வாதாடாமல் எல்லாவற்றையும் தேவனிடம் சமர்ப்பிக்கிறார். அவர் பண விஷயத்தில் ஏமாற்றப்பட்ட போது, பணத்தைக் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்தியதில்லை. அவருக்குக் கொடுக்க தகுதியிருந்த போது, அவர் கொடுக்க மறுத்ததில்லை. எல்லாரும் பெரியவர்களாவதற்கு முயற்சி செய்கின்ற இக்காலத்தில் தேவன் எல்லா மகிமையையும் பெற்றுக் கொள்ள வேண்டுமெனக்கருதி, அவர் சிறியவராகவே இருக்க விரும்புகிறார். அவர் பெரிய திட்டங்களை நாட வில்லை. அவருக்கு நிறைய சொத்துக்கள் கிடையாது. அவர் யாரிடமும் பணம் கேட்பதில்லை. தனக்கு சேவை செய்ய வேண்டுமென்று அவர் ஒரு முறை கூட கேட்டதில்லை. அதற்கு மாறாக அவர், மற்றவர்களுக்கு எவ்வாறு சேவை செய்வது என்று கேட்டிருக்கிறார். அதிக நஷ்டமும் சோகமும் துயரமும் நிறைந்தவராய் தனிமையாய் இருந்த நேரத்திலும் அவர் தன் சிருஷ்டிகரை தொழுது, சேவித்து, தேவனுடைய ஜனங்களை நேசித்தும் மதித்தும் வந்திருக்கிறார். அதிகமான கனிகளே அடிப்படையானது என்று எண்ணி, அவைகளை ஒருவரில் காண எவராகிலும் விரும்பினால், அவர் இந்த தேவனுடைய தீர்க்கதரிசியை அபிமானத்துடன் நோக்கி அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற ஆர்வம் கொள்ளுதல் நலம். 103. முடிவாக, இதைக் கூற விரும்புகிறேன். மேற்கூறினபடி இந்த மனிதன் அப்படிப்பட்டவராயிருப்பாரானால், அவரைப் பின் பற்றுபவர்களில் சிலருக்கு மிதமிஞ்சின அபிப்பிராயங்கள் இருக்க வகையுண்டு. அவர் இதற்கு காரணமாயிருக்க சாத்தியமுண்டு அல்லவா? அது அவ்வாறே உள்ளது. அவருக்கு இல்லாத ஒன்றை இருப்பதாக பாவிக்கும் சிலர் உண்டு. அவர்களுக்காக நாங்கள் அனுதாபம் கொள்கிறோம். அவர்மீது பலமாக குற்றஞ்சாட்டி அவரை அழிக்க நினைக்கிறவர்களும் உண்டு. மோசேக்கு விரோதமாக எழும்பின மிரியாமுக்கும் ஆரோனின் குமாரர்களுக்கும், இஸ்ரவேலின் பிரபுக்களுக்கும் நேர்ந்த கதியை நினைவில் கொண்ட வர்களாய், இவர்களுக்கு என்ன நேரிடுமோவென்று நாங்கள் பயப்படுகிறோம். தேவன் அவருக்கு அளித்துள்ள ஸ்தானத்தை அங்கீகரிக்கப் பிரியப்படாதவர்களை நினைத்து நாங்கள் அதிகம் பயப்படுகிறோம். ஏனெனில் அவர்களுடைய இருதயங்கள் சந்தேகமின்றி அதிகமதிகமாய் இருளடைந்து, அவர்களுடைய வழிகள் பிடிவாதமுள்ளவைகளாகி, முடிவில் அவர்கள் பரிசுத்த ஆவியையே தூஷிக்க நேரிடும். ஆனால் தீர்க்கதரிசியின் நாமத்தினால் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்பவர்களுக்கு, 'அவர்கள் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவார்கள்" என்னும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நாங்கள் நினைவுபடுத்திக் கொள்கிறோம் அவருடைய உத்தியோகத்தின் மூலம் உண்டாகும் பலன் அனைத்தும். சுருங்கக் கூறினால், அவர் மூலம் ஜனங்களுக்குப் பொழிய தேவன் எண்ணிக் கொண்டிருக்கும் அனைத்தும். இவையனைத்தும் விசுவாசத்தினால் உங்களுடையதே.